Saturday, June 30, 2012

சாமி என்ற பெயரில் பேய்கள்- சாராயம் குடிக்கும் (ஆ)சாமிகள்-

மூதூர் பகுதியில் வேத முறைப்படி இந்து ஆலயங்களில் பூசை நடைமுறை இடம் பெற்றாலும்,வேதமுறையற்ற அதாவது அதர்ம வேத பூசை வழிபாடுகள் அதிகம் இடம்பெறுகின்றன.இது மூதூரின் அடையாளம்  கூட,நவராத்திரி காலத்தில் ஊரே களைகட்டும்.
சாமி அருள் வந்து ஆடுதல், கட்டு போடுதல்,கும்பம் ஆடுதல்,மறிப்புப்போடுதல் என்று எங்கும் கலகலப்பாகவே இருக்கும்.
அது மட்டும் அல்ல வைகாசி மதம் வந்தால் எல்லா கோவில்களிலும் வேள்விகள் தீ மிதிப்பு,சாமி ஆடல்கள் என்றும்,வீடுகளில் மடை வைத்தல் பொங்கல் என்றும் ஒரே பக்தி மயமாக இருக்கும்.
 இவ்வாறன நடவடிக்கைகள் மூட நம்பிக்கைகளை சிலர் என்றும் கூறுவார்கள்(அந்த ஆராச்சி எனக்கு எதுக்கு), இது உண்மை பொய் என்பதற்கு அப்பால் இது அம்மக்களின் கலாச்சாரம்,பண்பாடு அது மட்டும் அல்ல இது அப் பிரதேசத்தின் அடையாளம்.இது அப்படியே இருக்கட்டும்.இதை விட்டு நம்அடையாளங்களை தொலைத்துக்கொள்ள கூடாது.
நம்பிக்கைகள் நம்பிகையாகவே இருக்கட்டும்.
இப்பொழுது விடயத்துக்கு வருகிறேன் ,
“சாமி சாராயம் குடிக்கிறது,அதுவும் ராவா அடிக்குது!!!!.
சைட் டிஷ் கூட இல்ல!!!!
பாருங்களன்  எல்லாம் தெரிஞ்ச சாமிக்கு தண்ணி அடிக்க தெரியல்ல...




கவனிக்க வேண்டியது—
  • எந்த மதமாவது மதுவை(போதைப்பொருள்) ஆதரிக்கிறதா?

  • அங்கு சிறுவர்களும் இளையவர்களும் அப்பூசையில் இருக்கும் போது சாமி என்ற பெயரில் சாராயம் குடிக்கும் போது அது சிறுவர்களுக்கும்  இளையவர்களுக்கும் வழி காட்டியாக அமையாதா?
  • இப்படியே அடுத்த சந்ததிக்கு இதுதான் நம் பண்பாடு என்று உணர்த்த போகிறீர்களா???
  • ஊரில் முப்பாட்டன் காலத்தில் இருந்து காணப்படும்  பாரம்பரிய (வேத முறை அல்லாத)வழிபாட்டு முறைகளை கேவலப்படுத்தப்போகிறீர்களா???

  • எல்லாம் அறிஞ்ச சாமிக்கு சாராயம் எதுக்கு???உங்களிடம் கேட்டதா???

  • சாமியாடல் என்பது அதிஉச்ச பக்தி மட்டுமே அது கடவுள் அல்ல என்பது உங்களுக்கு தெரியாதா???


 “நல்லது செய்தாத்தான் அது சாமி தீமைகளை செய்தால் அதுக்கு பெயர் பேய்...”