Showing posts with label தென்னமரவாடி. Show all posts
Showing posts with label தென்னமரவாடி. Show all posts

Friday, December 14, 2012

பெரும் கற்காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தது திருகோணமலை


சென்ற வாரம் மலைமுரசு செய்தித்தாளுக்காக தேடியவை 
இதுவரை திருகோணமலையின்  வரலாறு   ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு பல நூல்களாக வந்து விட்டன.ஆனால் அவற்றில் வரலாற்றுக் காலம் தான் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நாகரிக வளர்ச்சியை.வரலாற்றுக்கு முந்திய காலம்,வரலாறு உருவாக்கக் காலம், வரலாற்றுக்காலம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஈழத்து நாகரிக வளர்ச்சியில் இந்த மூன்று காலங்களிலும் திருகோணமலையின் பங்கு முக்கியமானது என்பது இதுவரை கிடைத்த ஆதாரங்களில் இருந்தது புலப்படுகிறது.

இதில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் திருமலையின் பங்கு என்ன?
 மக்கள் எழுத்து பாவனையை தொடங்காத காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. எல்லா இனக்குழுக்களின் வரலாறுகளை ஆராயும் போதும் இந்த காலப்பகுதி மிகவும் சவாலுக்கு உரியதாக காணப்படுகிறது. இக்காலப்பகுதில் மக்கள் இருப்பு தொடர்பாக ஆதாரங்களை தேடும் போது பின் வந்த பெரும்கற்காலம் தொடர்பான குறிப்புக்களும்,அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ,உபகரணங்களின் எச்சங்களும் மட்டுமே  ஆதாரங்களாக கொள்ள முடியும்.
பெரும்கற்கால(கி.மு500 முன்னர்) திருகோணமலை பாரிய சனத்தொகையோ ,கட்டமைக்கபட்ட ஆட்சி முறையையோ கொண்டிருந்திருக்காத,சில மனித குழுக்கள் தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்திருக்கிறார்கள்.

கதிரவெளி (தற்போது மட்டக்களப்புமாவட்டம்),திரியாய்,தென்னமரவாடி,கிழக்கு மூதூரில் அமைத்துள்ள “ராஜவந்தான்” மலை தொடக்கம் “படைகுமித்த கல்”வரை உள்ள குன்றுகள்   ஆகிய வற்றில் காணப்படும் ஆதாரங்கள் அம்மக்கள் இருப்பை உறுதி செய்கின்றன.

தற்போது திருகோணமலை மாவட்டமாக அடையாளப்படுத்த பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கும் கருப்பு சிவப்பு நிற பெரும்கற்கால மட்பாண்டங்கள் ,தாழிகள் மக்களின் இருப்புக்கள் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
கண்ணால் காணக்கூடிய ஆதாரங்கள் இப்படி சொல்ல திருமலை பகுதியில் செல்வாக்கை கொண்டிருந்த இம்மக்களை ஆரிய இலக்கியமான ராமாயணம்  உயர் தொழில் நுட்பம் கொண்டவர்களாகவும் ,கட்டுக்கோப்பான ஆட்சி முறையை கொண்டவர்களாகவும் இனம் காட்டுகிறது.அதாவது இந்த மனிதர்களின் தலைவனிடம்(ராவணனிடம்) விமானம் இருந்ததாக கூட அப்புராணம் கூறுகிறது .
இன்னுமொரு ஆரிய புராணமான மாகவம்சம் இம்மனிதர்களை யட்சினிகள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது.அதுமட்டும் அல்லாது எதோ ஒரு சக்தியை கொண்ட ஒரு கூட்டமாக அடையாளப்படுத்துகிறது.அதற்க்கு பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் அவர்களை  இயக்கர் ,நாகர் என்ற இனமாக அடையாளப்படுத்தினர்.
கி.மு 500 ஆண்டுக்கு பிறகுதான் ஆரியர்கள் இங்கு வந்தார்கள் என்றால்
அதற்க்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் யார் ? வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அடையாளபடுத்துவதே  இயக்கர் நாகர் என்ற தமிழ் பெயர்களை கொண்டுதான். .அதை விட இங்கு கிடைத்த அடிப்படை தொழில்நுட்பங்களை கொண்ட மட்பாண்டங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வடிவமைப்பும் காலபகுதியும்  தமிழ் நாட்டில் கிடைத்த பொருட்களுடன் ஒத்து போகின்றன. அப்படியானால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பெரும்கற்காலத்தில்  இங்கு வாழ்த்து எந்த இனம் என்று !!!

1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்...”