Thursday, January 12, 2012

வெள்ளை ஹீரோதான் வேணும்- சுகாசினி


தமிழ் திரைப்படங்களில் இனிமேல் இயக்குனர்கள் MGR  போன்ற  வெள்ளையான நடிகர்களைத்தான் தேர்ந்து எடுக்க வேண்டுமாம்! நடிகை சுகாசினி வேண்டுகோள் !!!!!!!

சுகாசினி நல்ல நடிகை, நல்ல நல்ல எழுத்தாளர் ! ஆனாலும் ஏன் அவர் கோமாளித்தனமான கருத்துகளை வெளியிடுகிறார் என்று புரிய வில்லை. சுகாசினி எந்த காலத்தில் இருக்கிறாரோ தெரியவில்லை. இப்போது வந்த தமிழ் படங்களை பார்த்தாரோ தெரியவில்லை! அங்காடித்தெரு,தென்மேற்கு பருவக்காற்று இன்னும் மசாலா இல்லாத படங்கள் சுகாசினி கூறியவாறு MGR போல நடிகர்கள் பொருந்துவார்களா?
அவர் இன்னும் ஒன்று குறிப்பிட்டார் அது ஆதரிக்க கூடியதுதான் நடிகைகளை மட்டும் ஏன் வெள்ளையாக எடுகிரிங்க?இது வாஸ்தவமான கேள்விதான் ! ஆனாலும் விடுத்த வேண்டுகோள்தான்  அவரும் அந்த கூட்டம் தான் என்று நிருபித்து விட்டது.(சில பேருக்கு முகத்தில அரை இஞ்சிக்கு மேக்கப் போடா வேணும்)
கோடி கொடியா பணத்த கொட்டி படம் எடுக்கிற அமேரிக்கா காரன் கூட நிறத்த பார்த்து படம் எடுகிறல்ல!
ஆனால் படங்களுக்கு 5பாட்டு 4பைட்டு அம்மா சென்டிமென்ட் கற்பழிப்புகாட்சி வெள்ளையான ஹீரோ போதுமா? . நல்ல படம் எடுக்கிறவங்களையும் இந்த அம்மா விடமாட்டாங்க போல.
மசாலா படங்கள் கூட கதை தேடிப்போக இந்த அம்மா கலர கையில எடுதிட்டா? ஒரு பிராந்திய படம் அந்த பிரதேசத்தின் தன்மைகளை கொண்டுதான் இருக்க வேண்டும் என்று உலக சினிமாவை பற்றி கதைக்கும் இந்த அம்மைக்கு தெரியாதா?

திரை விமர்சன நிகழ்ச்சியில், ‘தமிழ் ரசிகர்களுக்கு படம் பார்க்கத் தெரியவில்லை’ என்று  குறிப்பிட்டார் கிராமத்திலிருந்து வரும் இயக்குநர்களுக்கு சீன் எப்படி வைப்பதென்று தெரியவில்லை என்றார்.
பின்பு  மணிரத்தினம் படித்தவர்களுக்குத்தான் படம் எடுக்கிறார் என்றார்.
அம்மணி எடுத்த முதல் படம் இந்திரா கிராமத்தை களமாகக் கொண்டு வந்த கதை என்பது நினைவில்லை போலிருக்கிறது (தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை இதற்கு மேல் யாரும் கொச்சைப்படுத்த முடியாது )
கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் இன்று பெரிய இயக்குனர்கள்!
தமிழ் சினிமா நல்ல  படைப்பாளிகள் கையில் போய் ரொம்ப நாளாகிறது. மேடையிலும் ஜெயா டிவியிலும்(முன்னொரு காலத்தில் ) சீன் போட்டு திரும்பவும் ஹீரோயின் ஆக போறவோ தெரியல்ல ....
லாரன்சின் (நடன இயக்குனர்) ராஜாதி ராஜ படம் வந்த பொழுது அவர் விமர்சனம் என்ற பெயரில் தனி மனித விமர்சனம் செய்தார். ஏன் சூப்பர் கிட் படங்கள கூட எவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்தார்..
இந்த அம்மணிக்கு படைப்புகளை விமர்சனம் செய்ய தெரியாது. படைப்பாளிகளை விமர்சனம் செய்யத்தான் தெரியும்...


கலர விட கதைதான் முக்கியம் எண்டு இந்த அம்மாக்கு தெரியாதா ? இந்த அம்மாக்கு வக்காலத்து வாக்க நினைப்பவர்கள் YOUTUBE போய் பாருங்க இந்த அம்மா விமர்சனம்(காசினி பேசும் படம்) எண்ட பெயரில போட்ட சீன !!!
கா.செந்தூரன்

No comments:

Post a Comment