Tuesday, August 8, 2017

32 தமிழ் அரசர்கள் எங்கே ?

துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் ஆரசுகளை வென்றதாக கூறுகிறது.அப்படியானால் எல்லாளன் காலப்பகுதியில் இலங்கை தீவு தமிழ் அரசர்கள் கையில்தானே இருந்து இருக்க வேண்டும்

கண்டி அரசனும் கிழக்கு இலங்கை வன்னிமைகளும்


16 நூற்றாண்டில போர்த்துகீசர தாக்குகிறதிற்கு கண்டி அரசன் ஒரு team அ ready பண்றான் அந்த team ல இருந்த sub team
1. இடலி தலைமையில #கொட்டியாரம்_மூதூர்
2.செல்லப்பண்டாரம் தலைமையில ஒரு team
3.குமாரப்பண்டாரம் தலைமையில(மட்டக்களப்பு)
4.சண்முகசங்கரி தலைமையில (போரதீவு)
ஆதாரம் - a true and exact description of the great island of ceylon by phillipus baldarustrans இத english ல மொழி பெயர்தவர் pieter brohoer....

Saturday, September 27, 2014

உலக்க


சனம் எல்லாம் இந்தியன் ஆமிக்காரனுக்கு பயத்தில ஊர விட்டு காட்டுலதான் குடிசைகள் போட்டு தங்கி இருந்த காலம் அது..
சேனையூர், கட்டைபறிச்சான் சனம் எல்லாம் ஆத்த கடந்து பெண்டுகள்சேனை காட்டுப்பகுதியத்தான் தங்களுக்கு பாதுகாப்பு எண்டு நினைச்சுக்கொண்டு இருந்தாங்க..
அது அடர்த்தியான பத்தக்காடு!!! உள்ள பூந்தா கண்டு பிடிக்கிறது சரியான கஷ்டம்.. அங்கதான் சனத்திண்ட குடிசைகள் இருந்திச்சு.. அந்த குடிசைகளுக்குள்ள ஓரளவுக்கு சீவனத்த ஓட்ட கூடிய சாமான்இருக்கும், அப்படி காணட்டிக்கு ஊருக்கு உள்ளதான் ஆம்பிள்ளையள் போய் எடுத்து வரணும் ..

ஊருக்குள்ள இந்தியன் வந்து இயக்க பொடியன்களோட கொளுவிட்டான் எண்டா சனத்துக்கு தங்கல் சாப்பாடு எல்லாம் பொண்டுகள் சேனை காட்டுகுள்ளதான்.
இப்படி இருக்கக்குள்ள ராசா அண்ணன்ட கொட்டிளுக்குள்ள(குடிசை) சாப்பாடுச் சாமான் குறைஞ்சு போச்சுது, ரதி அக்காவும் அரள வந்த கிழவியல் மாதிரி ஏச தொடங்கிட்டா.
ஏச்சு தாங்க ஏலாத ராசா அண்ணன் சாப்பாட்டு சமான் தேவையா இருக்கிற அம்பிளையல கூட்டிட்டு ஊருக்கு போய், இருக்கிற தேங்காய் ,மரக்கறி கிழங்கு சாமான் எடுத்திட்டு அப்படியே உரலும் உலக்கையும் எடுத்திட்டு ஆத்த கடக்க வள்ளத்துக்கு பக்கத்தில வந்தாங்க... அப்படியே எல்லாச்சாமனுகளையும் வள்ளத்தில ஏத்திட்டு உலக்கைய தூக்கி தோள் தூக்கி வச்சுக் கொண்டு வள்ளத்த தள்ள வெளிக்கிட்டார்... அப்ப எங்கையோ இருந்து வந்த இந்தியன் ஆமிக்காரண்ட கெலிக்கொப்டர் இவங்கள வட்டமடிக்க தொடங்கிட்டு ..ஒருமாதிரி வள்ளத்த தள்ளி கரைப்பட்டங்க..தீடிர் எண்டு இவங்க நோக்கி ஆமிக்காரன் சுட தொடங்க உலக்க உரல் எல்லாத்தையும் விட்டுத்து காட்டுக்குள்ள ஓடி எப்படியோ தப்பி கொட்டில் இருந்த இடத்திற்கு போய்டாங்க. ஒரு மாதிரி தவண்டு கிவண்டு பத்தைக்கு உள்ளால ஓடி தப்பி போனா ராசா அண்ணன்.... எதோ சினிமா படத்துல வார ஹீரோ மாதிரி ரதி அக்காக்கு புளுகு எல்லாம் விட்டுத்து... எடியே ரதி விட்டுத்து வந்த உலக்கையும் உரலையும் எடுத்திட்டு வாறன் வெளிக்கிட்டார்..
அப்ப கூட ராசா அண்ணன்ட மண்டைக்கு எட்டல்ல தான் உலக்கைய தோள்ள வைச்சுட்டு இயக்கப் பொடியனுகள் மாதிரி கேலிகொப்டருக்கு சுட நின்டதாலதான் அவன் பயத்தில சுட்டான் எண்டு..
மூலக்கதை -மதுரன் -கட்டைபறிச்சான்

Friday, September 26, 2014

இந்தியன் ஆமியும் ஈரப்பாவாடையும்!!!!

இண்டைக்கு சூட்டு இறைச்சி கறி நல்லத்தான் இருக்கு.. இதுக்காகவே கொஞ்ச நாள் இங்க இருந்திடலாம் போல இருக்கு, ஆனா என்ன இந்த இந்தியண்ட பம்பருக்கும் கேலிக்குந்தான் பயாமா இருக்கு, எங்க கிடந்து வாரானுகள் எண்டு தெரியல்ல, கொஞ்ச நாள் ரோட்டி மாதிரி எதோ சாப்பாடு போட்டானுகள் இப்ப பறல் போடுரானுகள்,.......
வந்து அஞ்சு நாள் ஆகிட்டு ஊர விட்டு போயட்டனுவளோ தெரியாது, இன்னும் போகல்ல எண்டுதான் நினைக்கிறன் ...போனானுகள் எண்டா வம்பர் சுத்தாது, நேற்று கணேசபுரத்தில பொடியனுகள் எண்டு நினைச்சு ஆக்கள் இருந்த பக்கம் ரண்டு மூண்டு பரள தட்டி விட்டுருக்கானுகள் . இவனுகளும் சும்மா இருந்தாத்தானே சும்மா சுரண்டுறது பிறகு எங்கையாவது ஓடி ஒளிக்கிறது. சனம்தான் சும்மா கிடந்தது கஷ்டப்படுறது. ஊர விட்டு தொழில விட்டு இங்க கிடந்தது பயந்து வாழ வேண்டி கிடக்கு.
பொறுங்க கொஞ்சம் .... இந்த கோதாரி வேற ....இந்தா வாறாளுகள்..இவளுகள பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கு... நான் சொன்னன் தானே எதோ சொல்லி சிரிச்சிட்டு போறாளுகள், ஏதோ காணாதத கண்ட மாதிரி...
என்ன நடந்த எண்டா .. நேற்று எண்ட மனிசி சொன்னால் வந்து நாலு நாள் ஆகிடப்பா குளிச்சா நல்லம் எண்டு. நான் என்ன செய்ற.... இந்த காட்டுல கிணறா தோண்டுற. வண்டில்ல தானே வந்த... பக்கத்தில இருக்கிற வேப்பம் குளத்தில போய் குளிச்சுட்டு வருவம் எண்டு மாடுகள பிடிச்சு வண்டில பூட்டுறன், அந்த நேரம் பார்த்து இந்த கோதாரி புடிப்பளுகளும் வந்தாளுகள் எண்ட மனிசிய பார்த்து எங்கடி போக போறா எண்டு கேக்க இவளும் குளிக்க வேப்பம் குளத்துக்கு போறம் எண்டால்.. பிறகு என்ன அவளுகளும் வெளிக்கிட்டுதாளுகள்.. 

எல்லாத்தையும் ஏத்திட்டு ராசா மாதிரி ஆசான பலகையில இருந்து வேப்பம் குளதடியில விட்டுத்து பொண்டுகள் எல்லாம் முதல் குளிக்க சொன்னன்.. மாட்ட வண்டில்ல இருந்து அவுக்கமா.. அப்படியே நிப்பட்டித்து இவளுகள் குளிச்ச உடனே நானும் துண்ட கட்டித்து குளிச்சு கொண்டு இருந்தன் அப்பத்தான் அந்த கோதாரி பிடிப்பான் மணியம் கத்திக்கொண்டு வந்தான் யார் எண்டு கேக்குறிங்களா? அவன்தான் கசிப்பு காச்சின எண்டு பொடியனுகள் யாவரியார் சந்தில மொட்ட அடிச்சு போட்டு விட்டானுகளே அவனேதான் .. அவனுக்கு வாசியா போச்சி முடி வெட்டுற காசு மிச்சம்... சரி சரி விசயத்துக்கு வாறன். இந்தியன் ஆமிக்காரன் இங்கால பக்கம்தான் ரோந்து வாராணம் எல்லாரும் ஓடுறாங்க!! நீங்க என்ன குளிச்சுக் கொண்டு நிக்கிறிங்க.. எண்டு அவன் சொல்லி வாய எடுக்கல்ல.. எண்ட இவளும் அவள்ள கூட்டாளி போட்டையளும் வண்டில்ல எறிட்டாளுகள்.. நானும் ஒரு மாதிரி பாஞ்சி ஆசான பலகையில இருக்கிறன் எண்ட மனிசி கேக்கிறாள் என்னப்பா இப்படி வந்திருகிங்க எண்டு.. எனக்கு விசர்த்தனமா கோவம் வந்திட்டு... நீங்களே சொல்லுங்க ஆமிக்காரன் வாரானாம் அந்த நேரத்தில சேட்ட போட்டு கொண்டா நிக்கிற.நல்லா நாலு கிழி குடுத்தன்.அப்பத்தான் அவள் கையில இருந்த ஈரப் பாவாடைய எடுத்து இதையாவது இடுப்புல கண்டுங்கப்பா எண்டால்... அப்பத்தான் இடுப்ப பார்த்தன் பயத்தில ஓடி வந்ததில இடுப்புல கட்டி இருந்தது விழுந்த கூட விளங்கல்ல ..
மூலக்கதை - மதுரன்(கட்டைபறிச்சான்),

Wednesday, August 27, 2014

மதி சுதாவின் தழும்பு -ஒரு சினிமா க்காரனின் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும்



இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அப்பா அம்மா சாயலில்த்தான் பிறக்கிறது. பேச்சுக் கூட தன் சூழலில் எப்படி பேசுகிறார்களோ அப்படித்தான் பேசிக்கொள்ளும்.
அப்படித்தான் சினிமாவும் யார் இயக்குகிறானோ அவன் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும் அந்த படத்தில் இருக்கும்.அப்படி தன் சமுகத்தில் இருக்கும் ஒருவனின் வலியை பதிவு செய்து இருக்கிறார் மதிசுதா.
ஈழத்தில் இருந்து குறும்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் தமிழ் நாட்டு காரர்கள் எடுக்கும் வணிக சினிமா போல சிலர் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மதி சுதா போன்ற சிலர்தான் அவர்களில் சமுகத்தின் சாயலில் படைப்புகளை தருகின்றனர்.
தழும்பு –ஒரு கை,கால்  இயலாத,  சமுகத்தில் வாழ நினைக்கும் முன்னாள் போராளியின் கதை,
படத்தின் முதல் காட்சியே ஒரு கை இயலாதவர் என்ற காட்சிப்படுத்தல் ஊடாக தொடங்குகிறது . இரண்டாவது காட்சியில் யுத்தத்திற்கு பிறகு நம்சமுகத்தின் நிலைமையையும் முன்னாள் போராளிகளை இந்த சமுகம் எப்படி பார்க்கிறது என்பதையும் பதிவு செய்கிறது.
இப்படி காட்சிகள் மாற முன்னாள் போராளி என்பதால் பயத்தில் உதவி செய்ய மறுக்கும் நண்பனும் , சிகரட் தரவில்லை என்பதற்காக வக்கிலாதவன் என்று கேவலப்படுத்தும் சிறுவனை கோவப்பட்டு அடிப்பதும் , பிறகு சிறுவனின் அப்பா வந்து திட்டும் வார்த்தையும் அதன் பிறகான மனது கனத்த காட்சியில் படம் திரையில் மட்டும் மறைந்து போகும், நம் மனதில் இல்லை.
படத்தில் கொஞ்ச வசனம்தான் ஆனால் ஒவ்வொரு வசனமும் இன்னுமொரு படத்திற்கான கதை சொல்லி விடுகிறது.
உதரணமாக – இயக்கத்தில இருந்து வந்தவருக்கு  சமுகத்திண்ட நிலைப்பாடு விளங்காம இருக்கு.
செத்த சனத்திண்ட காச அடிச்சு கடைய போட்டுடுட்டு ஊர ஏமாத்தி பம்மாத்திய பிளைக்கிறாய், கொலைகார நாயே!
இந்த இரண்டு வசனங்களும் போதும் முன்னாள் போராளிகளை இன்றைய நிலைமையை சொல்ல.
அடுத்து பாலமுரளியின் ஒளிப்பதிவும் மதுரனின் படத்தொகுப்பும் குறைகள் சொல்ல முடியாது, முதல் காட்சியே ஒரு குறடும் சாவியும் இருக்கிற மாதிரி தொடங்கும், அத ஒரு ஒளிப்படமா பார்த்தாக்கூட நல்லா இருக்கும், தேத்தண்ணி குடிக்கிற காட்சி, பொடியன்கள அடிச்ச பிறகு ஒவ்வொரு சைக்கிளா விழுற காட்சி ஒவ்வொன்றும் நன்றாக இருக்கிறது.
சன்சிகன் ஒலிப்பதிவு தர்ஷனன் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு கைகொடுத்து இருக்கு.
இந்த படத்த பார்க்கும் போது இந்த கதைய எங்கயோ வாசிச்ச மாதிரி இருக்கே எண்டு ஜோசிச்சு கொண்டு இருந்தன். பிறகு படம் முடியும் போது அது நெற்கொழுந்து தாசனின் மூலக்கதையில் இருந்து எடுக்கப்பட்டது என்று போட்டுடாங்க.
அடுத்தது நடிப்பு -அந்த அந்த கதாபாத்திரங்கள் என்ன செய்யுமோ அத நடிச்ச ஆக்கள் செய்து இருகிறாங்க, மதிசுதாவும் அப்படிதான், கை,கால் ஏலாத ஒரு முன்னாள் போராளியாவே இருந்தார்.
இந்த படத்தின் இயக்குனர் மதிசுதா தன்னுடைய வேலைய ஒழுங்கா செய்து இருக்கிறார் என்பதற்கு நான் மேலே சொன்ன காரணங்களே சாட்சி!
நான் மேல நிறைய இடத்தில முன்னாள் போராளி என்ற வார்த்தைய அதிகம் பயன்படுதிட்டன், உண்மை என்ன எண்டா இந்த சமுகத்தில் எப்படி வாழ்வது என்று இன்னும் போராடி கொண்டு இருக்கிறார்கள் இந்த முன்னாள் போராளிகள்!
முக்கியமா இந்த படத்த சமுக வலைதளங்களில் வீரம் பேசும் புலம்பெயர் போலிப் போராளிகளும், தமிழ்நாட்டு காரர்கள் மாதிரி படம் எடுக்க நினைக்கும் ஈழத்து முயல்வோரும் பார்த்தே ஆக வேண்டும்.