Wednesday, August 27, 2014

மதி சுதாவின் தழும்பு -ஒரு சினிமா க்காரனின் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும்



இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அப்பா அம்மா சாயலில்த்தான் பிறக்கிறது. பேச்சுக் கூட தன் சூழலில் எப்படி பேசுகிறார்களோ அப்படித்தான் பேசிக்கொள்ளும்.
அப்படித்தான் சினிமாவும் யார் இயக்குகிறானோ அவன் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும் அந்த படத்தில் இருக்கும்.அப்படி தன் சமுகத்தில் இருக்கும் ஒருவனின் வலியை பதிவு செய்து இருக்கிறார் மதிசுதா.
ஈழத்தில் இருந்து குறும்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் தமிழ் நாட்டு காரர்கள் எடுக்கும் வணிக சினிமா போல சிலர் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மதி சுதா போன்ற சிலர்தான் அவர்களில் சமுகத்தின் சாயலில் படைப்புகளை தருகின்றனர்.
தழும்பு –ஒரு கை,கால்  இயலாத,  சமுகத்தில் வாழ நினைக்கும் முன்னாள் போராளியின் கதை,
படத்தின் முதல் காட்சியே ஒரு கை இயலாதவர் என்ற காட்சிப்படுத்தல் ஊடாக தொடங்குகிறது . இரண்டாவது காட்சியில் யுத்தத்திற்கு பிறகு நம்சமுகத்தின் நிலைமையையும் முன்னாள் போராளிகளை இந்த சமுகம் எப்படி பார்க்கிறது என்பதையும் பதிவு செய்கிறது.
இப்படி காட்சிகள் மாற முன்னாள் போராளி என்பதால் பயத்தில் உதவி செய்ய மறுக்கும் நண்பனும் , சிகரட் தரவில்லை என்பதற்காக வக்கிலாதவன் என்று கேவலப்படுத்தும் சிறுவனை கோவப்பட்டு அடிப்பதும் , பிறகு சிறுவனின் அப்பா வந்து திட்டும் வார்த்தையும் அதன் பிறகான மனது கனத்த காட்சியில் படம் திரையில் மட்டும் மறைந்து போகும், நம் மனதில் இல்லை.
படத்தில் கொஞ்ச வசனம்தான் ஆனால் ஒவ்வொரு வசனமும் இன்னுமொரு படத்திற்கான கதை சொல்லி விடுகிறது.
உதரணமாக – இயக்கத்தில இருந்து வந்தவருக்கு  சமுகத்திண்ட நிலைப்பாடு விளங்காம இருக்கு.
செத்த சனத்திண்ட காச அடிச்சு கடைய போட்டுடுட்டு ஊர ஏமாத்தி பம்மாத்திய பிளைக்கிறாய், கொலைகார நாயே!
இந்த இரண்டு வசனங்களும் போதும் முன்னாள் போராளிகளை இன்றைய நிலைமையை சொல்ல.
அடுத்து பாலமுரளியின் ஒளிப்பதிவும் மதுரனின் படத்தொகுப்பும் குறைகள் சொல்ல முடியாது, முதல் காட்சியே ஒரு குறடும் சாவியும் இருக்கிற மாதிரி தொடங்கும், அத ஒரு ஒளிப்படமா பார்த்தாக்கூட நல்லா இருக்கும், தேத்தண்ணி குடிக்கிற காட்சி, பொடியன்கள அடிச்ச பிறகு ஒவ்வொரு சைக்கிளா விழுற காட்சி ஒவ்வொன்றும் நன்றாக இருக்கிறது.
சன்சிகன் ஒலிப்பதிவு தர்ஷனன் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு கைகொடுத்து இருக்கு.
இந்த படத்த பார்க்கும் போது இந்த கதைய எங்கயோ வாசிச்ச மாதிரி இருக்கே எண்டு ஜோசிச்சு கொண்டு இருந்தன். பிறகு படம் முடியும் போது அது நெற்கொழுந்து தாசனின் மூலக்கதையில் இருந்து எடுக்கப்பட்டது என்று போட்டுடாங்க.
அடுத்தது நடிப்பு -அந்த அந்த கதாபாத்திரங்கள் என்ன செய்யுமோ அத நடிச்ச ஆக்கள் செய்து இருகிறாங்க, மதிசுதாவும் அப்படிதான், கை,கால் ஏலாத ஒரு முன்னாள் போராளியாவே இருந்தார்.
இந்த படத்தின் இயக்குனர் மதிசுதா தன்னுடைய வேலைய ஒழுங்கா செய்து இருக்கிறார் என்பதற்கு நான் மேலே சொன்ன காரணங்களே சாட்சி!
நான் மேல நிறைய இடத்தில முன்னாள் போராளி என்ற வார்த்தைய அதிகம் பயன்படுதிட்டன், உண்மை என்ன எண்டா இந்த சமுகத்தில் எப்படி வாழ்வது என்று இன்னும் போராடி கொண்டு இருக்கிறார்கள் இந்த முன்னாள் போராளிகள்!
முக்கியமா இந்த படத்த சமுக வலைதளங்களில் வீரம் பேசும் புலம்பெயர் போலிப் போராளிகளும், தமிழ்நாட்டு காரர்கள் மாதிரி படம் எடுக்க நினைக்கும் ஈழத்து முயல்வோரும் பார்த்தே ஆக வேண்டும்.

Wednesday, August 20, 2014

டியர் #கத்தி #லைக்கா எதிர் போராளிஷ்,



லைக்கா என்ற  வணிகத்தின் நிறுவனர் இலங்கை அரசோட நல்லுறவா இருக்கிறார் /வியாபாரம் செய்றார் எண்டதாலதானே கத்தி படத்த தடை செய்யணும் எண்டு சொல்லுரிங்க.
அப்படி எண்டா நீங்க நிறைய படத்த எதிர்த்து இருக்கணும் இன்னும் எதிர்க்கணும்,நீங்க நிறைய பொருட்கள பயன் படுத்தவே கூடாது.
நீங்க பயன்படுத்திற பாதி பொருட்களின் உற்பத்தியாளர்கள் இலங்கையில நேரடியாக கூட்டுமுயற்சியாளர்களாகவும், நிதி மற்றும் தொழில்நுட்ப பங்காளர்களாக இருக்கிறாங்க என்பது உங்களுக்கு தெரியுமா?
இலங்கையில தொழில் செய்ற இந்திய கூட்டு இணைப்பு நிறுவங்கள்

1.ஐ ஓ சி
போன வருசம் இலங்கையில இருக்கிற தமிழ் சிங்கள மக்களிட்ட தங்களுடைய உற்பத்திய விற்று இலங்கை ரூபா 51.75 மில்லியன் வரிக்கு பிந்திய லாபம் உழைச்சு இருக்குது.

2.எயார்டேல்
2௦௦ அமெரிக்க டொலர் முதலீடு செய்து இருக்கு.அப்ப லாபம் எவ்வளவு இருக்கும்.? 

3.பிரமல் முயற்சியாளர்
இலங்கையில இருக்கிற கண்ணாடி உற்பத்தியில 54 பங்கு இந்த நிறுவனதிட்டதான் இருக்கு 

4.தாஜ் ஹோட்டல்
மூன்று இடத்தில ஹோட்டல் வைச்சு இருக்கிறாங்க 

5.அல்ட்ரா டேக் சிமன்ட்
இந்த நிறுவனத்தோட போன வருச விற்பனைப்புரள்வு 59 மில்லியன் டொலர்
இந்த வருசம் 11௦ மில்லியன் டொலர் எதிர் பார்க்கப்படுதாம்.

6. ஜே வி கோகல்
இலங்கையில இருந்து தேயிலை வாங்கி “super tea” என்ட பெயரில 31 நாட்டுக்கு வியாபாரம் செய்றாங்க.

7.டாட்டா
வாகனம் ,தொலைத்தொடர்பு, கட்டுமானம் ஆகிய மூன்று வியாபாரம் செய்றாங்க, அதுமட்டும்இல்ல EGO அனுமதிப் பத்திரம் குடுத்துத்தான் இலங்கையிலஅவங்கட கம்பனிய கூட்டு இணைச்சு இருக்கிறாங்க.

8.வங்கி
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா, இந்தியன் வங்கி, ICICI வங்கி,axis வங்கி போன்ற வங்கிகள் நிதி சேவை செய்றாங்க.

9.Asian Paints
2௦௦௦ ம் ஆண்டுக்கு முதல் இருந்தே இங்க வியாபாரம் செய்றாங்க.

10.CEAT
களனி டயர் நிறுவனத்துடன் சேர்ந்து உற்பத்தி செய்து 14 நாடுகளுடன் வியாபாரம் செய்றாங்க.

11.ITC வரையறுத்த கூட்டு நிறுவனம்
இலங்கையில கச்சான் கடலை விக்கிறதில இருந்து எல்லாம் விக்கிறாங்க


12.ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் வரையறுத்த கூட்டு நிறுவனம்
சீனி வியாபாரம் அதுவும் சின்னதா இல்ல 2௦௦ டொலர் முதலிட்டுத் திட்டதில.
இது மட்டும் இல்ல வாகனம், தொலைக்காட்சி ,வான் போக்குவரத்து,கட்டுமானம் ,லொட்டு லொசுக்கு எல்லா வியாபாரமும் நடக்குது.
இலங்கை நிறுவங்களும் அங்க வியாபாரம் செய்றாங்க நீங்க குடிக்கிற லயன் பீர் 22 % இலங்கையின் உற்பத்தி அது உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு? சிலோன் பிஸ்கட்,ஜோன் கீல்ஸ், இப்படி நிறைய நிறுவங்கள்
இப்போ நான் சொன்ன நிறுவங்கள் தொடர்புடைய பங்குதாரர், வழங்குனர் இணை  நிறுவங்கள், துணை நிறுவங்கள், பங்காளி நிறுவனங்கள், எல்லா வற்றையும் பட்டியல் இட்டு விட்டு லைக்காவுடன் சேர்ந்து எதிர்கலாம்தானே!!!!
அப்படி எதிர்த்தல் என்பது நீங்கள் கற்காலத்துக்கு செல்வதற்கு சமம். நீங்கள் பயன்படுத்தும் அநேக பொருட்களை நீங்கள் விட்டு விட வேண்டும் ..இப்போ இருக்கும் வணிக கூட்டு இணைப்புகள் மிகவும் சிக்கல் ஆனவைகள் ஒன்றை நம்பிதான் இன்னும் ஒன்று இருக்கும்  .அது மட்டும் அல்ல  பொருளியல்ல ஒரு தத்துவம் இருக்கு எங்களுடைய தேவை உலகத்தில் உள்ள வளங்களை விட அதிகம்.

Tuesday, August 19, 2014

இலங்கை வரலாற்றில் கம்பளைக் கால முருகன் கோயில் எம்பெக்க - தமிழர் கலையும் கடவுளும்


கண்டி நகர் நோக்கி நெடுஞ்சாலையில் பிரயாணம் செய்பவர்கள் பிலிமத்தலாவை நகரை அடைந்ததும் 'எம்பெக்க' தேவாலயம் என்ற பெயர்ப் பலகையை கண்டு கொள்வர் . அவ்விடத்திலிருந்து செல்லும்போது 1370 ஆம் ஆண்டைச் சேர்ந்த இலங்கை வரலாற்றில் கம்பளைக் காலம் என்று அழைக்கப்படுவதும் 3 ஆம் விக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதுமான 'எம்பெக்க' தேவாலயம் காணப்படுகின்றது.

வரலாற்று ஐதீகம்(புனைவு )
இந்த தேவாலயம் உருவானது தொடர்பான கொஞ்சம் புனைவுகளுடன் கூடிய கதை ஒன்று உள்ளது. முன்பு ஒரு காலத்தில் எம்பெக்க கிராமத்துக்கு அருகாமையில் பெர வாத்தியக்காரன் ஒருவன் கடுமையான குஷ்ட ரோகத்தால் அவதியூற்றபோது தன்னை இந்த நோயின் அவலத்திலிருந்து மீட்டெடுக்கும்படி அவன் கதிரமலைக் கந்தனிடம் தவஞ்செய்து நேர்த்திக்கடன் வைத்தான். அதனைத் தொடர்ந்து அவனுக்கு அந்த நோயில் இருந்து சுகம் கிடைத்தது. அதனால் மகிழ்ச்சியடைந்த அவன் வருடந்தோறும் கதிர்காமத்துக்குச் சென்று பூஜை வழிபாடுகள் செய்து கந்தப் பெருமானை வழிபட்டு வந்தான். எனினும் வயதாக வயதாக தன்னால் கதிர்காமத்துக்குச் சென்று கந்தப் பெருமானை வழிபட முடியூமா? என்ற கவலை அவனை வாட்டியது. ஒரு நாள் இத்தகைய கவலையூடன் அவன் கந்தப் பெருமானை வணங்கி விட்டு கோயிலுக்கருகாமையில் இருந்த கதிர மரத்தடியில் உறங்கிப் போய் விட்டான். அன்றிரவில் அவன் கனவில் வந்த முருகன்  கவலையை விட்டு ஊருக்குப் போகும் படியும்  ஊரில் நல்ல தகவல் கிடைக்குமென்றும் அருளிச் சென்றார்.
கந்தப்பெருமானில் நம்பிக்கை கொண்டிருந்த அவன் நிம்மதியூடன் ஊர் திரும்பினான். ஊர் திரும்பியவனுக்கு ஒரு விசித்திரமான செய்தி கிடைத்தது. 'எம்பக்க' என்ற கிராமத்து தச்சன் ஒருவன் கதிர மரம் ஒன்றை தரிசித்தபோது ஐந்தாறு அடி உயரத்துக்கு அதில் இருந்து இரத்தம் சீறிப் பாய்ந்ததாம். உடனே அவ்விடத்துக்குச் சென்ற வாத்தியக்காரன் கதிர்காமக் கந்தன் தனக்கு காட்சியளித்து சொன்ன செய்தியைக் கூற தச்சன் அறுசுவையூடன் உணவூ படைத்தான். வாத்தியக்காரன் பெர வாத்தியம் இசைத்து வழிபடத் தொடங்கினான். இன்றும் கூட இங்கு மூன்று வேளை பூசை வழிபாடுகள் உணவூப் படையலுடனும் பெர வாத்திய இசையூடனுமே நடைபெறுகின்றது. கோயிலின் பிரதான மண்டபம் விசாலமாகவூம் பெர வாத்தியம் இசைக்கவூம் ஆடிப்பாடவூம் ஏற்ற விதத்தில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு
கி.பி. 1370 ஆம் ஆண்டு கம்பளை இராச்சியத்தை 3 ஆம் விக்கிரமபாகு மன்னன் ஆட்சி செய்தபோது மேற்படி எம்பெக்க என்ற இடத்தில்  கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு இடம்பெற்று வருவதைக் கண்ணுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடையும்  உதவி உபகாரங்களும் செய்துள்ளான்.
பின்னர் இத்தேவாலயத்தைக் கண்டு களிக்க மன்னன் தனது பல்லக்கில் ஏறி அவ்விடத்துக்கு விஜயம் மேற்கொண்டான். எனினும் அவன் திரும்பிச் செல்ல முற்பட்டபோது பல்லக்கு ஒரு பக்கம் ஒடிந்து சாய்ந்து கொண்டதால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனை வெறுமனே சாதாரண நிகழ்வாகக் கருதாத மன்னன் யானைத் தந்தங்களுடனும் வெள்ளிப் பூச்சுக்களுடனும் கூடிய அந்த விலையூயர்ந்த பல்லக்கினை மேற்படி தேவாலயத்துக்கே அன்பளிப்புச் செய்தான் என்று சொல்கிறது இக்கோயிலின் இன்னுமொரு வரலாறு .


 இப்பல்லக்கு இன்றுவரையும் பூஜைப் பொருளாக இருந்து வந்துள்ளதுடன் இன்று இக்கோயிலின் அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரும் அரசன் தனது பட்டத்து ராஜ குஞ்சரங்களின் தந்தங்களை இக்கோயிலுக்கு வழங்கியதுடன் தேவாலயத்தின் பணிகளுக்கென 67 பேரை நியமித்தான். இன்றும் இக்கோயிலின் நிர்வாகத்தை அரத்தன பணிக்கி என்ற பெர வாத்தியக்கார வம்சத்தினரே கவனித்து வருகின்றனர். இக்கோவிலின் பூந்தோட்டத்தினை கவனித்துக் கொண்டிருப்பவர்கள். 'கங்காணி வீட்டு' (கங்காணிகெதர) பரம்பரையினர் ஆகும்.
 பிரதான நிர்வாகிகளாக விதானை ஒருவரும்இ வண்ணக்குரால என்பவரும் நிலமேயால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கம்பளை வரலாற்றுக் காலம் இலங்கை வரலாற்றாசிரியர்கள் இலங்கை வரலாற்றின் கம்பளைக் காலத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதில்லை என்றாலும் இக்காலத்தில் இடம்பெற்ற பல நிகழ்வூகள் இப்போதும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன. 


குறிப்பாக இலங்கையின் கலை இலக்கிய வளர்ச்சி தொடர்பான சிறப்புகள் இக்காலத்தில் பதியப்பட்டுள்ளன.
இலங்கை வரலாற்றின் இதுவரை காலம் இருந்து வந்த சமஸ்கிருத பாளி மொழிகளின் செல்வாக்கு குறைந்து சிங்கள மொழி இலக்கியங்கள் வளர்ச்சிபெற்றன. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் வட பகுதியில் முஸ்லிம் ஆதிக்கம் அதிகரித்ததால் வட மொழி செல்வாக்கிழந்தமை ஒரு புறமும் மறுபுறம் தென்னிந்தியாவில் எழுச்சி பெற்ற விஜய நகரப் பேரரசு திராவிட மொழிகளை ஊக்குவித்தமையூம் இலங்கைக்கும் விஜய நகர பேரரசுக்கும் ஏற்பட்ட உறவுகளும்  ஆகும்.
விஜய நகர பேரரசு வைஷ்ணவ மதத்தை ஆதரித்ததால் அதேகாலப் பகுதியில் இலங்கையிலும் விஷ்ணு (உபுல்வன் தெய்வம்) தெய்வ வழிபாடு பரவலாயிற்று. இதற்கு மற்றுமொரு காரணம் சீதாவாக்கை காலம் முதல் கம்பளை அரசு காலத்தில் அழகக்கோனார் என்ற தமிழ் கோனார்கள் அரச அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தியமையூம் அரசர்கள் தென்னிந்திய பாண்டிய அரச வம்சத்தில் இருந்து பட்டத்து ராணிகளை கொண்டிருந்தமையூம் ஆகும்.
மறு புறத்தில் இந்தியாவில் முஸ்லிம் அரசர்களின் ஆதிக்கம் பெருகிய போது கல் தச்சர்களும் மரச் சிற்பக் கலைஞர்களும் இலங்கையில் வந்து குடியேறியூள்ளனர். இவர்களைக் கொண்டு அரசர்கள் விகாரைகள்இ தேவாலயங்கள் அமைத்தபோது அவற்றில் திராவிட கலை மரபுகள் பொதிந்து காணப்பட்டன. கண்டிக்கும்இ கம்பளைக்கும் நடுவில் உள்ள எம்பெக்கஇ லங்காதிலக்கஇ கடலாதெனிய ஆகிய தேவாலயங்களில் இத் திராவிட கட்டிடக்கலை மரபுகளைக் காணலாம்.
இவற்றில் புத்தபெருமானின் சிலையூடன் விஷ்ணு (உப்புல்வன்) விபீசனன் ஸ்கந்தகுமார (முருகன்) கணேசர் (கணபதி) ஆகியவர்களின் சிலைகளும் புறச் சுவர்களில் வைத்து நிர்மாணிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தமிழ் இலக்கிய மரபுகளையொட்டி தூதுக் காவியங்கள் (சந்தேசய) பல தோன்றின. பரவிசந்தேசய (புறாவிடு தூது) அத்தகைய நூல்களில் பெயர் பெற்றது.
தேவாலயத்தின் பணி செய்பவர்களாக நியமிக்கப்பட்டுள்ள பத்து பங்குக்காரர்கள் 
1.கங்காணி வீடு  
2.வீதியே வீடு 
3.முல்கம்பல வீடு
4.கற்பலகை வீடு 
5.மனந்திவெல 
6.சியம்பலாகொட
7.ரன்கம 
8.தும்பக்கே 
9.தொடந்தெனிய 
10.தலவத்துர ஆகிய வீடுகள்.இவர்கள் இணைந்து விமரிசையாக வருடாந்த பெரஹெர வைபவத்தை செய்து வருகின்றார்கள்.


கட்டிடக்கலை மிளிரும் கலையம்சங்கள்
தேவாலயத்தின் கட்டிடத் தொகுதி எட்டு பிரிவூகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ரிட்டா கெதர (ஆபரணங்கள் வைக்கும் அறை) மற்றும் சிங்காசன மண்டபம் என்பன தேவாலயத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய வாகல்கட (நுழைவாயில்) மகா தேவாலயம் (கீழ் தேவாலயம்) முழுத்தென்கெய (மண்டபம்) அட்டுவ (நெற்களஞ்சியம்) புதுகெய (புத்தபெருமான் கோயில்) என்பனவாகும்.
தேவாலயத்தின் கலை வேலைபாடுகள் கொண்ட சிங்காசன மண்டபம் தேவாலயத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் நுழைவாயிலுக்கருகே காணப்படுகின்றது. சற்றே மேட்டு நிலத்தில் சிங்காசன பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பெரஹெர காலத்தில் தேவ ஆபரணங்கள் அதில் அலங்கரிக்கப்பட்டு மன்னன் சிங்காசனத்தில் இருந்து வீதி வலத்தை கண்டு களிப்பான் என்று சொல்லப்படுகின்றது.கோவில் வளவுக்குள்  பிரவேசிக்கும் நுழைவாயில் வாயில் மண்டபம் என்பது மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் பொருந்திய தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கூரை அமைக்கப்பட்டு அவற்றுக்கு மேல் துண்டு துண்டுகளாக சிவந்த ஓடுகள் நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த நுழைவாயில் மண்டபத்தின் மரத் தூண்களின் இரட்டை அன்னப் பறவைகள்இ யானைக் குஞ்சரம் நாகணவாய்ப்பறவை நீண்ட தந்தங்கள் கொண்ட யானை தாய் சேய் அரவணைப்பு வைரவர் போன்ற உருவங்கள் நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.
 
தேவாலயத்தின் அமைப்பு
பிரதான தேவாலயம் ஐந்து வேறு வேறான கட்டிடங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன:
1. பெர வாத்தியக்கார மண்டபம்
2. சந்தனக் கூடம்
3. இடைக்கூடம் அல்லது மத்திய கூடம்
4. பிரித் ஓதும் பண்டபம்
5. கர்ப்பக்கிருகம் அல்லது பிரதிஷ்டா மாளிகை
பெர வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும் முன் மண்டபம் சற்று நீண்டதும் அகலமானதுமாகும். இதன் நீளமான பக்கத்தில் ஆறு தூண்களும்இ அகலமான பக்கத்தில் நான்கு தூண்களும் கூரையைத் தாங்கி நிற்கின்றன.
அதனைத் தவிர உட்புறம் நான்கு பக்கத்திலும் வரிசையாக மொத்தம் 32 தூண்கள் மேலும் கூரையைத் தாங்கி நிற்கின்றன. கூரையைத் தாங்கும் தூண்களுக்கும் கூரைக்கும் இடையில் இணைப்புப் பாலங்களாக சமாந்தரங்களாக இடது புறமாகவூம் வலது புறமாகவூம் 7 ஜோடித் தூண்கள் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ளன.
கூரையில் அகலவாக்கில் 12 பராலைகளும் நீளவாக்கில் 66 பராலைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர கூரையின் இறங்கு பிரதேசத்தைப் பிரித்து அவற்றில் இரு புறமும் நீளவாக்கில் 41 பராலைகளும் மேற்படி எல்லா தூண்களும் இந்தியாவின் கேரளத்தில் இருந்து தருவிக்கப்பட்ட நன்கு முற்றிய வேங்கை மரங்களில் இருந்து குடைந்தெடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. இச்சித்திர வேலைப்பாடுகளை உருவாக்குவதற்கு தலைமைச் சிற்பியாகச் செயற்பட்டவர் தெல்மட தேவேந்திர மூலாச்சாரியார் என்றும் இவர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் இறுதிப் பகுதியில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தவர் திராவிட கட்டிட பாணியில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர் .அவரது தலைமையின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்பிகள் இத்தூண்களில் மரச் சித்திர வேலைப்பாடுகளை செய்துள்ளனர்.மொத்தம் -514


அகலவாக்கில் 12 பராலைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பாராலைகள் அனைத்தும் கூரையின் உச்சியில் இருந்து நாலாபுறமும் விரிந்துஇ ஒரு குடையை விரித்து வைத்த மாதிரி கூரையைத் தாங்கி நிற்கும் கிடையான தூண்களின் மேல் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கூரையின் உச்சியில் "குருப்பாவை' என்றழைக்கப்படும் உத்தரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும்.
கலை அம்சம் கொண்ட பூமடலுடன் செதுக்கப்பட்டுள்ள இத்தகைய 'குருப்பாவை' யூடன் கூடிய உத்தரத் தூண் வேறு எங்குமே கிடையாது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால் இதனை எம்பெக்க தேவாலயத்துக்கு மட்டுமே உரித்தான விசேட கலை சிருஷ்டியாகக் கருதப்படுகின்றது. அதன் மற்றுமொரு சிறப்பம்சம் எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரப் பொறிமுறை வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையும் அமைக்கப்பட்டுள்ளமையாகும்.
மரச் சிற்பக்கலை உயர் கலைநுட்பங்கள் கோவில் எங்கும் கலை நுணுக்கங்கள் பொங்கிப் பிரவகித்துக் கிடந்தாலும் பெர வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும் முன் மண்டபமே கலைச் சிருஷ்டியின் அச்சாணியாகத் திகழ்கின்றது. முன் சொன்னபடி இம்மண்டபத்தில் காணப்படுகின்ற கலை நுணுக்க வேலைப்பாடுகளை பின்வருமாறு பிரிக்கலாம்.
1. ஒரு தூணில் 4 என 32 தூண்களில் காணப்படும் மரச் சித்திர   செதுக்கல்கள்- 128
2.ஒரு தூணில் 8 என 32 தூண்களில் காணப்படும் சீவல் மர செதுக்கல்கள்   256
3.தூண் உச்சியில் செதுக்கப்பட்டுள்ள அலங்கார தாமரை மலர் வடிவங்கள் -64
4. உத்தரத் தூண் மரச் சித்திர செதுக்கல்கள்- 30
5. உத்தர கிடைத் தூண் மரச் சித்திர செதுக்கல்கள் -36

இலங்கை வரலாற்றில் தமிழர்களுடைய செல்வாக்கு சிங்கள பகுதியில் எப்படி இருந்தது என்பதற்கு எம்பக்க மிகச் சிறந்த சாட்சி ...