Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, November 5, 2012

சாட்டை சாட்டைதான்


எந்த பாடசாலையும் , ஒரு மாணவனிடம்  உள்ள திறமையை தட்டிவிட்டு தலைநிமிர்த்துவதும் இல்லை, அப்படி தரைமட்டமாக்குவதும் ஒவ்வொரு ஆசிரியரின் கையில்தான் உள்ளது... என்ற கருத்தை அரசு பாடசாலையில்  பணிபுரியும் ஆசிரியர்களின் அணுகுமுறைகளை சாட்டையால் அடித்திருப்பதோடு, அதன் அவலநிலையையும் கலந்து எச்சரிக்கைமணியை ஓங்கி அடித்து எங்கள் பார்வைக்கு வந்துதான் சாட்டை.
ஐந்து பாடல்கள்,நான்கு சண்டை காட்சிகள் என மாசலாவை தூறி எமக்கு தரும் தமிழ் திரைத்துறை சில நல்ல படங்களை தராமலும் இருப்பதில்லை.
அவ்வாறன வரிசையில் இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில்  வந்ததுதான் சாட்டை என்ற கல்வி அரசியலை பேசும் படம். சில வருடங்களுக்கு முன் வந்த `பசங்கஎன்ற படம் பேசப்படாத பாடசாலை மாணவர்கள் பிரச்சனையை மெதுவாக பேசியது அப்படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது.ஆனால் பசங்க படத்தில் பேசாமல் விடப்பட்ட கல்வி அரசியலை இந்தப் படம் காரசாரமாக பேசியிருக்கிறது.
பாடசாலை கல்வியை வியாபாரமாக்கிவிட்ட சூழலில் அரசுப் பள்ளிகளில் இன்று நடக்கும் அவலம் அப்படியே இயக்குனர் அகத்தியனின் பட்டறையிலிருந்து வந்தத  இயக்குனர் அன்பழகனால் தோலுரிக்கப்பட்டுள்ளது
தனது முதல் படத்திலே ஒரு மிக முக்கியமான அரசியலை பேசும் படத்தைச் சமரசங்களின்றி இயக்கியிருக்கும் அன்பழகனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
தூக்கி எறியும் சண்டை காட்சிகளோ நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் சேர்ந்து ஆடும் பாடல் கட்சிகளோ எதுவும் இல்லாத சந்தர்பத்தில் அதிகமான பாடசாலை காட்சிகளில் தன் உச்ச திறமையை காட்டி சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவன், பள்ளிக்குள்ளே சுற்றிவருகிற ஒளிப்படக்கருவி எந்த நெருடலும் இல்லாமல் நம்மையும் அங்கு கூட்டிச்சென்று விடுகிறது.
நல்லாசிரியருக்கான அத்தனை தகுதியும் கொண்ட ஆசிரியராகச் தயாளன் என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நன்றாக வாழ்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அவர் கடைசியாக நடித்த ஈசன் பட  காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை போல.. எந்நேரமும் முகத்தை விறைப்பாகவே வைத்திருகிறார்.விறைப்பை கொஞ்சம்  குறைத்திருக்கலாம்.. மிகுந்த பொறுப்புணர்வுடன் அவர் நடந்துகொள்ளும் விதம், அனைவரும் தன்னைத் தாக்கும்போதும் தன்னுடைய மாணவிக்காக அடிவாங்கிக்கொள்ளும் குணம், எந்த சூழலிலும் மாணவர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவது என ஒரு உண்மையான ஆசிரியராக வாழ்ந்திருக்கிறார்.
தம்பி ராமையா.. படத்தின் இன்னுமொரு கதாநாயகன் கதையின் வில்லனாக நக்கலுடன் மிரட்டி இருக்கிறார். வில்லத்தனமான ஆசிரியராக பிரித்து மேய்ந்து விடுகிறார்.
...முடியை ஒதுக்கி விட்டு வழுக்கை தலையில் வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே ரணகளம் பண்ணியிருக்கிறார். சொல்லப்போனால் படம் விறுவிறுப்பாகப் போவது தம்பி ராமையாவின் சேட்டைகளால் தான்.
படத்தின் சுவாரஸ்யங்கள்...
முதல் காட்சியில் உந்துருளியில் வரும் சமுத்திரகனி நம்மவர் கமலை நினைவு படுத்துகிறார் . முக்கியமாக பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கும் காட்சிகளில் நமக்கு பிடித்த ஒரு  ஆசிரியராக நம் கண் முன் நிற்கின்றார்.

வேக வாசிப்பு பயிற்சி , நினைவு அதிகரிக்கும் பயிற்சி, தோப்ப்புக்கரணம் போட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்  என்பது போன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கும்  காட்சிகள் சுவாரஸ்யம்.
முக்கியமாக பெண்கள் கழிவறையை எப்படி இருக்கு என்று எட்டி பார்த்து தண்டனை அனுபவிக்கும்  மாணவனை பாராட்டி பேசும் காட்சிகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
வெகு நாட்களுக்கு பிறகு ஜுனியர் பாலைய்யா..... பாடசாலை அதிபராக நடித்து இருக்கின்றார்.. அவர் தம்பிராமய்யாவின் அதட்டல் உருட்டலுக்கு  பயப்படும் இடங்களில் கலக்கி இருக்கிறார்.
தம்பிராமய்யா வரும் அனைத்து காட்சிகளும் சுவாரசியம்தான்.
பிளாக் பாண்டி, யுவன், சதிஷ் மகிமா போன்றவர்கள் மாணவர்களுக்கான பாத்திரத்தை சிறப்பாகவே செய்து இருக்கின்றார்கள்..
இமானின் இசை படத்துக்கு பெரிய பலம்..
பாடசாலை ஆசிரியர்கள் செய்யும் கல்வி அரசியலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இருந்த ஏக்கங்கள் கோபங்கள் அனைத்தையும் இந்தப் படத்தில் காண முடிந்தது. ஒவ்வொரு காட்சியும் அதில் வரும் வசனங்களும் பிரமாதம்.. கேவலமான கல்வி அரசியலை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம்.ஆனாலும் வீரியம் குறைந்து விடவில்லை.
.அன்பழகன் கூர்மையான வசனங்கள் படத்திற்கு இன்னுமொரு பலம் ஏணியை கூரை மேல போடாதீங்க, வானத்தை நோக்கிப் போடுங்க...என்ற ஒரு வசனமே போதும் இயக்குனரின் தரத்தைச் சொல்ல..
இன்றைய காலத்திற்க்குத் தேவையான கதை, சில அரசுபாடசாலைகளின்  நிலைமை, நல்ல ஆசிரியருக்கான அடையாளம் என்ன? என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளதால் நிச்சயம் பாராட்டப் படவேண்டிய, அதே சமயம் பார்க்கவேண்டிய படம்...!
.இந்த படத்தை  மாணவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அனைத்து கட்டாயம் ஆசிரியர்களும், கல்வி வியாபாரிகளும் பார்த்தாக வேண்டும், .


Saturday, August 25, 2012

எப்பிடி அன்ன புடிச்சிங்க ???வல போட்டு புடிச்சோம் !!; :P

கிழக்கு மாகாண சபை தேர்தல்க்களம் சூடாக தொடங்கி விட்டது.தமிழரின் சர்வேதேச அணுகுமுறை போராட்ட முறையின் அத்திவாரம் இந்த தேர்தல்.தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான தமிழர்களின் தலைமைத்துவம் என மாறியிருக்கும் காலம் இது.ஏன் என்றால் தமிழ் தேசியத்தை அடையாளமாக கொண்டு தனித்துவமாக எந்த கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர இலங்கையில் இல்லை.தமிழர் என்ற அடையாளத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை.




இது ஒரு புறம இருக்கட்டும்.
தனது கட்சியின் கொள்கைகளை நடைமுறை படுத்துவதற்கு அக்கட்சிக்கு தேர்தலில் வெற்றி தேவை, அவ் வெற்றிக்கு அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.அப்படி அந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.அப்படி அவர் மக்களிடம் இருந்து வாக்குகளை பெற எப்படி பட்டவராக இருந்திருக்க(இருக்க) வேண்டும்???அதாவது ஒரு நல்ல அரசியல் வாதி எப்படி இருக்க வேண்டும்??
கட்சி என்பதை தவிர்த்து தனிப்பட்ட ரீதியில் சமுக அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்....தேர்தல் காலங்களில் மட்டும் மக்களில் அன்பு கொண்டவர்களாக இருக்க கூடாது. (நான் சொல்லுறது சரிதானே??)அவர்களைத்தான் மக்களுக்கு பிடிக்கும்.அப்படி எந்த அரசியல் வாதியையும் திருமலை மாவட்டத்தில் நான் கண்டதில்லை.ஒரு தேர்தல் கால கவர்ச்சி காரணமாகவே சிலர் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.
இதுவும் ஒரு புறமாக இருக்கட்டும்
ஒரு வேட்பாளர் தேர்தலில் குதிக்கிறார் என்றால் அவருடைய நோக்கம் என்னவாக இருக்கும் ???சமுகத்தின் மீதான அக்கறையாகத்தான் இருக்கும்.(காலம் காலமாக இதத்தான் சொல்லுறாங்க).
இதைத்தவிர என்ன காரணங்கள் இருக்கும் ஏதாவது உங்களுக்கு தெரியுமா ??
சொல்லுறன் கேளுங்க!!! உங்களுக்கு ஒழுங்கான வேலை இல்லை,அல்லது செய்யும் வேளையில் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்கவில்லை.இலங்கையில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது... என் பக்கத்து வீட்டு காரன் எல்லாம் பிரச்சன நேரம் வெளிநாட்டுக்கு போய் அங்க சிட்டிசன் கிடைச்சு இப்ப facebookல காருக்கு முன்னுக்கு நிண்டு போட்டோ எடுத்து போட்டு இருக்கிறான்.!! என்ற பல பிரச்சனைகள் இருக்கும்.இதற்க்கான அவர்களது தீர்வு என்ன?? வெளிநாடு போகணும் ,அங்க போய் எப்படியாவது வாழ்நாள் முழுவதும் அந்நாட்டில் வாழ்வதற்கு ஏதாவது உரிமையை பெற்று விடுவது.இதற்க்கு நீங்கள் இந்த தேர்தலை பயன் படுத்திக்கொள்ளலாம். இதை விட பல காரணங்கள் இருக்கு சொன்னா வெக்கக்கேடு  நமது சமுக அரசியலை இப்படியும் பயன்படுத்தலாமா ???என்று நீங்களே யோசிப்பிங்க அத விடுங்க நாம விசயத்துக்கு வருவம்.
முதலில் நீங்கள் அவன்ட இவன்ட காலப்பிடிச்சி நாலு பேர்களை சேர்த்துக்கொண்டு நீங்களும் சமுகத்தில் பெரிய அப்பாடக்கர் என்ற மாயையை உருவாக்க வேண்டும் பிறகு எப்படியாவது ஒரு கட்சியில் அல்லது சுயட்சையாக அரசியலில் குதிக்க வேண்டும்,
பத்திரிகைகளில் உங்களது செய்தி இடம்பெறுகிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.(முழக்கம்,விளக்கம்,விஜயம்)என்ற சொற்கள் முக்கியம்)அரசை தாக்கி பேசிய ஒலி ,ஒளி பதிவுகள் இருந்தால் மிகவும் நல்லது.உங்களது வேட்பாளர் அடையாள அட்டை,செய்திதாள்களில் வந்த உங்களது செய்திகள் என்பவற்றை பத்திரமாக வைத்திருங்கள்.
தேர்தலும் வரும் உங்களது சொந்தங்கள் ,நண்பர்கள் ,தெரிஞ்சவன், எல்லோரும் பழகின பாவத்துக்காக உனக்கு வாக்களிப்பார்கள்.நீ ஒரு தமிழ் தேசியத்துக்கு அப்பால் பட்ட கட்சியின் வேட்பாளர் ஆயின் இம்மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களின் எதிர்கால முக்கியத்துவத்தை விளங்காமல்  உனக்கு ஆதரவான உன் உறவுகள் நண்பர்கள் வாக்களிக்கும் போது உனக்கு வந்த வாக்குகள் நம் மக்களுக்கு ஆப்புகளாக மாறும். நீங்கள் இலகுவாக அது இது எல்லாம் காட்டி...ஏதாவது அபிவிருத்தி அடைந்த நாட்டில் அகதி அந்தஸ்து பெற்று விடுங்கள்.....


இது இன்னொரு வகை தமிழ் தேசியம் கதைப்பவர்கள் பற்றி ................
 தேர்தல் காலங்களில் மட்டும் நான் அத்தனையாம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறேன், மக்கள் வேண்டுகோள் என்று பீலா விட்டிங்க...மக்கள் அன்றிலிருந்து இன்று வரை  பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல
கனவான்களே மக்களுக்காக தேர்தலில் ஈடுபடுதல் என்பது தானாக  வரணும்...தானாக வந்தவர்களே  ஒன்றும் செய்ய வில்லை நீங்கள் என்ன செய்ய போகிறிர்கள்???
மக்கள் உங்கள் வெறுப்பில் கட்சிக்கு கூட வாக்களிக்காமல் விட்டு விடுவார்கள்.மக்களோடு மக்களாக ...மக்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து...யார் என்றாலும் சிரித்த முகத்துடன் உதவி செய்து ...விழாக்களில் அதிதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் மக்களுக்காக மக்களோடு இன்னும் அகதியாக இருப்பவர்கள்தான் அவர்களுக்கு தேவை
கனவான்களே ...வெற்றியா நல்லது எதாவது சமுக விழாக்களில் நீங்கள்தான் பிரதம அதிதி...தோல்வியா ஏதாவது அபிவிருத்தி அடைந்த நாட்டில் அரசியல் தஞ்ச அந்தஸ்து...அவ்வளவுதான் ...அங்க போன பிறகு பேஸ்பூக்ல, ட்விட்டர்ல மக்கள் போராட்டம் மயிறு மட்ட என்று தயவு செய்து கூச்சல்  போட வேண்டாம் ..(அதுக்கு அங்க நிறைய பேர் இருக்கிறாங்க )
வேட்பாள கனவான்களே !!!!30 வருட யுத்தம் நம் மக்களை அரசியலில் நாட்டம் இல்லாமல் பண்ணிவிட்டது..அவங்களே அதில் இடுபாடு இல்லாமல் இருக்கும் போது, இந்திய அரசியல் வாதிகள் போல நீங்களும் நடந்தால் என்ன ஐயா செய்வது???மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள் தமிழ் மக்களுக்கு இந் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள் உங்கள் கட்டுக்கதைகளை விட்டு.
..
பின் குறிப்பு-சில உதிரிகளும் தேர்தல் களத்தில்….. நாயகர்களாக தேர்தல் அறிவிப்பில் இருந்து சமுக சேவகர்களாக மாறிவிட்டார்கள் அவர்களை பற்றி கதைக்க தேவை இல்லை தேர்தலுக்கு பிறகு ஒய்ந்து விடுவார்கள்.

முக்கிய குறிப்பு-வேட்பாளர்களே நீங்கள் தேர்தல் காலங்களில் காட்டும் சமுக அக்கறையை கொஞ்சம் மற்றைய நாட்களில் காட்டுங்கள் தானாக மக்கள் உங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

Thursday, July 19, 2012

இம்முறை கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருதல் சாத்தியமா?இதனால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் ?


மாகாண சபை தேர்தல் வரப்போகுது ....கள்ள காதலையும் கவர்ச்சி படங்களையும்,வைத்து பிழைத்த புலம்பெயர்(சில) இணையங்கள் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிட தொடங்கி விட்டன. தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் முக்கியமாக இருப்பது கிழக்கு மாகாண தேர்தல்தான். ஒரு தமிழனிடம் இந்த தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்று கேட்டால் என்ன பதில் சொல்வான்?
தமிழ் தேசிய கூட்டமைப்பு ,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இந்த இரண்டு கட்சி சார்ந்ததாகவே ஒவ்வொரு தமிழனின் பதில் இருக்கும்.ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அரசுடன் இணைந்து போட்டி இடுகிறது. ஒரு தமிழன்தான் முதல்வராக வர வேண்டும் என்று ஒவ்வொரு தமிழரும் நினைப்பார்கள்.
இது சாத்தியமாகுமா? ஏன் என்றால் வாக்காளர்களில் 41 சதவீதமானோர் தமிழ் வாக்காளர்களாகும்.முஸ்லிம் வாக்காளர்கள் 38 சதவீதமாகும். மீதமான தொகையினர் சிங்கள வாக்காளர்களாகும்.நாம் சொல்லலாம் தமிழ் வாக்காளர்கள் அதிகம் ஆகவே ஒரு தமிழர்தான் முதலமைச்சராக வருவார் என்று ....
அங்கதானுங்க இருக்கு டுசிட்டு...........ஒரு ஆய்வில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 76,000 பேர்(தமிழர்கள்) வெளிநாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.அப்படி பார்தால் திருமலையில்??? அம்பாறையில்???இப்பவே கன்னகட்டுதில்ல....(இப்ப வேற கொஞ்ச பேர் அவுஸ்திரேலியா போய்டாங்க)
சென்ற முறை மாகாண சபைக்கு தெரிவான அரசு சார்பான முஸ்லிம் அக்கத்தவர்கள் அதிகம் என் அப்படி நடந்து???நம் மக்களுக்கு எப்போதும் இந்த தேர்தல் வழியில் நம்பிக்கை இல்லை, காரணம் கடந்த கால நிலவரங்கள் அப்படி .

ஆனால் முஸ்லிம் மக்கள் அப்படி நடந்து கொள்வது இல்லை. முஸ்லிம்களின் வாக்களிப்பு முறை காரணமாக கிழக்கில் அவர்கள் தேர்தலில் தமிழரை விட கூடிய ஆசனங்களைப் பெற்று விடுகின்றனர். அவர்கள் மத்தியில் பல சிறு சிறு கட்சிகள் இருந்தாலும் வாக்களிப்பின் போது கவனமாக செயற்படுவதன் மூலமே இவ்வாறு ஆசனங்களைப் பெறுகின்றனர்.
நம்மக்கள் செய்ய வேண்டியது இதுதான் வாக்களிக்க வேண்டும்.அப்படி வாக்களிப்பை தூண்டும் விதமாக பிரச்சாரங்கள் அமைய வேண்டும்...
தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் தனது நிலைப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய முயற்சிகளை முன்னெடுப்பதில் வெற்றிகாணக்கூடியதாக இருக்குமானால் அநேகமாக சகல தமிழ்ப்பகுதிகளிலும் தமிழ்  கட்சிகள் வெற்றிபெறமுடியும்.
அது சரி ஒரு கிழக்கு மாகாண சபைக்கு என்ன அதிகாரங்கள் இருகின்றன??காவல்துறை அதிகாரம்?? காணி அதிகாரம்?
கிழக்கு மாகாண சபைக்கு ஒரு சிற்றூழியரையாவது ஆளுநர் அனுமதி இல்லாமல் நியமிக்கும் அதிகாரம் இருக்கிறதா?? அத விடுங்க
ஆளுநர் அனுமதி இல்லாமல் ஒரு போட்டோ பிரதி இயந்திரம் வாங்கும் அதிகாரம் இருக்கிறதா???
ஒரு தமிழர் முதலமைச்சராக வந்தால் நம் பிரச்சனைகள் தீர்ந்து விடப்போகிறதா ???
ஒன்னுமே இல்லை ஆனாலும் நாம் வாக்களிக்க வேண்டும் தமிழ் கட்சிகளுக்கு...  நாமமும் இந்த நாட்டில் இருக்கிறோம் என்பதற்காக .....

செய்தி –
·         முயற்சிசெய்தால் கிழக்கின் சகல தமிழ்ப் பகுதிகளிலும் தமிழ் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும் சுட்டிக்காட்டுகிறது (இந்து)

·         கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக கூடிய வாய்ப்பு உண்டு. பொது மக்கள் ஐக்கிய முன்னணி பெரும் வெறிவாகை சூடும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண பிரதம அமைப்பாளரான அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.



·         என்னிடமிருந்த அந்த 7 ஆசனங்களையும் மீண்டும் பெற்று வெற்றி பெறுவேன். கடந்த ஆண்டுகளில் நாங்கள் செய்த சேவைகளை மக்கள் மறக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இந்திய உட்பட வெளிநாடுகளின் உதவிகள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று, நான் மாகாணத்தை வளப்படுத்தியுள்ளேன், அதனால் மனத்திருப்தியோடு பதவி விலகுகின்றேன், என கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

Saturday, March 24, 2012

கிழக்கிற்கு தனியான தொல்பொருள் கொள்கை?


அகழ்வாராய்ச்சி தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் தனியான சில கொள்கைகள் பின்பற்றப்பட உள்ளன.
தொல்பொருள் அமைச்சு, தொல்பொருள் ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்தக் கொள்கை வகுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முழுமையான அதிகாரமுடைய தொல்பொருள் ஆணையாளர் நாயகம் ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு என தனியாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலக்கீழ், நிலத்திற்கு மேல், கடலோரம், வாவி, குளம், அருவி சகல தொல்பொருட்கள் தொடர்பிலும், இறுதித் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரம் மாகாண தொல்பொருள் ஆணையாளாருக்கு வழங்கப்படவுள்ளது.
புதிய அகழ்வாராய்ச்சி கொள்கையில், தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ள விடயங்களை முதன்மையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல அரிய தொல்பொருள் பொக்கிஷங்கள் கிழக்கு மாகாணத்தில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதோ நல்லதா நடந்தா  இன்னும் ஒன்ட நாங்க செய்ய தயாராக இருக்க வேண்டும்.
தமிழர் தாயகம்’ கபளீகரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எண்ணிலடங்காதவை.  கால தேவைக்கேற்றாற்போல் பல கபளிகர வரலாறு ஆதாரத்துடன் மேலும் பல தமிழர்வாழ்விடங்களில் இருந்து வெளிவரல் வேண்டும். இதுவே தமிழர், வரலாற்றுக்கு செய்யும் சேவையுமாகும். 
சிங்கள வரலாற்று ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் தமிழர்களின் உண்மை வரலாறு பற்றி நன்கு தெரியும். சிங்களத் தேசியத்தின் நன்மை கருதி உண்மையை மறைத்து ஊமையாகியுள்ளார்கள். 
எனவே, இவ்முரண்பாட்டிற்கு தீர்வு காண வழிதான் என்ன?
சர்வதேசத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நடுநிலைமை வாதிகள் கொண்ட பொதுச்சபைக்குதமிழர் வரலாற்றைஏற்ருகொள்லாத புத்தி ஜீவிகளை அழைக்க வேண்டும். நடுநிலைமை வாதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் நியதியும் வகுக்கப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கு பல கோணங்களில் இருந்தும் புலம்பெயர் வாழ் இலங்கை வாழ் வரலாற்று  ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கு துணையாக  ஈழத்தமிழர்களில் பற்றுக்கொண்ட ஆர்வலர்களும் களத்தில் இறங்கவேண்டும். நிச்சயம் நாம் வரலாற்றை நாம் மீட்க்க முடியும் .

Wednesday, January 25, 2012

தமிழ் கட்சிகள் இணைவு????



இந்த வாரம் நான் கேட்ட இனிப்பான செய்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.இது ஒரு நல்ல தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். என் என்றால் என்னதான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இப்பொழுது இருகட்சிகளும் ஒரு புள்ளியில் நிற்கின்றன.(சந்திரகாந்தன் அவர்கள் சம்பந்தர் அவர்களுக்கு எழுதிய கடிதம் மூலமாக புரிகிறது) காரணம் மாகாணங்களுக்கான காணி போலீஸ் அதிகாரங்கள் அடிப்படையாக கொண்டு அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தை !!! இது ஒரு ஆரோக்கியமான விடயம். ஆனாலும் இப்பொழுது ஒரு பிரச்சனை காணப்படுகிறது.என்னவென்றால்”தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்பது வடக்கு கிழக்கு இணைத்த மாகாணம் ,TMVP கேட்பது கிழக்கு மாகாணம்.இது ஒன்றுதான் இப்பொழுது சிக்கலை கொடுக்கிறது.
இப்பொழுது என்ன கேட்டு கூட்டமைப்பு அரசுடன் பேசுகிறதோ!!!அதைத்தான் EPDP கூட வலியுறுத்துகிறது.  இவ்வாறு இருக்கும்போதும் போலீஸ் காணி அதிகாரங்கள் பெற்ற வடக்கு கிழக்கு மாகாணம் என்பதுதான் எம்மக்களுக்கு பூரண மனித பௌதிக வளம் கொண்ட மாகாணமாக அமையும். என் என்றால் ஒரு மொழி பேசும் மக்களுக்கு இரண்டு போலீஸ் பிரிவுகள் சட்டம்கள் பொருத்தமற்றது. வடக்குகிழக்கு பண்டைய காலம் தொட்டு தமிழ் மக்களின் பிரதேசமாக இருக்கிறது..அதிகார பகிர்வு சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும்தான், வடக்கு கிழக்கு மக்களுக்கு இடையில் இல்லை.எது எப்படியாகினும் தமிழ் மக்களுக்குகான உரிமை போராட்டம் வடக்கு கிழக்கை அடிப்படையாக கொண்டுதான் தோற்றம் பெற்றது. அதனால் தீர்வுகளும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயக பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு அமையவேண்டும். இதைதான் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
இப்பொழுது கூட்டமைப்பு,ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியன வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரத்தை கோருகின்றன. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கிழக்கு மாகாணம் என்ற கொள்கையை விட்டு வடக்கு கிழக்கு இணைத்த மாகாணத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசிய விடயங்களை வெளிப்படையாகக் வெளியிடுவதில்லை இதை சந்திரகாந்தன்(பிள்ளையான்)கூட அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதை தவிர்த்து தமிழ் கட்சிகள் குறைந்தது கருத்து பரிமாறலையாவது மேற்கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது தமிழ் கட்சிகள் தனித்து செயல்படாமல் விட்டுக்கொடுப்புகளுடனும் அர்ப்பணிப்புக்களுடன் செயல்படுவது நன்று!!!
ஒன்றாய் இணைந்து விட்டால் கட்டாயம் ஒரு முடிவு கிடைக்கும்.
இனியும் நாம் வீரம்,துரோகம் என பேசிக்கொண்டு இருந்தோமானால் கிடைப்பது கூட கிடைக்காது(வீரம் ,துரோகம்என்ற சொற்கள் தமிழ் சினிமாக்காரர்களால் குத்தகைக்கு எடுக்க பட்டு விட்டது). ஏன் என்றால் சர்வேதேச சமுகம் இலங்கை மீது இனபிரச்சனை மீது கடும் இறுக்கத்துடன் செயல்ப்படுகிறது.தமிழர் தீர்வில் அக்கறை காட்டுகின்றன(இந்தியாவும் சீனாவும் அக்கறை கடுவது போல் நடித்து கொண்டு இருகின்றன) இந்த உந்துதளுடன் தமிழ் கட்சிகள் செயல் படவேண்டும் .பழம் கனிகிறது அழுக முதல் சாப்பிட வேண்டும்.