Thursday, July 19, 2012

இம்முறை கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருதல் சாத்தியமா?இதனால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் ?


மாகாண சபை தேர்தல் வரப்போகுது ....கள்ள காதலையும் கவர்ச்சி படங்களையும்,வைத்து பிழைத்த புலம்பெயர்(சில) இணையங்கள் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிட தொடங்கி விட்டன. தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் முக்கியமாக இருப்பது கிழக்கு மாகாண தேர்தல்தான். ஒரு தமிழனிடம் இந்த தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்று கேட்டால் என்ன பதில் சொல்வான்?
தமிழ் தேசிய கூட்டமைப்பு ,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இந்த இரண்டு கட்சி சார்ந்ததாகவே ஒவ்வொரு தமிழனின் பதில் இருக்கும்.ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அரசுடன் இணைந்து போட்டி இடுகிறது. ஒரு தமிழன்தான் முதல்வராக வர வேண்டும் என்று ஒவ்வொரு தமிழரும் நினைப்பார்கள்.
இது சாத்தியமாகுமா? ஏன் என்றால் வாக்காளர்களில் 41 சதவீதமானோர் தமிழ் வாக்காளர்களாகும்.முஸ்லிம் வாக்காளர்கள் 38 சதவீதமாகும். மீதமான தொகையினர் சிங்கள வாக்காளர்களாகும்.நாம் சொல்லலாம் தமிழ் வாக்காளர்கள் அதிகம் ஆகவே ஒரு தமிழர்தான் முதலமைச்சராக வருவார் என்று ....
அங்கதானுங்க இருக்கு டுசிட்டு...........ஒரு ஆய்வில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 76,000 பேர்(தமிழர்கள்) வெளிநாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.அப்படி பார்தால் திருமலையில்??? அம்பாறையில்???இப்பவே கன்னகட்டுதில்ல....(இப்ப வேற கொஞ்ச பேர் அவுஸ்திரேலியா போய்டாங்க)
சென்ற முறை மாகாண சபைக்கு தெரிவான அரசு சார்பான முஸ்லிம் அக்கத்தவர்கள் அதிகம் என் அப்படி நடந்து???நம் மக்களுக்கு எப்போதும் இந்த தேர்தல் வழியில் நம்பிக்கை இல்லை, காரணம் கடந்த கால நிலவரங்கள் அப்படி .

ஆனால் முஸ்லிம் மக்கள் அப்படி நடந்து கொள்வது இல்லை. முஸ்லிம்களின் வாக்களிப்பு முறை காரணமாக கிழக்கில் அவர்கள் தேர்தலில் தமிழரை விட கூடிய ஆசனங்களைப் பெற்று விடுகின்றனர். அவர்கள் மத்தியில் பல சிறு சிறு கட்சிகள் இருந்தாலும் வாக்களிப்பின் போது கவனமாக செயற்படுவதன் மூலமே இவ்வாறு ஆசனங்களைப் பெறுகின்றனர்.
நம்மக்கள் செய்ய வேண்டியது இதுதான் வாக்களிக்க வேண்டும்.அப்படி வாக்களிப்பை தூண்டும் விதமாக பிரச்சாரங்கள் அமைய வேண்டும்...
தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் தனது நிலைப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய முயற்சிகளை முன்னெடுப்பதில் வெற்றிகாணக்கூடியதாக இருக்குமானால் அநேகமாக சகல தமிழ்ப்பகுதிகளிலும் தமிழ்  கட்சிகள் வெற்றிபெறமுடியும்.
அது சரி ஒரு கிழக்கு மாகாண சபைக்கு என்ன அதிகாரங்கள் இருகின்றன??காவல்துறை அதிகாரம்?? காணி அதிகாரம்?
கிழக்கு மாகாண சபைக்கு ஒரு சிற்றூழியரையாவது ஆளுநர் அனுமதி இல்லாமல் நியமிக்கும் அதிகாரம் இருக்கிறதா?? அத விடுங்க
ஆளுநர் அனுமதி இல்லாமல் ஒரு போட்டோ பிரதி இயந்திரம் வாங்கும் அதிகாரம் இருக்கிறதா???
ஒரு தமிழர் முதலமைச்சராக வந்தால் நம் பிரச்சனைகள் தீர்ந்து விடப்போகிறதா ???
ஒன்னுமே இல்லை ஆனாலும் நாம் வாக்களிக்க வேண்டும் தமிழ் கட்சிகளுக்கு...  நாமமும் இந்த நாட்டில் இருக்கிறோம் என்பதற்காக .....

செய்தி –
·         முயற்சிசெய்தால் கிழக்கின் சகல தமிழ்ப் பகுதிகளிலும் தமிழ் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும் சுட்டிக்காட்டுகிறது (இந்து)

·         கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக கூடிய வாய்ப்பு உண்டு. பொது மக்கள் ஐக்கிய முன்னணி பெரும் வெறிவாகை சூடும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண பிரதம அமைப்பாளரான அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.



·         என்னிடமிருந்த அந்த 7 ஆசனங்களையும் மீண்டும் பெற்று வெற்றி பெறுவேன். கடந்த ஆண்டுகளில் நாங்கள் செய்த சேவைகளை மக்கள் மறக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இந்திய உட்பட வெளிநாடுகளின் உதவிகள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று, நான் மாகாணத்தை வளப்படுத்தியுள்ளேன், அதனால் மனத்திருப்தியோடு பதவி விலகுகின்றேன், என கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.