Showing posts with label மனதை பாதித்தது. Show all posts
Showing posts with label மனதை பாதித்தது. Show all posts

Monday, November 5, 2012

சாட்டை சாட்டைதான்


எந்த பாடசாலையும் , ஒரு மாணவனிடம்  உள்ள திறமையை தட்டிவிட்டு தலைநிமிர்த்துவதும் இல்லை, அப்படி தரைமட்டமாக்குவதும் ஒவ்வொரு ஆசிரியரின் கையில்தான் உள்ளது... என்ற கருத்தை அரசு பாடசாலையில்  பணிபுரியும் ஆசிரியர்களின் அணுகுமுறைகளை சாட்டையால் அடித்திருப்பதோடு, அதன் அவலநிலையையும் கலந்து எச்சரிக்கைமணியை ஓங்கி அடித்து எங்கள் பார்வைக்கு வந்துதான் சாட்டை.
ஐந்து பாடல்கள்,நான்கு சண்டை காட்சிகள் என மாசலாவை தூறி எமக்கு தரும் தமிழ் திரைத்துறை சில நல்ல படங்களை தராமலும் இருப்பதில்லை.
அவ்வாறன வரிசையில் இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில்  வந்ததுதான் சாட்டை என்ற கல்வி அரசியலை பேசும் படம். சில வருடங்களுக்கு முன் வந்த `பசங்கஎன்ற படம் பேசப்படாத பாடசாலை மாணவர்கள் பிரச்சனையை மெதுவாக பேசியது அப்படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது.ஆனால் பசங்க படத்தில் பேசாமல் விடப்பட்ட கல்வி அரசியலை இந்தப் படம் காரசாரமாக பேசியிருக்கிறது.
பாடசாலை கல்வியை வியாபாரமாக்கிவிட்ட சூழலில் அரசுப் பள்ளிகளில் இன்று நடக்கும் அவலம் அப்படியே இயக்குனர் அகத்தியனின் பட்டறையிலிருந்து வந்தத  இயக்குனர் அன்பழகனால் தோலுரிக்கப்பட்டுள்ளது
தனது முதல் படத்திலே ஒரு மிக முக்கியமான அரசியலை பேசும் படத்தைச் சமரசங்களின்றி இயக்கியிருக்கும் அன்பழகனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
தூக்கி எறியும் சண்டை காட்சிகளோ நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் சேர்ந்து ஆடும் பாடல் கட்சிகளோ எதுவும் இல்லாத சந்தர்பத்தில் அதிகமான பாடசாலை காட்சிகளில் தன் உச்ச திறமையை காட்டி சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவன், பள்ளிக்குள்ளே சுற்றிவருகிற ஒளிப்படக்கருவி எந்த நெருடலும் இல்லாமல் நம்மையும் அங்கு கூட்டிச்சென்று விடுகிறது.
நல்லாசிரியருக்கான அத்தனை தகுதியும் கொண்ட ஆசிரியராகச் தயாளன் என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நன்றாக வாழ்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அவர் கடைசியாக நடித்த ஈசன் பட  காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை போல.. எந்நேரமும் முகத்தை விறைப்பாகவே வைத்திருகிறார்.விறைப்பை கொஞ்சம்  குறைத்திருக்கலாம்.. மிகுந்த பொறுப்புணர்வுடன் அவர் நடந்துகொள்ளும் விதம், அனைவரும் தன்னைத் தாக்கும்போதும் தன்னுடைய மாணவிக்காக அடிவாங்கிக்கொள்ளும் குணம், எந்த சூழலிலும் மாணவர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவது என ஒரு உண்மையான ஆசிரியராக வாழ்ந்திருக்கிறார்.
தம்பி ராமையா.. படத்தின் இன்னுமொரு கதாநாயகன் கதையின் வில்லனாக நக்கலுடன் மிரட்டி இருக்கிறார். வில்லத்தனமான ஆசிரியராக பிரித்து மேய்ந்து விடுகிறார்.
...முடியை ஒதுக்கி விட்டு வழுக்கை தலையில் வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே ரணகளம் பண்ணியிருக்கிறார். சொல்லப்போனால் படம் விறுவிறுப்பாகப் போவது தம்பி ராமையாவின் சேட்டைகளால் தான்.
படத்தின் சுவாரஸ்யங்கள்...
முதல் காட்சியில் உந்துருளியில் வரும் சமுத்திரகனி நம்மவர் கமலை நினைவு படுத்துகிறார் . முக்கியமாக பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கும் காட்சிகளில் நமக்கு பிடித்த ஒரு  ஆசிரியராக நம் கண் முன் நிற்கின்றார்.

வேக வாசிப்பு பயிற்சி , நினைவு அதிகரிக்கும் பயிற்சி, தோப்ப்புக்கரணம் போட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்  என்பது போன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கும்  காட்சிகள் சுவாரஸ்யம்.
முக்கியமாக பெண்கள் கழிவறையை எப்படி இருக்கு என்று எட்டி பார்த்து தண்டனை அனுபவிக்கும்  மாணவனை பாராட்டி பேசும் காட்சிகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
வெகு நாட்களுக்கு பிறகு ஜுனியர் பாலைய்யா..... பாடசாலை அதிபராக நடித்து இருக்கின்றார்.. அவர் தம்பிராமய்யாவின் அதட்டல் உருட்டலுக்கு  பயப்படும் இடங்களில் கலக்கி இருக்கிறார்.
தம்பிராமய்யா வரும் அனைத்து காட்சிகளும் சுவாரசியம்தான்.
பிளாக் பாண்டி, யுவன், சதிஷ் மகிமா போன்றவர்கள் மாணவர்களுக்கான பாத்திரத்தை சிறப்பாகவே செய்து இருக்கின்றார்கள்..
இமானின் இசை படத்துக்கு பெரிய பலம்..
பாடசாலை ஆசிரியர்கள் செய்யும் கல்வி அரசியலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இருந்த ஏக்கங்கள் கோபங்கள் அனைத்தையும் இந்தப் படத்தில் காண முடிந்தது. ஒவ்வொரு காட்சியும் அதில் வரும் வசனங்களும் பிரமாதம்.. கேவலமான கல்வி அரசியலை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம்.ஆனாலும் வீரியம் குறைந்து விடவில்லை.
.அன்பழகன் கூர்மையான வசனங்கள் படத்திற்கு இன்னுமொரு பலம் ஏணியை கூரை மேல போடாதீங்க, வானத்தை நோக்கிப் போடுங்க...என்ற ஒரு வசனமே போதும் இயக்குனரின் தரத்தைச் சொல்ல..
இன்றைய காலத்திற்க்குத் தேவையான கதை, சில அரசுபாடசாலைகளின்  நிலைமை, நல்ல ஆசிரியருக்கான அடையாளம் என்ன? என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளதால் நிச்சயம் பாராட்டப் படவேண்டிய, அதே சமயம் பார்க்கவேண்டிய படம்...!
.இந்த படத்தை  மாணவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அனைத்து கட்டாயம் ஆசிரியர்களும், கல்வி வியாபாரிகளும் பார்த்தாக வேண்டும், .


Friday, August 24, 2012

First Love


(Una storia d'amore in Ollanta donna di Trincomalee)
Verso la fine del 18 ° secolo! Si potranno godere il sorgere del sole al mattino e in vena di godere oggi. Altra nazione, ma ha dato la sua vita per questo tirukonamalaitan più per favore. Ora ha una grande tragedia. Abolizione nave Turatte purappatuvatar della conchiglia. Suoi occhi dalla sua camera e sono andato al mare con gli occhi ampliato albero purinttatu.La nave è così importante per lei ... Quale potrebbe essere il più importante è una ...... amarla! Reed è nato a Van ollant prancina ollant suo padre, un ufficiale della enpat valttatillai. In questa stagione ha raggiunto l'età di tutti Rockfort piretik, la urumtan di Trincomalee.
In amore con lui dal giorno in cui è ufficiale jocoppiyan militare capito il significato dell'amore enapatarku. Dirgli che ho amato per raggiungere la saturazione completa raggiungere la saturazione completa. Lei lo ama, disse a suo padre. Jocop a parlare con il suo matrimonio Data kurikkapattatu padre. Ma lui non la auguro a nell'ufficio del padre. Citanam Ho provato a chiedere le dimissioni del funzionario militare per la posizione era in kataic. Kovamatainta padre di Rita gli ordinò di andare nel suo ufficio ollantu rimosso.
La nave si preparò per andare a le mosse albero in aria. Nave si muove lentamente. Ritta non sapeva cosa fare. La nave sta andando ad amare la sensazione della sua vita onirica. Uscendo dalla stanza. Con la nave per andare alla montagna camantaram konecar comincia a correre sulla montagna. Miscelato con il mare alla montagna che è una decisione di non correre per la sua vita oltre la collina.

 Provate a immaginare un vero incidente che ha avuto luogo nel 1680 kalappakut
  Etichettare questa storia. Colonnello. Thomas (British Army), si basano su l'anno 1940 di riferimento e con Ollanta etukkapatta.
(Non so il nome di un ufficiale militare ha osservato in questa storia è frutto di fantasia.)

Sunday, August 5, 2012

உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா ???முஹம்மத் யூசுப்களே தமிழன் தமிழந்தாண்டா!!!!!

முகநூல் முஸ்லிம் நண்பர் முஹம்மது யூசுப் அவர்கள் வீரகேசரி பத்திரிகை facebook பக்கத்தில்  தமிழர்கள் அழியப் போகிறார்கள் ,தமிழர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க கூடாது,தமிழருக்கு அதிகாரங்கள் கொடுக்க கூடாது,இன்னும் பல சாபங்களையும் ...துவேச பின்னூட்டங்களையும் இட்டார்  (அவற்றைஇப்போதுஅகற்றிவிட்டார்கள்) நான்அந்தநபரைமட்டும்அல்லபலநபர்கள்தங்களுடைய துவேச கருத்துக்களை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டதை நான் பார்த்திருக்கிறேன்... இந்த முஹம்மது யூசுப்களுக்கு... சில சம்பவங்கள் கூறுகிறேன் ஏன் என்றால் நாங்களும்(மூதூர் தமிழ் மக்கள்) கெட்ட  முஸ்லிம்களால் பாதிக்கபட்டவர்கள்தான்.. இந்த பிரச்னையை பூரணமாக அனுபவித்தவர்கள் மூதூர் தமிழ் பேசும் மக்கள்தான்
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து மூதூர் நகர பகுதியில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் நகரத்தை சுற்றி இருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எப்போதும் எதோ தகராறு இருந்து கொண்டே இருக்கும்.. சில சமயங்கள் தமிழ் மக்கள் பயத்தின் காரணமாக மூதூர் நகரத்தை விட்டு விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கட்டைபறிச்சான் கிராமத்துக்கு அகதிகளாக வந்த சம்பவங்களும் உள்ளன. சில நேரங்களில் அவசர விபத்துகள் நோய்களுக்கு கூட மூதூர் தள வைத்தியசாலைக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது ஒரு சமயம் முஸ்லிம்கள் எறிந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததில் சம்பூரை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்த சம்பவமும் உள்ளன.அச்சமயத்தில் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு இல்லாவிட்டால் அது பாரிய பிரச்சனையாக உருவாகி இருக்கும்.எங்கள் ஊரில் எல்லாம் ஜிகாத் என்ற அமைப்பு மூதூர் முஸ்லிம்கள் உருவாக்கி இருப்பதாக கதைத்து கொள்வார்கள் உண்மையோ பொய்யோ அந்த அல்லாவுக்குத்தான் தெரியும்..

மூதூர் கிழக்கு பகுதியை ராணுவத்தினர் கைப்பற்றிய போது நடந்த களவுச் சம்பவங்கள் எப்படி நடந்தது யுத்தத்தின் போது ராணுவத்தினர் போரில்தான் இடுபட்டனர்.அவர்களுக்கு அதுக்கே நேரம் இருந்திருக்காது ஆனால் நீங்கள் பின்னால் வந்து ....ம்ம்ம்ம் ஒரு வீட்டில் ஒரு மண் சட்டிய கூட விட்டிங்களா??? உங்களுக்கு தெரியும் அந்த பழி ராணுவத்தினர் மீதுதான் விழும்.செய்யாத பிழையை நாங்கள் ஏன் அவர்கள் மீது தூக்கிபோட வேண்டும்...இது என் காலப்பகுதியில் நடந்தது.இது நான் கூறியது சம்பவங்களின் சுருக்கம். என்னுடைய அனுபவம். நான் கூறியது சம்பவங்களின் சுருக்கம்.

திரு-செபஸ்டியன்(வலைப்பதிவாளர்) அவர்கள் (((9(99(900[] நீங்கள் செய்த அநியாங்களை பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார்.அவர் எழுதியதிற்கு காரணம் யாரோ ஒரு முஸ்லிம் நபருடைய துவேச பதிவு.
திரு-செபஸ்டியன் அவர்களால் நீதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்த பதிவின் சுருக்கம்
நீதி அமைச்சர் கவனத்துக்கு:
இங்கே கீழே தரப்படும் விடங்களை மூதூரிலிருந்து விரட்டப் பட்ட தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கிறேன்.
ஆலஞ்சேனை எப்படி ஆலிம்நகராக மாறியது எப்படி?
மூதூர் ஜெட்டியிலிருந்து புளியடிச்சந்தி வரைக்கும் இருந்த தமிழ் மக்களுக்கு நடந்தது என்னஇவர்கள் எங்கே எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் இந்த வழியே இருந்த நவரத்தினம் மதுபானக் கடை அடையாளமாக இருந்நது எப்படி இப்போ விளையாட்டு அரங்காக மாறியுள்ளதுஏன்எப்படி?

முஸ்லீம் பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்கள் எப்படி உடனடியாக அகற்றப்படுகிறது இதற்காக காரணங்கள் என்னமுன்பு தமிழர்களின் கிராமமான 64ல் இப்போது முஸ்லீம் கிராமமாக மாறியுள்ளது எப்படிமூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் உதவி முகாமையாளர் ராமச்சந்திரன் சலீம் தலைமையில் கொல்லப்பட்டது?
ஏன்எப்படிமூதூர் பிரதேச சபையில் ஒரு தமிழர் உதவி பிரதி தலைவராக கூட இல்லை ஆனால் வடகிழக்கின் வேறு இடங்களில் உள்ள பிரதேசங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில்(யாழ்) முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகின்றது முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள தமிழர் சிறுபான்மையாக உள்ள இடங்களில் மூஸ்லீம்களால் வழங்கப்படுவதில்லை.

இப்படியான தமிழர் பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சின் காரணமாகவே முஸலீம்களால் வி எஸ் தங்கராசா ஜிகாத்தினால் கொல்ப்பட்டார் இது தமிழ் கிராமங்களை இணைத்து பிரதேச சபை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் இது சில பகுதிகளில் முஸ்லீம்களை சிறுபான்மையினராக்குவதாகவும் கருதியியே இவரது கொலை நடைபெற்றதாக பேசப்படுகின்றது. இதே போலவே மூதூரில் விஏ தங்கராசாவும் டாக்டர் அந்தோனியும்(கத்தோலிக்கர்) கொல்ப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.

தமிழர் பிரதேசத்திற்காக பஸ்ஓட அனுமதிகொடாமல் முஸ்லீம் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டதிற்கான அடிப்படைக்காரணம் என்னபிரதேசங்களில் முஸ்லீம் ஆட்டோகாரர்களின் உழைப்பிற்காகவே அதுமட்டுமல்ல மூதூர் அண்டிய பிரதேசங்களிலும் தமிழ் ஒருவர் இது வரை ஆட்டோ ஓட்ட முடியாது அப்படி ஒருவர் ஆட்டோ ஓடினால் அவர் கொல்ப்படுவார்.(இது சந்தேகத்திற்க்கு இடமில்லாத கருத்து) தமிழர் பெரும்பான்மையினராக உள்ள இடங்களில் இருக்கும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் பாதுகாப்பு முஸ்லீம் பகுதிகளில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்க்கு வழங்கப்படுவதில்லை இத பற்றி கேட்போது முஸ்லீம்களுடன் மக்களுடன் மட்டுமே உறவுகொள் சகோதரன் என்று சொல் மற்வர்களுடன் அல்ல என்ற கருத்துப்பட பதில் வந்ததாம்.

மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் மனேஜர் நாகரத்தினம் மயில்வாகனம் பள்ளி குடியிருப்பை சேர்ந்தவர் வேலை முடிந்து வரும் போது முஸ்லீம்களால் துரத்தப்பட்டு அடிக்கப்பட்டு இனிமெல் தமிழன் முஸ்லீம் பிரதேசத்திற்க்கு வேலைக்கு வரக்கூடாது என் மிரட்டப்பட்டார் ஏன்?(உறவினர்கள் சாட்சியமாக உள்ளனர்)
1990களில் சலீம் (முஸ்லீம் பயங்கரவாதி) தலைமையில் மூதூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது எப்படியார் இந்த அலுவல்களுக்கு உறுதுணையாக இருந்தது விலாசங்களை பார்த்து அந்தக் காலங்களில் தமிழ் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு கொலை செய்ப்பட்டனர் விசாரணைகள் எங்கேஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லை?

எக்காலத்திலும் கிழக்கில் தமிழர்களால் இப்படியான சம்பவங்கள் நடாத்தப்படவில்லை (ஆதாரம்: எமில்டர் பற்றிமாகரன் நொக்சர்3)(மனித உரிமைகள் குழுவினர்கு கூறியுள்ளனர்) இது வரையில் எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும் இதற்காக மன்னிப்பு கேட்டதில்லை ஏன்என்ற கேள்வி தமிழர்களிடையே எழுகின்றதுஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்களா?
உடையார் குடும்பத்திற்க்கு சொந்தமான நிலம் ஆலங்கேணியில் கைலாசபிள்ளை குடும்பம் செல்வம் குடும்பம் ஆகியோர்களை கடத்தி முஸ்லீம்களே கொலை செய்தனர் என்றும் இவர்களின் சொந்த நிலங்கள் முஸ்லீம்கள் பெயருக்கு மாற்ப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. எப்படி மாற்றப்பட்டதுஎந்த அரசியல்வாதி இதன் பின்னால்? (2006ல் மணற்சேனையில் விறகு வெட்டி விற்கும் தமிழரை முஸ்லீம் பகுதிகளில் விற்பவர் கொலைசெய்து உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (அவர்களது லான்மாஸ்டர் கையளிக்கப்படவில்லை) இந்த லான் மாஸ்டர் இன்றும் முஸ்லீம்களால் பாவிக்கப்படுகின்றதே அது எப்படி முடிகிறது?

யோகன் மகன் ஜதீஸ்வரனை பஸ்சிலிருந்து இறக்கி தமிழனை கொலை செய்ய வேண்டும் என்று கொலை செய்ப்பட்டது இவற்றிக்காக எந்த மூதூர் இஸ்லாமிய அமைப்பினரும் மன்னிப்போ அனுதாபமோ பேசவில்லைஏன்?
இப்போதும் 58 பிரதேசத்ற்க்கு தமிழர்கள் போக முடியாத நிலையே உள்ளதாக அறியப்படுகின்றது இந்த கோயிலும் குடியிருப்பு காணிகளும் மக்களிடம் மீள கையளிக்கப்படுமாஇந்த விடயத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடுதான் என்ன?
முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள இடங்களில் தமிழர்களால் முஸ்லீம்கள் இப்படி இம்மிசைக்கப்படவில்லை என்பது ஆழமானகருத்து. மூதூரில் புனித அந்தோனியார் கோவில் தாக்குதலில் முஸ்லீம்கள் யேசுவின் சிலையை உடைத்து கடலில் போட்டனர் இதை மீள எடுத்து வந்து சிலையை திரும்ப நிலை நிறுத்தியதிற்காக டாக்டர் அந்தோனியை முஸ்லிம்கள் கொலை செய்யதனர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதி தலைவர் ரங்காஇ சம்பூர் கூனித்தீவு சிவராசாவைஇ தபாற்கந்தோர் பால்ராஜ் ஆசிரியர் வசந்தன் (கணித ஆசிரியர் இவர்களை கடத்தி கொலை செய்தனர்.

மணல்ச்சேனை 64ல் பஸ்சில் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் பலர் ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்கள் இல்லையாஎப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்? 1994ல் தேர்தல் காலத்தில் மூஸ்லீம் காங்கிரஸ் வெற்றிக்காக ஆனன்சேனை மூதூர் ரஞ்சன் மோகன் போன்றோர் கடத்தி கொலை செய்ப்பட்டனர் ராஜதுரை நாகேஸ்வரன் ராஜதுரை ரவிச்சந்திரன் சம்பூர் கட்டைப்பறிச்சான் கொலைகள் முஸ்லீம்களால் தமிழர்கள் இழந்த பிரதேசங்கள் உடைமைகள் உயிர்கள் மிகப் பல இதைப்பற்றி முஸ்லிம் தலைவரகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை முஸ்லீம்களால் நடைபெற்ற கொலைகளுக்கும் மன்னிப்பும் கேட்கவுமில்லை. எப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்ஏன் இது பற்றி முஸ்லீம் புத்திஜீவிகள் வாய் திறக்கவில்லைஇவர்கள் மனிதர்கள் இல்லையாஎப்படி முஸ்லீம் தமிழ் இன உறவுகள் பற்றி பேசமுடியும்?
திருகோணமலை லிங்க நகரில் 5 அல்லது 6 முஸ்லீம் குடும்பங்களே இருந்த காலத்தில் இவர்களுக்கு எந்த தமிழர்களும் எந்த இடைஞசல்களும் செய்வில்லை இவர்கள் திரகோணமலையில் பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தே பள்விவாசல் கட்ட தமிழரே நிலம் வழங்கினார் இந்தப்பள்ளிவாசல் என்றுமே தாக்கப்படவில்லை மூதூரில் பல தமிழர்கள் தமிழர் கோவில்கள் சேர்ச்சுகள் தாகக்பட்டபோதும் இவைகள் பத்திரமாகவே இருந்தன தமிழர்கள் முஸ்லீம்களை இந்தக்காலங்களில் ஜனநாயகமாகவே நடாத்தினர்.

முஸ்லீம்களில் யார் இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பது வெளியே வராத வரைக்கும் மூதூரில் நடைபெற்ற பல கொலைகளின் சாட்டியங்கள் ஜ நா மனித உரிமைக் குழுவிடம் பல பதியப்பட்டுள்ளன அதில் பல ஜரோப்பாவில் உள்ள சில முஸ்லீம் எழுத்தாளர்களுடைய பெயர்களும் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாகவே முஸ்லீம்கள் தமது மதம் விடயத்தில் மட்டும் அக்கறையை காட்டிக்கொண்டு அதில் தமது எல்லா விடயங்களையும் வைத்து சவாரி செய்து கொள்வார்கள் தேவைப்படும்போது மதம் என்றும் இனம் என்றும் இலங்கை என்றும் பேசிக்கொள்கிறார்கள்
அஸ்ரப் காலத்தில் தமிழர்களின் காணிகளில் கேட்காமலே துறைமுகம் கட்டப்பட்டும் அந்த காணி சொந்தக்கார் வழக்கு பதிவுசெய்தும் நட்ட ஈடு கொடுக்காமல் இழுபறிப்பட்டது. இப்டியாக என்றுமே முஸ்லீம் நிலங்களுக்கு அஸ்ரப் செய்யவில்லை.
உவைஸ்ஜை புலிகள் சுட்டதும் பாலைநகர் தமிழர்களை (சுத்திகரிப்பு தொழிலாளிகள்)யும் இந்திய வம்சாவழியினரையும் முஸ்லீம்கள் வீடு புகுந்து கொலைகள் செய்தனர்
எத்தனை தமிழ் பிரதேசங்கள் இஸ்லாமிய பெயர் பெற்றன யார் இப்படி மாற்ற்ம செய்கிறார்கள் இதற்கான அடிப்படைகள் என்னஅரசில் எப்படி இதற்காக அனுமதி கொடுக்கப்படுகிறது
மூதூர் கல்வி பணிப்பாளர் ஆர் குணராசாவுடனான பல பிரச்சினைகள் வெளிவரல் வேண்டும்.இந்த பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட முஸ்லீம் அமைப்பினர் யார்எதற்காகசெய்தனர் போன்றன வெளிப்படுத்தப்படல் வேண்டும் நீதி வெளிவர வேண்டும் இப்படியான சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் முஸ்லீம்களை தமிழர்கள் எப்படி சகோதர உறவுடன் அணுக முடியும் இவையே தமிழர்களில் பலர் முஸ்லீம்களுக்கு எதிரான குரோதங்களுக்கான காரணங்களுமாகும்.
அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை முஸ்லிம் ஆசிரியர்களால் நிரப்பி அவர்களை தமிழ் பாடசாலைகளில் வைத்து படிப்பித்தல் தொழிலை ஆரம்பித்து விட்டு பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக முஸ்லீம் கல்லூரிகளில் நியமித்தனர். ஜேவிபியினர் திருமலையில் ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகளின் பாகுபாடு பற்றி பேசினர் இதன்போது பேசும்போது புலிகளின் பயங்கரவாத்ததைவிட முஸ்லீம்களின் அடிப்படைவாதம் மிக ஆபத்தானது என்றும் இதில் இலங்கையில் ஜிகாத் அல்கைடா புனித இஸ்லாமிய விடுதலை முன்னணிகள் மிக ஆபத்தானவைகள் எனவும் பேசினார்.
இப்படி பலதரப்பட்ட பிரச்சினைகளை இஸ்லாமியர்களால் இஸ்லாத்தின் பெயரால் மூதூர் சார்ந்த பிரதேசங்களின் மிகச்சிலவே இங்கு குறிப்பிட்டவைகள் மிகச்சிலவே. நீதி நியாயம் பேசுவது என்றால் இருபக்கமும் பேச வேண்டும்

மூதூர் பிரதேசத்தில் நடந்த சம்பவங்கள் இவை இப்படி எத்தனையோ பிரதேசங்களில் நடந்து இருக்கிறது.அவர் வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களையும் எழுதி இருந்தார் அது சேர்க்கப்படவில்லை.
 முஹம்மது யூசுப்களே  தமிழர்கள் பட்ட துன்பத்தை அளவுகளால் கூட அளக்க முடியாது. ஆனாலும் அவர்கள் இறைமையை விட்டு கொடுப்பதில்லை.அவர்களுக்கு யாரும் தண்ணீர் கொடுக்க தேவை இல்லை அவர்கள் அவர்களின் பூமியில் குடித்து கொள்வார்கள். தமிழர்கள் இன்னமும் இலங்கையில் இருக்கிறார்கள் அவர்கள் அதிகாரத்தை எப்படியாவது பெற்றுவிடுவார்கள்.எங்களிடம் நல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அரசதரப்பிலும் எதிர்தரப்பிலும்.
இவ்வாறு முஹம்மது யூசுப் போல இப்பக்கம்  ஒவ்வொருதமிழனும்துவேசத்தனமாகபேசத்தொடங்கினால்,....????
நீங்கள் எங்கள் மீது கொட்டிய கழிவுகளை நாங்கள் குப்பை தொட்டியில் போட்டு விட்டோம்,தயவு செய்து அவ் குப்பை தொட்டிகளை உங்கள் மீது கொட்ட எந்த தமிழனுக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
முஹம்மத் யூசுப்களே !!!!!நீங்கள் அங்கும் இல்லை இங்கும் இல்லை எங்கு போக போகிறிர்கள்???
பதில் சொல்லும் அளவுக்கு அந்த முஹம்மத் யூசுப் ஒண்டும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை.அவனை போல பலர் இவ்வாறு கருத்து தெரிவிப்பதால் அவர்களுக்கான பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம். நல்ல முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றாகத்தான் இருக்கின்றனர். உங்களை போல முட்டாள்கள்தான் இப்படி எண்ணம் கொள்வார்கள்

பின் குறிப்பு-இந்த பதிவு முஹம்மத் யூசுப்க்களை பற்றியது மட்டுமே முஸ்லிம்களை பற்றியது அல்ல.
ஒரு முகநூல் நண்பரின் முஹம்மத் யூசுப்புக்கான பதில்கள் 
"ஆனால்தமிழர்கள்முஸ்லிம்களைதமிழர்களாகசுட்டிகாட்டிஅவர்களின்நிலபுலன்களைஆட்சிசெய்யநிர்வகிக்கஏன்நீதிசெழுத்தஆசைபடுகின்றனர்"
இது உங்களுடைய கருத்து.. MOHAMAD YOOSUF..உண்மை என்ன தெரியுமா? இலங்கை தமிழன் ஆண்ட நாடு... வந்தவர்கள் எல்லா
ம் ஒட்டிக்கொண்டார்கள்... உரிமை செலுத்தினார்கள்.. ஒதுங்கி போக தமிழர்கள் ஒண்டும் ஒண்ட வந்த பிடாரிகள் இல்லை.. உரிமை செலுத்த தகுதியானவர்கள்.. உரிமை செலுத்துகிறார்கள்... நீங்கள் ஏன் உரிமை கேட்கவில்லை..? உங்களுக்கு தெரிந்திருக்கிறது? நில புலன்களுக்கு யார் உரிமை கொண்டாடலாம்? யார் மூடிட்டு இருக்கலாம் என்று.

TheerththigaSathiyaseelan "உங்களுக்குநீதிகிடைக்கபோவதும்இல்லைஉங்கள்இனம்உறுப்படபோவதும்இல்லை" அப்படியாசொன்னீர்கள்MOHAMAD YOOSUF?
"""தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. மறுபடியும் தர்மம் வெல்லும்""" இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

Saturday, June 30, 2012

சாமி என்ற பெயரில் பேய்கள்- சாராயம் குடிக்கும் (ஆ)சாமிகள்-

மூதூர் பகுதியில் வேத முறைப்படி இந்து ஆலயங்களில் பூசை நடைமுறை இடம் பெற்றாலும்,வேதமுறையற்ற அதாவது அதர்ம வேத பூசை வழிபாடுகள் அதிகம் இடம்பெறுகின்றன.இது மூதூரின் அடையாளம்  கூட,நவராத்திரி காலத்தில் ஊரே களைகட்டும்.
சாமி அருள் வந்து ஆடுதல், கட்டு போடுதல்,கும்பம் ஆடுதல்,மறிப்புப்போடுதல் என்று எங்கும் கலகலப்பாகவே இருக்கும்.
அது மட்டும் அல்ல வைகாசி மதம் வந்தால் எல்லா கோவில்களிலும் வேள்விகள் தீ மிதிப்பு,சாமி ஆடல்கள் என்றும்,வீடுகளில் மடை வைத்தல் பொங்கல் என்றும் ஒரே பக்தி மயமாக இருக்கும்.
 இவ்வாறன நடவடிக்கைகள் மூட நம்பிக்கைகளை சிலர் என்றும் கூறுவார்கள்(அந்த ஆராச்சி எனக்கு எதுக்கு), இது உண்மை பொய் என்பதற்கு அப்பால் இது அம்மக்களின் கலாச்சாரம்,பண்பாடு அது மட்டும் அல்ல இது அப் பிரதேசத்தின் அடையாளம்.இது அப்படியே இருக்கட்டும்.இதை விட்டு நம்அடையாளங்களை தொலைத்துக்கொள்ள கூடாது.
நம்பிக்கைகள் நம்பிகையாகவே இருக்கட்டும்.
இப்பொழுது விடயத்துக்கு வருகிறேன் ,
“சாமி சாராயம் குடிக்கிறது,அதுவும் ராவா அடிக்குது!!!!.
சைட் டிஷ் கூட இல்ல!!!!
பாருங்களன்  எல்லாம் தெரிஞ்ச சாமிக்கு தண்ணி அடிக்க தெரியல்ல...




கவனிக்க வேண்டியது—
  • எந்த மதமாவது மதுவை(போதைப்பொருள்) ஆதரிக்கிறதா?

  • அங்கு சிறுவர்களும் இளையவர்களும் அப்பூசையில் இருக்கும் போது சாமி என்ற பெயரில் சாராயம் குடிக்கும் போது அது சிறுவர்களுக்கும்  இளையவர்களுக்கும் வழி காட்டியாக அமையாதா?
  • இப்படியே அடுத்த சந்ததிக்கு இதுதான் நம் பண்பாடு என்று உணர்த்த போகிறீர்களா???
  • ஊரில் முப்பாட்டன் காலத்தில் இருந்து காணப்படும்  பாரம்பரிய (வேத முறை அல்லாத)வழிபாட்டு முறைகளை கேவலப்படுத்தப்போகிறீர்களா???

  • எல்லாம் அறிஞ்ச சாமிக்கு சாராயம் எதுக்கு???உங்களிடம் கேட்டதா???

  • சாமியாடல் என்பது அதிஉச்ச பக்தி மட்டுமே அது கடவுள் அல்ல என்பது உங்களுக்கு தெரியாதா???


 “நல்லது செய்தாத்தான் அது சாமி தீமைகளை செய்தால் அதுக்கு பெயர் பேய்...”  

Saturday, March 24, 2012

கிழக்கிற்கு தனியான தொல்பொருள் கொள்கை?


அகழ்வாராய்ச்சி தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் தனியான சில கொள்கைகள் பின்பற்றப்பட உள்ளன.
தொல்பொருள் அமைச்சு, தொல்பொருள் ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்தக் கொள்கை வகுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முழுமையான அதிகாரமுடைய தொல்பொருள் ஆணையாளர் நாயகம் ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு என தனியாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலக்கீழ், நிலத்திற்கு மேல், கடலோரம், வாவி, குளம், அருவி சகல தொல்பொருட்கள் தொடர்பிலும், இறுதித் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரம் மாகாண தொல்பொருள் ஆணையாளாருக்கு வழங்கப்படவுள்ளது.
புதிய அகழ்வாராய்ச்சி கொள்கையில், தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ள விடயங்களை முதன்மையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல அரிய தொல்பொருள் பொக்கிஷங்கள் கிழக்கு மாகாணத்தில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதோ நல்லதா நடந்தா  இன்னும் ஒன்ட நாங்க செய்ய தயாராக இருக்க வேண்டும்.
தமிழர் தாயகம்’ கபளீகரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எண்ணிலடங்காதவை.  கால தேவைக்கேற்றாற்போல் பல கபளிகர வரலாறு ஆதாரத்துடன் மேலும் பல தமிழர்வாழ்விடங்களில் இருந்து வெளிவரல் வேண்டும். இதுவே தமிழர், வரலாற்றுக்கு செய்யும் சேவையுமாகும். 
சிங்கள வரலாற்று ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் தமிழர்களின் உண்மை வரலாறு பற்றி நன்கு தெரியும். சிங்களத் தேசியத்தின் நன்மை கருதி உண்மையை மறைத்து ஊமையாகியுள்ளார்கள். 
எனவே, இவ்முரண்பாட்டிற்கு தீர்வு காண வழிதான் என்ன?
சர்வதேசத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நடுநிலைமை வாதிகள் கொண்ட பொதுச்சபைக்குதமிழர் வரலாற்றைஏற்ருகொள்லாத புத்தி ஜீவிகளை அழைக்க வேண்டும். நடுநிலைமை வாதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் நியதியும் வகுக்கப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கு பல கோணங்களில் இருந்தும் புலம்பெயர் வாழ் இலங்கை வாழ் வரலாற்று  ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கு துணையாக  ஈழத்தமிழர்களில் பற்றுக்கொண்ட ஆர்வலர்களும் களத்தில் இறங்கவேண்டும். நிச்சயம் நாம் வரலாற்றை நாம் மீட்க்க முடியும் .

Monday, January 30, 2012

மூதூர் குன்றுகள் புதையல் பூமியா? புதைத்த உடல்கள் எரிக்கப்படுவது ஏன்?

கடந்த 24 ஜனவரி 2012 மூதூர் சென்ற போது ஒருதகவலை கேள்விப்பட்டேன்.மூதூர் கிழக்கு கணேசபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 8 நபர்கள் கச்சக்கொடி மலை காட்டுப்பகுதியில் திரிந்து இருக்கிறார்கள் ,அந்த பகுதியில் செனைப்பயிர் செய்பவர்களிடம் சிங்களத்தில் உரையாடி இருக்கிறார்கள்,தாங்கள் போலீஸ் எனவும்  ,மலைப்பகுதிக்கு வரவேண்டாம் எனவும் கூறி இருக்கின்றனர், அவர்கள் நீளமாக முடி வளர்த்து இருந்திருக்கிறார்கள், சந்தேகமடைந்த கிராமமக்கள் கணேசபுர கிராம அபிவிருத்தி சங்க தலைவரிடம் தெரிவிக்க அவர் போலீசார் உதவியுடன் அக்காட்டுப்பகுதிக்கு விரைந்தனர்.எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் அவர்களுடன் செல்ல வாய்ப்பு கிடைத்தது.


கச்சகோடி மலை(குன்று)
இது ஒரு குன்று இதன் தூரம் அகலம் சரியாக தெரியாது!!!ஆனால் திருகோணமலை மாவட்டதின் உயரமான பகுதி. இது மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் கிராமத்தில் இருந்து அண்ணளவாக 3KM தூரத்தில் கணேச புரம் என்ற சிறு கிராமத்தில் காணப்படுகிறது.குன்றும் காடும் அதனை சுற்றி வயல்கள் மூதூர் கிராமங்களுக்குரிய அதே அழகு. அந்த குன்றில் இருந்து பார்த்தால் மூதூர் கிராமங்களை  google earth தில் பார்த்த அதே அனுபவம் கிடக்கும்.
சரி சொல்லவந்த விடயத்துக்கு வருகிறேன். நாங்கள் அங்கு சென்ற பொழுது யாரையும் காணவில்லை. ஆனால் பொலிசாரும் மக்களும் எதாவது நடந்திருக்கிறதா என மலையும் அதனை சுற்றி உள்ள பகுதியையும் தேட ஆரம்பித்தனர். திடிரென அங்கு எங்களுடன் வந்த போலீஸ்காரர் ஒருவர் எல்லோரையும் மலையின் நடுப்பகுதியில் உள்ள ஓர் இடத்திற்கு எல்லோரையும் அழைத்தார்.அங்கு சென்று பார்த்தல் 4 அடியில் ஒரு குழி, அது மேலும் ஆழமாக தொண்டபட்டு இருக்கவேண்டும் மீதியை மூடி விட்டார்கள் என்று நினைகிறேன்.அப்போது எல்லோரிடமும் பல கேள்விகள் எழுந்தது.ஏன் தோண்டப்பட்டிருக்கிறது ???புதையலாக இருக்குமோ???அப்படி புதையலாக இருந்தால் எப்படி இவ்வளவு இடம் இருக்க இந்த இடத்தில்தான் புதையல் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும்??? அதற்கும் விடை அந்த இடத்தில் கிடைத்தது அந்த குழிக்கு அருகில் இரண்டு மலையில் புதைந்த கற்கள், இந்த இரண்டு கற்களுக்கு இடையில்தான் இந்த குழி இருந்தது. ஒரு கல்லில் சிறிய ஆமை உருவம் செதுக்கபட்டு இருந்தது.மற்றய கல்லில் சதுர அடையாளம் அது கைபேசியில் உள்ள கஷ்(#)அடையாளம் போல இருந்தது.
என்ன இருந்தது என்று தெரியவில்லை! ஏதாவது இருந்ததா என்றும் தெரியவில்லை! ஆனாலும் ஏதோ ஒன்று எடுக்கப்பட்டு இருக்கிறது,
 இது இரண்டாவது சம்பவம், ஏற்கனவே இம்மலையில் உச்சியில் 2008 காலப்பகுதியில் யாரோ சிலரால் ஒரு பாரிய குழி தொண்டப்பட்டு இருத்தது.இந்த குழியும் அந்த மலையில் உள்ள சில அடையாளம்களின் அடிப்படையில் தோண்டப்பட்டு இருந்தது.அந்த மலையின் உச்சியில் மனிதனால் உருக்கபட்ட நான்கு குழிகள் காணப்படுகின்றன.அந்த குழிகள் கிட்டதட்ட சிறிய உரல் போன்றது. இந்த சிறு குழிகளை  கிராமமக்கள் மூதாதையர் பாவித்த உரல் என்றுதான் நினைத்து வந்தனர். அந்த தோண்டப்பட்ட குழியில் பல செங்கற்களை காணக்கூடியதாக இருந்தது. அது மட்டும் அல்லாது அந்த மலையில் பண்டைய கட்டிட செங்கற்  சிதைவுகள் சில காணப்படுகின்றன.இம் செங்கற்கள் மழையாலும் கற்றாலும் அரிக்கப்பட்டு சிறிய அளவுகள்தான் காணப்படுகிறது. இந்த மலைபகுதியில்தான் எதாவது இருக்கும் என்று கிராமவாசிகளை தவிர்த்த நபர்களுக்கு எப்படி தெரியும்?
அவர்களுக்கான வழிகாட்டி எங்கிருந்து கிடைத்திருக்கலாம் ?
யாரால் புதைக்கப்பட்டு இருக்கலாம்


சவக்குழிகள் தோண்டப்பட்டு உடல் எச்சம்கள் எரிக்கப்படல்
கடந்த சில மாதங்களாக இனம்தெரியாத நபர்களால் கட்டைபறிச்சான் இந்துமாயனத்தில் புதைக்கபட்ட மூன்று உடல் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கபட்டு உள்ளது.நாங்கள் அங்கு சென்று பார்த்த பொழுது மூன்று சவக்குழிகள் தொண்டப்பட்டு இருத்தது தோண்டப்பட்ட குழியுள் தேங்காய் புதைக்கப்பட்டு காணப்பட்டது. சுற்றி எங்கிலும் மதுபான போத்தல்கள்,பிளாஸ்திக் சோடா போத்தல்கள் காணப்பட்டன.அது மட்டுமல்லாது ஒரு பெண் உருவபொம்மை செய்யபட்டு ஒரு பெண் அணியும் எல்லா ஆடைகளும் அணியப்பட்டு எரிக்கபட்டு காணப்பட்டது(பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது). இது புதையல் தொண்டுபவர்களின் வேலை என கிராம மக்களிடம் வதந்தி நிலவுகிறது.
எவ்வாறாகினும் இவ்வாறன செயல்கள் கண்டிக்கத்தக்கன, மயானம்கள் கோவிலை போல புனிதமான இடம்,அங்கு நம் உறவுகளின் உடல்கள் தோண்டி எரிக்கப்படுவது எவ்வளவு ஈனத்தனமான செயல்,ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு நம்பிக்கைகளோடு தங்கள் உறவுகளின் உடல்களை புதைத்து விட்டு வருகின்றனர், எமது உறவின் ஓருவரின் சவக்குழி தோண்டப்பட்டு எரிக்கபட்டால் எமக்கு எவ்வளவு கோவம் வரும்?
கேள்விகள் பல பதில் தெரியவில்லை!!!
இது நடந்து முடிந்து விட்டது இனி எதுவும் செய்ய முடியாது என்று சில நண்பர்கள் கருத்துரை அளித்துள்ளார்கள்.நாங்கள் புதையலை தேடவேண்டாம் நம் முப்பாட்டன்களின் வரலாற்றை தேடி ஆவணப்படுத்துவோம்!!!அப்படி இல்லாவிட்டால் அவைகள் கூட காணாமல் போய்விடும் நான் குறிப்பிட்ட மலை தவிர பல மலைகள் மூதூர் கிழக்கில் உள்ளது அது அந்த மலைகளும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பல வரலாற்று எச்சம்கள் காணப்படுகிறது அவை தொடர்பான விடையங்களை தொடர்ந்து புகைப்பட ஆதாரங்களுடன் பதிவுகளை தொடருவேன்!!!
தொடரும் ...............