Wednesday, January 25, 2012

தமிழ் கட்சிகள் இணைவு????



இந்த வாரம் நான் கேட்ட இனிப்பான செய்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.இது ஒரு நல்ல தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். என் என்றால் என்னதான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இப்பொழுது இருகட்சிகளும் ஒரு புள்ளியில் நிற்கின்றன.(சந்திரகாந்தன் அவர்கள் சம்பந்தர் அவர்களுக்கு எழுதிய கடிதம் மூலமாக புரிகிறது) காரணம் மாகாணங்களுக்கான காணி போலீஸ் அதிகாரங்கள் அடிப்படையாக கொண்டு அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தை !!! இது ஒரு ஆரோக்கியமான விடயம். ஆனாலும் இப்பொழுது ஒரு பிரச்சனை காணப்படுகிறது.என்னவென்றால்”தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்பது வடக்கு கிழக்கு இணைத்த மாகாணம் ,TMVP கேட்பது கிழக்கு மாகாணம்.இது ஒன்றுதான் இப்பொழுது சிக்கலை கொடுக்கிறது.
இப்பொழுது என்ன கேட்டு கூட்டமைப்பு அரசுடன் பேசுகிறதோ!!!அதைத்தான் EPDP கூட வலியுறுத்துகிறது.  இவ்வாறு இருக்கும்போதும் போலீஸ் காணி அதிகாரங்கள் பெற்ற வடக்கு கிழக்கு மாகாணம் என்பதுதான் எம்மக்களுக்கு பூரண மனித பௌதிக வளம் கொண்ட மாகாணமாக அமையும். என் என்றால் ஒரு மொழி பேசும் மக்களுக்கு இரண்டு போலீஸ் பிரிவுகள் சட்டம்கள் பொருத்தமற்றது. வடக்குகிழக்கு பண்டைய காலம் தொட்டு தமிழ் மக்களின் பிரதேசமாக இருக்கிறது..அதிகார பகிர்வு சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும்தான், வடக்கு கிழக்கு மக்களுக்கு இடையில் இல்லை.எது எப்படியாகினும் தமிழ் மக்களுக்குகான உரிமை போராட்டம் வடக்கு கிழக்கை அடிப்படையாக கொண்டுதான் தோற்றம் பெற்றது. அதனால் தீர்வுகளும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயக பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு அமையவேண்டும். இதைதான் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
இப்பொழுது கூட்டமைப்பு,ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியன வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரத்தை கோருகின்றன. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கிழக்கு மாகாணம் என்ற கொள்கையை விட்டு வடக்கு கிழக்கு இணைத்த மாகாணத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசிய விடயங்களை வெளிப்படையாகக் வெளியிடுவதில்லை இதை சந்திரகாந்தன்(பிள்ளையான்)கூட அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதை தவிர்த்து தமிழ் கட்சிகள் குறைந்தது கருத்து பரிமாறலையாவது மேற்கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது தமிழ் கட்சிகள் தனித்து செயல்படாமல் விட்டுக்கொடுப்புகளுடனும் அர்ப்பணிப்புக்களுடன் செயல்படுவது நன்று!!!
ஒன்றாய் இணைந்து விட்டால் கட்டாயம் ஒரு முடிவு கிடைக்கும்.
இனியும் நாம் வீரம்,துரோகம் என பேசிக்கொண்டு இருந்தோமானால் கிடைப்பது கூட கிடைக்காது(வீரம் ,துரோகம்என்ற சொற்கள் தமிழ் சினிமாக்காரர்களால் குத்தகைக்கு எடுக்க பட்டு விட்டது). ஏன் என்றால் சர்வேதேச சமுகம் இலங்கை மீது இனபிரச்சனை மீது கடும் இறுக்கத்துடன் செயல்ப்படுகிறது.தமிழர் தீர்வில் அக்கறை காட்டுகின்றன(இந்தியாவும் சீனாவும் அக்கறை கடுவது போல் நடித்து கொண்டு இருகின்றன) இந்த உந்துதளுடன் தமிழ் கட்சிகள் செயல் படவேண்டும் .பழம் கனிகிறது அழுக முதல் சாப்பிட வேண்டும்.   

3 comments:

  1. நல்ல கருத்தாடல் செந்தூரன், உங்கள் வயதுப்பிள்ளைகள் பெரும்பாலும் கண்மூடித்தனமான புலி ஆதரவை மட்டுமே வெளிக்காட்டி வரும் சூழலில் இது போன்ற சிந்தனைகள் எம்மை நேரிய பாதையில் கொண்டு சேர்க்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. இங்கு நான் புலி ஆதரவு என்பது, ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றையும் துரோகிகளாகப் பார்க்கும் பார்வையை மட்டுமே. ஆனாலும் தமிழ்க் கூட்டமைப்பு இன்னும் Hangover இலேயே இருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன். ஏனையவர்களை அரவணைப்பதில் தொடங்கி கிராம மட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது வரை இன்னும் பழைய நிலையிலிருந்து மீணடு வரவில்லை என்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.
    தொடர்ந்து எழுதுங்கள் தம்பி….. வாழ்த்துக்கள்…

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா!!!

      Delete
    2. ஆனாலும் தனி நபரோ அல்லது ஒரு குழுவோ நமக்கு செய்த தியாகங்களை மறந்தவன் அல்ல நான்.

      Delete