Wednesday, March 28, 2012

பௌத்த பூமியா திரியாய் ???


திருகோணமலை ,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் இருக்கும் ஊர்தான் திரியாய்.இரு மாவட்டகளின் எல்லை கிராமம்.இந்த கிராமம் வரலாற்று பின்னணி கொண்டதும் கூட.இலங்கை இனப்பிரச்சனை காரணமாக பாதிக்க பட்ட கிராமங்களுள் ஒன்று.இதன் சுமந்த வடுக்களை பதிவாக எழுதி முடிக்க முடியாது.இப்படி இருக்கையில் புதிதாக ஒரு பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது.இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பொழுதில் இருந்து இப்பிரதேசம் பௌத்த பூமியாக மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த கிராமம் வயலும் குளமும் சூழ்ந்த பூமி.முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் பூமி.கோணேஸ்வரத்துக்கு நெல் வழக்கும் பூமி.இப்படி எல்லாம் இருப்பதால் என்னவோ ஆசையை துறந்த புத்தனுக்கு இப்பூமி மீது ஆசை வந்து விட்டதோ!!!!
அப்படி என்னதான் இம் மண்ணில் புத்தனுக்கு சொந்தமானது இருக்கிறது என்று நானும் என் நண்பர்களும் பார்க்க புறப்பட்டோம் என் நண்பர்களில் சிலர் அங்கு ஏற்கனவே சென்று வந்ததால் அவர்களின் உதவியையும் பெற்றுக்கொண்டோம் கொஞ்சம் மழை தூறல் கொண்டாட்டமான ஊந்துருளிப்பயணம் . திருகோணமலையில் இருந்து கிட்டத்தட்ட 43km
 (நல்ல வீதிதான், சீனாக்காரன் நல்லாத்தான் பார்த்து பார்த்து ரோடு போட்டு இருக்கான்).
பிரதான வீதியில் இருந்து 2km கிராமத்துக்குள் போய் மறுபடியும் மணல் பாதையால் கொஞ்ச தூரம் போக வேண்டும் .அங்கு  போனால் அங்கு ஒரு ராணுவத்தளம் இருந்தது
(எனக்கு நீட்ட நாட்களாக ஒரு சந்தேகம் ஏன் புத்தன் எங்கு இருந்தாலும் அங்கு கடைசி ஒரு ராணுவ காவலரன் ஆவது இருக்கிறது)
குன்றிற்கு செல்லும் படிக்கட்டுக்கள்
காவல்களைத்தாண்டி சென்றால் அங்கு ஒரு சிறிய குன்று குன்றின் அடிவாரத்தில் பண்டைய கால அகழிகள் காணப்படுகிறது.இது பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டதா அல்லது நீர் தேவைக்கு அமைக்கபட்டதா தெரியவில்லை.அடுத்து மலை குன்றில் ஏறுவதற்கான படிகட்டுகள் அமைக்க ப்பட்டுள்ளது.இந்த  கட்டுகள் பண்டைய காலத்க்ககுரியதாக  இருந்தாலும் சிறிய அளவில் புனரமைக்கப்பட்டு உள்ளது.சிறிய தூரம் சென்றவுடன் ஒரு இடத்தில் எதோ சிங்களத்தில் எழுதி அம்புக்குறி இடப்பட்டு இருந்தது.என்னதான் இருக்கிறது என்று பார்க்க புறப்பட்டோம்.ஒரு சிறிய ஒற்றை அடிப்பாதை சிறு பற்றை காட்டுப்பகுதிக்கு சென்றது அங்கு சென்று பார்த்த ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு இருந்தது அது இதுதான்
கல்வெட்டின் விளக்கம் 

பல்லவ வியாபாரிகளை பற்றிச் சொல்லும் கல்வெட்டு 
இது மூன்று மொழிகளிலும் காணப்பட்டது அருகில் கல்வெட்டையும் காணமுடிந்தது.அப்போதுதான் நினைவுக்கு வந்தது #தபஸ்சு,பல்லுக்க என்ற வியாபாரிகள் கிரிவிகாரையை கட்டி வணங்கிதாக  பத்தாம் ஆண்டு பாடப்புத்தகத்தில் படித்தது.ஆனால் கிரி என்ற விகாரை கட்டபட்டதாக இக்கல்வெட்டு கூறவில்லை.கிரிகண்ட என்ற கோபுரம் கட்டபட்டதாகதான் கூறப்பட்டுள்ளது.சில வேளை இது சைவ ஆலயமாகவும் இருக்கலாம்.பல்லவ நூல் எழுத்துகள் என்றும் மொழி சமஸ்கிருதம் எனவும் கூறப்பட்டு உள்ளது இந்த கல்வெட்டு 7-8ம் நூற்றாண்டுகுரியது என்று அப்பலகையில் போடப்பட்டுள்ளது.ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு பல்லவர் தமிழ் எழுத்துகளில் கல்வெட்டுகளை எழுத ஆரம்பித்து விட்டனர்.அப்படி இருக்கையில் எப்படி இக்கல்வெட்டு சமஸ்கிருத இருக்க முடியும்.அப்படி பௌத்த ஆலயமாக இருந்தால் பாளி மொழி செல்வாக்கு காணப்பட்டு இருக்கலாம்(என்னுடைய அறிவுக்கு எட்டிய டவுட்டு).

புத்த தலம் 
பிறகு சிறிய தூரம் சென்ற உடன் இன்னும் ஒரு சிங்கள அறிவித்தல் பலகை சந்தேகத்துடன் காட்டபட்ட திசை நோக்கிச்சென்றோம்.அது ஒரு இயற்கையாக அமைந்த ஒரு சிறிய கற் குட்டை(பார்த்தல் புரிந்து விடும்) ஆனால் அதற்க்கு எதோ ஒரு கதை சிங்களத்தால் எழுதபட்டு இருந்தது.
பிறகு படிகட்டுகளுக்கு வந்து சிறிய தூரம் சென்ற போது ஒரு இடிபாடு அடைந்த (சிறிது திருத்த பட்டு உள்ளது) ஒரு வட்ட வடிவமான வணக்கத்தலம் குன்றின் உச்சியில் காணப்படுகிறது. சில திருத்தங்களுடன் அது மிகவும் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. அது ஒரு புத்த வணக்கத்தல வடிவமைப்பை கொண்டுள்ளது இதனை சுற்றி கற்தூண்கள் இவைகள கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. சில கட்டிடங்களில் அத்திவாரங்கள் உடைந்த ஒரு புத்தனின் சிலையும் காணப்பட்டது. அங்கு இருந்த ஒரு பிக்குவிடம் விசாரித்த போது பண்டைய காலத்தில் புத்த சாதுக்கள் தங்கும் மாடலயங்கள் என்று கூறினார்.அதுமட்டும் அல்லாது அங்கு ஒரு அரச மரக்கன்று நடப்பட்டு கூண்டினால் அடைக்கப்பட்டு ஒரு அறிவித்தல் பலகையும் போடப்பட்டு இருந்தது.அப்படி அறிவித்தல் பலகை போடும்மளவுக்கு  அந்த அரச மரம் என்ன முக்கியத்துவம் வாய்ந்தது????
முக்கியம்தான் சங்கமித்தையும் மகிந்த தேரரும் வட இந்தியாவிலிருந்து கொண்டு வந்து  இலங்கையில் (அனுராதபுரம்) நாட்டிய போதிமரத்தின் கிளையில் இருந்து உருவாக்கப்பட்ட மரம்தான் அது.
அனுராத புரத்தில் இருந்து கொண்டுவந்து நடப்பட்ட மரம் 
அதனை சுற்றி பார்த்து விட்டு கொஞ்ச தூரம் சென்றபோது ஒரு சிறிய பாதை செல்வதை பார்க்கக்கூடியதாக இருந்தது.என் நண்பன் சொன்னான் அது அவர்கள் சென்ற முறை வந்த போது முட்க்கம்பிகளால் அடைக்கப்பட்டு இருந்தததாக கூறி இருந்தான்.நாங்கள் சென்ற போது அது பாதை திறக்கப்பட்டு காணப்பட்டது.நாங்கள் அங்கு சென்ற போது அழிவடைந்த ஒரு கட்டிட அத்திவாரங்களை காணக்கூடியதாக இருந்தது.நாங்கள் அந்த அத்திவாரங்களை பார்க்கும் போது எதோ ஒரு கட்டிட அமைப்பை நினைவுபடுத்திக்கொண்டு இருந்தது.கட்டிட அமைப்பை தவிர்த்த அதன் பாதை எதோ வழமையாக எதோ இடத்தில் நாங்கள் சுற்றி செல்லும் பாதை போல இருந்தது. செல்லச் செல்ல புரிந்து கொண்டோம் அது ஒரு இந்து ஆலயத்தின் அமைப்பை கொண்டது என்பதை,எங்கள் அறிவுக்கு எட்டியவரை அது ஒரு இந்து வழிபாட்டு தலம்தான். ஒப்பிடளவில் பாரத்தால் நன்றாக பராமரிக்க படும் புத்த தலத்ததை விட இக்கட்டிட எச்சம் பெரியது.
மலசல கூடம் ஐந்தாம் நூற்றாண்டு
அவ் கட்டிட எச்சத்தில் சில பகுதிகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டும் அல்லாமல் வேறு கட்டிடங்களில் உள்ள கட்டிட எச்சங்கள் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது..இதனை எப்படி நாங்கள் புரிந்து கொண்டோம் என்றால்,இவ் கட்டிட  அமைப்புக்கு கொஞ்சம் அருகில் இன்னும் ஒரு கட்டிட அமைப்பு காணப்படுகிறது.அது ஒரு பண்டைய மனிதர்களின் தங்கும் இடமாக இருந்திருக்க வேண்டும் ஏன் என்றால் அவைகள் அறை போன்ற அமைப்பு காணப்பட்டது அது மட்டும் அல்லாது  பண்டைய கால கல்லால் ஆனமலசலகூடங்கள் கூட காணப்பட்டது.அவற்றில் சில மலசலகூடங்கள் கோவில் அமைப்பை ஒத்த கட்டிட அமைப்புடன் கலக்கப்பட்டுள்ளது.அங்கு சில ராணுவ வீரர்கள் நின்ற படியால் மேலதிக புகைப்படங்களை எங்களால் எடுக்கமுடியவில்லை.

இத்தலத்தை பற்றி ஏற்கனவே வரலாற்று ஆராய்ச்சி தங்கேஸ்வரி கதிராமன்  (முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்)அவர்களால் செயப்பட்டு உள்ளதாக இணையத்தில் படித்தேன்.ஏன் அவ் ஆராய்ச்சி குறிப்புகள் மின் ஆவணப்படுத்தினால்  நமது வரலாறுகளை நாம் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும்.யாரிடமாவது அவ் ஆராய்ச்சி குறிப்புகள் இருந்தால் இணையத்தில் பகிருங்கள்.
நான் இந்த தலத்தை பற்றி கேள்விபட்டது- இராஜேந்திர சோழன் வருகைக் காலத்திற்கு முன்னதாகவே சிவாலயம் மிகப் பிரசித்தி பெற்றிருந்தது. வன்னி பெருநிலப்பரப்பின் எல்லைப்புறத்திலும் திருக்கோணமலை மாவட்ட எல்லைப் புறத்திலும் அமைந்திருந்த இச்சிவாலயத்திற்கு மிகப்பெரும் திரளான வன்னி மக்கள் திருக்கோணேஸ்வரத்தின் வாரிசாக வணங்கி வந்திருந்தார்கள். சோழனின் வருகைக்கு பின்னர் அவ்வாலயம் சோழ மன்னனால் பற்றோடு வணங்கப்பட்டதுடன் கூடவே பெளத்தம் மேல் கொண்ட பக்தியினால் சிறிய பெளத்த விகாரையும் அமைத்து வணங்கினான்.அது மட்டும் அல்லது  பல்லவ வியாபாரிகளின் சஞ்சாரமும் இங்கு காணப்பட்டு இருந்திருக்கிறது.


தடுக்கப்பட்ட பாதை
தமிழ் ராசர்கள் பல்லவர்களினதும் சோழர்களினதும் செல்வாக்கு மிக்க இத்தலம்தற்பொழுது பெரிய அளவில் 'கிரி விகாரை' என உருவெடுத்துள்ளதுடன் சிங்கள மக்கள் எக்காலத்திலும் வாழ்ந்திராத அத்தமிழ்ப் பிரதேசம் இப்பொழுது சிங்கள மக்களின் புரான கால வாழ்விடமாகிவிட்டது.
இந்த தலத்தை என்கனவே இலங்கை பாடப்புத்தகங்களில் பௌத்த தலமாக சேர்க்கப்பட்டு விட்டது.
வழமை போல சில கேள்விகள்
ஏன் அந்த புத்த தலம் மட்டும் பரமரிக்கப்படுகிறது?
ஏன் மற்றைய புராதான கட்டிட எச்சங்கள் பாரமரிக்கப்படவில்லை?
ஏன் மற்றைய கட்டிட எச்சங்களின் வடிவமைப்பு மாற்றப்படுகிறது /சிதைக்கபடுகிறது?

  • இவ்முரண்பாட்டிற்கு தீர்வு காண வழிதான் என்ன?
  • அங்கு ராணுவப்பாதுகாப்பு தேவைதானா?
  • ஒரு வணகத்தலத்துக்காக அங்கு திட்டமிடப்பட்ட நீர் பாசன திட்டங்கள் முடக்கப்படுவது ஏன்?
  • என்னதான் நடக்குது அங்க?

எல்லாம் அந்த அரச   மரத்தடிக்காரனுகுத்தான்  வெளிச்சம் ..............

6 comments:

  1. உங்கட முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்... இது திரியாயில் மட்டுமில்ல, திருகோணமலையின் எல்லாப் பிரதேசத்திலயும் நடக்குது... நீங்க "வரலாற்றுத் திருகோணமலை" எண்டொரு புத்தகம் இருக்கு... கட்டாயம் வாசியுங்க... உங்களுக்கு உதவியாக இருகும்.... இலங்கை இந்து பரிபாலன் சபையால வெளியிடப்பட்ட "இலங்கைக் கல்வைட்டுக்கள்" (அப்பிடித்தான் நினைக்கிறன்) இதுவும் உங்களுக்கு உதவியாக இருகும்....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88

    ReplyDelete
  4. வரலாற்றினை ஆய்வு செய்யும்போது திறந்த மனதுடன் செய்தல் அவசியம். ஒரு சமயத்தின் தோற்றுவிப்பாளரை இழிவு படுத்துவதாகவே உங்கள் சொற்பிரயோகங்கள் இருக்கின்றன.
    ''பிறகு சிறிய தூரம் சென்ற உடன் இன்னும் ஒரு சிங்கள அறிவித்தல் பலகை சந்தேகத்துடன் காட்டபட்ட திசை நோக்கிச்சென்றோம்.அது ஒரு இயற்கையாக அமைந்த ஒரு சிறிய கற் குட்டை(பார்த்தல் புரிந்து விடும்) ஆனால் அதற்க்கு எதோ ஒரு கதை சிங்களத்தால் எழுதபட்டு இருந்தது.''

    அங்குள்ள விபரங்களை வாசித்து தெளிவு பெற விரும்பாத நீங்கள் கதை எழுதியிருப்பதாக கூறுவது வியப்பளிக்கிறது. வரலாறினை ஆய்வு செய்யும்போது நடுநிலை மனதுடன் செயற்படுங்கள். தங்களால் சிங்களம் வாசிக்க முடியாவிடில் வாசிக்க தெரிந்த ஒருவருடைய உதவியை நாடுங்கள். தங்கள் மனம் போன போக்கில் தங்களுடைய கருத்துக்களை வராலாறாக குறிப்பிட வேண்டாம். குறுகிய மனப்பான்பை கொண்ட பலர் வடக்கில் உள்ள பல பௌத்த விகாரைகளை அழித்தமை அனைவரும் அறிந்த இரகசியமாகும். எனவேதான் இராணுவத்தினர் காவல் இருக்கிறார்களோ என சந்தேகிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சரி அப்படியெனில் அங்கிருக்கும் அந்த சைவ ஆலையம் அழிக்கப்பட்டிருக்கிரதாக அவர் கூறுகிறாரே... அது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்...

      Delete