Showing posts with label சங்ககாலம். Show all posts
Showing posts with label சங்ககாலம். Show all posts

Friday, December 7, 2012

கடல் தின்ற நம் நிலம்- 2,குமரி அழிவு பற்றி கூறும் நம் தமிழ் இலக்கியங்கள்


குமரி அழிவு பற்றி கூறும் நம் தமிழ் இலக்கியங்கள்


தேடல்கள் எப்போதும் நம் இலக்குகளை அடைய செய்து விடும்.இது எல்லைக்கல் பகுதிக்கு நூற்றுக்கு இருநூறு வீதம் சரியாகி போய்விட்டது.தமிழர் வரலாற்றில் பல ஓட்டைகள் இருந்தாலும் அந்த ஓட்டைகள் அடைக்கபடாமைக்கு தேடல் இன்மையும் வரலாற்று ஆசிரியர்களில் ஒற்றுமையாக,நம்பத்தகுந்த ,பல்துறைகளிலும் வரலாற்றை நோக்காதது ஒரு காரணமாக இருக்கலாம்.
அவற்றை உடைக்கவே எல்லைக்கல் எல்லாத்துறை ஆதாரங்களுடன் நம் வரலாற்றை தேட ஆரம்பித்தது .சென்ற வாரம் குமரி எப்படி அழிந்திருக்கலாம் என்று அறிவியல் ரீதியாக பார்த்தோம்.உலகில் சில விடயங்கள் புதிராக இருந்தாலும் எங்கோ ஒரு இடத்தில் அதற்க்கான விடை இருக்கும்.என்னதான் நம் குமரி எனும் வரலாற்று புதையல் பற்றி நாம் அறிவியல் ஊகங்களை வெளியிட்டாலும் , எழுத்து மூலமான குறிப்புகள் எப்போதும் நம்ப தகுந்தவை.
குமரிக்கும் அப்படியான அழிவு குறிப்புக்கள் நம்முடைய முன்னோர்கள் பதிவு செய்து விட்டனர்.குமரி அழிவுக்கு பின் தப்பி பிழைத்த மற்றும் அதன் பின் வந்த மக்கள் தங்களது இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த இலக்கிய பதிவு தொடர்பாக ஆராய்ந்த மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பேரா.கா.சுப்பிரமணியப்பிள்ளை ஆகியோர் நமது பண்டைய பின்வருவன வற்றை கண்டு பிடித்தனர்.

 சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
    அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
   புறநானுற்றில்  பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)எனவும்.
வேறு ஒரு இடத்தில்
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
 "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் அழிந்த பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்பு வரி,
"வட வேங்கடந் தென்குமரி"எனவும்.
 கலித்தொகையில்
 "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)எனவும் குறிப்பிடுபவை

 குமரிக்கண்டத்தை கடல்கொண்டதை குறிக்கிறது என்றும் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

இவ்வாறு குமரி அழிவு பற்றி கூறப்பட்ட இலக்கியங்களின் உண்மைதன்மைகள் கேள்விக்குரியவைதான் .(எல்லா இலக்கியங்களும் அப்படித்தான் இன்றுவரை ) ஆனாலும் இலக்கியங்கள் மக்கள் வாழ்வியலையும் மனத்தாக்கங்களை அடிப்படையாக கொண்டு எழுபவைதான்.குமரி அழிவு என்பது நிச்சயம் அம் மக்களை பாதித்து இருக்கும். அதன் வெளிப்பாடுகளாகத்தான் இவை இருக்கும்.

Friday, November 9, 2012

கடல் தின்ற நம் நிலம்

கடந்த வாரங்களில் மலை முரசில் வெளிவந்த  எல்லைக்கல் பகுதிக்கான தேடலில் முடிவு


எங்கள் வரலாற்றை தேடிக்கொண்டிருக்கும்  எல்லைக்கல்  கி.மு  20000 ஆண்டுகளுக்கு முன்னரான நம் வரலாற்றை இவ்வாரத்தில் இருந்து தேடத்தொடங்குகிறது.
இதுவரை இலங்கை தமிழர் வரலாறு என்பது இன்று வரை கிடைக்கபெற்ற கல்வெட்டுக்கள் ,பாளி நூல்கள் ,மற்றும் சில பிற்கால வராலற்று குறிப்புக்கள் அடிப்படையாக கொண்டுதான் தீர்மானிக்கப்படுகின்றன.
எது எவ்வாறாயினும் ஈழத்தின் வரலாறு சொல்லும் பாளி நூல்களின் காலத்துக்கு முன்னரான  எம் வரலாறு என்ன?
இலங்கை வரலாறு கூறுவதாக சொல்லப்படும்  பாளி நூல்கள் அனைத்தும்  கி.பி 3ம் நூற்றாண்டுக்கு பிறகு நடந்த வரலாற்று விடங்களைத்தான் கூறுகின்றன.இக்காலப்பகுதிக்கு முன்னரான எம் வரலாற்றை தேட நாம் எந்த காலப்பகுதியை எடுத்துகொள்ள போகிறோம் என்ற பிரச்சனை இருக்கிறது.எதற்கெடுத்தாலும் நாம் 2000,3000 ஆண்டு பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு அறிவியல், மானுட ரீதியில் நம் வரலாற்றை தேடினால் என்ன?
உலகில் அநேகமான இனங்களின் உருவாக்கமும் அவர்களின் தாய் நிலங்களும் இனம்காணப்பட்டு விட்டன.ஆனால் தமிழர்களில் உருவாக்கம் இன்னும் வரலாற்றுக்கு சூனியமே.அதிலும் இலங்கை தமிழரின் உருவாக்கம் மற்றும் தாய்நிலம் தொடர்பான வரலாறு  இன்றுவரை மறைப்பெருமதியில்தான்.தமிழர்(திராவிடம்) என்ற இனம் உலகில் தோன்றிய முதல் குடி என்பதால் என்னவோ அவர்கள்  உருவாக்கத்தை தேடினால் தேடல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
ஆனாலும் ஸ்காட் எலியட்' (W. Scott Elliot) போன்ற  சில வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் நம்முடைய தாய் நிலத்தை அறிவியல் ரீதியாக கிட்டதட்ட நிருபித்து விட்டனர்.
கி.மு. 17000 – 10000 காலப்பகுதியில் கடல்கோளினால் அழிக்கப்பட்டு இன்று அமைதியாக கடலுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் அன்றைய காலத்தில் பிரமாண்டமாக இயங்கிகொண்டிருந்த குமரிக்கண்டம்தான்(லெமூரியாக் கண்டம்) அவர்கள் கூறும் நம் தாய் நிலம்.

 குமரிக்கண்ட அறிமுகம்
.கி.மு. 17000 - 10000 ஆண்டுகளுக்கு முன்னர்  உலகிற்கு கலாச்சாரத்தை பாரிய நிலப்பரப்பில் இருந்து கொண்டு உற்பத்தி செய்த தமிழ் பேசும்  கூட்டத்தாரின் நிலப்பகுதிதான் இந்த குமரிக்கண்டம்.இன்று தனி நாடுகளாகி இருகின்ற இலங்கை, இந்தியா ,மடகஸ்கார் ,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் நிலப்பகுதியை உள்ளடக்கியதுதாக காணப்பட்டது.
1960-ம் ஆண்டு அமெரிக்கா பிரான்ஸ் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள்  மலைகளும் நீரோட்டங்கள் சில கட்டிட எச்சங்களும்   இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு அமெரிக்க தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குமரிகண்டத்தின்  வரைபடத்தை வெளியிட்டனர்

குமரிக்கண்டத்தின் நாடுகளும் நகரங்களும்  
இக் கண்டம் எழு நாடுகளாக அமைந்து காணப்பட்டன அவையாவன ,
·         ஏழு தெங்க நாடு
·         ஏழு மதுரை நாடு
·         ஏழு முன்பலை நாடு
·         ஏழு பின்பலை நாடு
·         ஏழு குன்ற நாடு
·         ஏழு குனக்கரைநாடு
·         ஏழு குறும்பனை நாடு
இவ் ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் இன்றைய ஈழம்  உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்ததிருக்கிறது . அதில்,வடமதுரைதான் இதன் முதல் தலைநகராக இருந்தாதாக கூறப்படுகிறது.அது மட்டும் அல்லாது

·         தென்மதுரை
·         கபடாபுரம்
·          முத்தூர்
என்பன முக்கிய நகரங்களாக இருந்திருக்கின்றன.


சென்ற வார தொடர்ச்சி ......
கடலின் ஆழத்தில் புதைந்து காணப்படும் வரலாற்று புதையல்களில் மர்மங்களும் புதிர்களும் நிறைந்தது குமரிக்கண்டம்.இது வரை காலமும் குமரி தொடர்பான ஆராட்சிகளில் இடுபட்ட இந்திய மற்றும் மேலைநாட்வர்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் குமரிக்கண்டம் என்ற தமிழ் கண்டம் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.எது எவ்வாறாயினும் எல்லைக்கல் 20000 வருடம் பழமையான  புதிரை அவிழ்க்க முனைகிறது.
குமரிக்கண்ட அறிமுகம்
.கி.மு. 17000 - 10000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகிற்கு கலாச்சாரத்தை பாரிய நிலப்பரப்பில் இருந்து கொண்டு உற்பத்தி செய்த தமிழ் பேசும்  கூட்டத்தாரின் நிலப்பகுதிதான் இந்த குமரிக்கண்டம்.இன்று தனி நாடுகளாகி இருகின்ற இலங்கை, இந்தியா ,மடகஸ்கார் ,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் நிலப்பகுதியை உள்ளடக்கியதுதாக காணப்பட்டது.
1960-ம் ஆண்டு அமெரிக்கா,பிரான்ஸ்,ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள்  மலைகளும் நீரோட்டங்களும் சில கட்டிட எச்சங்களும் இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு அமெரிக்க தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குமரிகண்டத்தின்  வரைபடத்தை வெளியிட்டனர்.
அதில் குமரிக்கண்டத்தின் நாடுகளும் நகரங்களும் மலைகளும் ஆறுகளும் குறிக்கப் பட்டன.

குமரிக்கண்டத்தின் நாடுகளும் நகரங்களும் 
இக் கண்டம் எழு நாடுகளாக அமைந்து காணப்பட்டன அவையாவன ,
              ஏழு தெங்க நாடு
              ஏழு மதுரை நாடு
              ஏழு முன்பலை நாடு
              ஏழு பின்பலை நாடு
              ஏழு குன்ற நாடு
              ஏழு குனக்கரைநாடு
              ஏழு குறும்பனை நாடு
இவ் ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் இன்றைய ஈழம்  உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்ததிருக்கிறது . அதில்,வடமதுரைதான் இதன் முதல் தலைநகராக இருந்தாதாக கூறப்படுகிறது.
அது மட்டும் அல்லாது தென்மதுரை ,கபடாபுரம் ,முத்தூர் என்பன முக்கிய நகரங்களாக இருந்திருக்கின்றன.




குமரிக்கண்டத்தின் மலைகளும் ஆறுகளும்
குமரி கண்டத்தின் ஒரு அங்கமாக இருந்ததுமான  இன்று  இந்து சமுத்திரத்தின் ஆழத்தை குறைத்து கொண்டு குமரிக்கோடு,மணி மலை என்ற  இரு மலைகள் காணப்படுகின்றன.குமரிக்கண்டத்தில் காணப்பட்ட பொதிகை மலை(தமிழ்நாடு) மற்றும் சிவனொளிபாதமலை(இலங்கை)இன்றும் நம் கண்முன்னே. 
அதுமட்டும் அல்லாது குமரிக்கண்டதில் பறுளி,குமரி என்ற இரு பாரிய நதிகளும் இருந்திருக்கிறது.
இதில் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் இதில் குறிப்பிட்ட நகரங்களும் ஆறுகளும் மலைகளும் இன்றுவரை கண்டு பிடிக்கப்பட்டவதான். 
உலகம் உண்டாக காரணமாக இருந்த பிரபஞ்ச பெரு வெடிப்பில் இருந்து உலகம் ஒரே  மாதிரியாக இருக்கவில்லை.அப்படி இருந்திருந்தால் மனிதன் என்ற விலங்கு உட்பட எந்த உயிரினங்களும் இந்த பூமியில் தோன்றி இருக்காது.பூமியின் பௌதிகமும் காலநிலையும்  மாற பூமியும் மாறி கொண்டு வந்திருக்கிறது.
அப்படியான பல மாறுதல்கள் நம் குமரிக்கண்டத்தை கடலுக்கு கொடுத்து விட்டன.



நம் குமரிக்கண்டதிற்கு என்ன நடந்தது?பரந்து விரிந்த பாரிய நிலப்பரப்பு ஒரே இரவில் கடலுக்குள் சென்றுவிட்டதா?

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களில் உருவாக்கங்களும் கேள்விக்கு உரியவைதான்.அப்படியான ஒன்றுதான் நம் பூமியும் .இது உருவாகிய காலத்தில் இருந்து ஏதோ ஒரு மாற்றத்தை உள்வாங்கி கொண்டுதான்  வந்திருக்கிறது.இந்த மாற்றங்களுக்குரிய காரணத்தை சரியாக வரையறை செய்ய இக்கால விஞ்ஞானத்தால் கூட முடிய வில்லை.ஏதோ ஒரு சக்தி நம் பூமியை ஆட்டிப்படைக்க நம் பூமியும் அதன் சொல்ப்படி நடந்து கொண்டு இருக்கிறது.
குமரியை எப்படி கடல் தின்றது?
குமரிக்கண்டம் கண்ட அழிவு குறிப்பிட்ட ஒரு நாளிலோ அல்லது ஒரு நேரத்திலோ இடம்பெறவில்லை.அது கட்டம் கட்டமாக பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்த பூமியின் காலநிலை மற்றும் பௌதிக மாற்றங்களால் நிகழ்திருக்கிறது.
எந்த நிகழ்வு முதலில் ஏற்பட்டது என்பதை கூற முடியாவிட்டாலும்..காரணங்களை என்னவென்று புவியியல் மற்றும் அறிவியாலார்கள் கருத்தின் அடிப்படையில் கூறமுடியும்..
, உலகத்தில் வாழும் உயிரினங்கள் மற்றும் பஞ்ச பூதத்தின் அங்கங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி குமரிக்கண்டம் அழிய தொடங்கிய காலப்பகுதியான கி.மு. 17000 10000 காலப்பகுதியில் இருந்து பல பாரிய புவியியல் மாற்றங்களை இந்த உலகம் காணத்தொடங்கி விட்டது.இன் நாட்களில் குமரியில் மட்டும் அல்ல உலகின் பல பகுதிகளில் மாறுதல்கள் ஏற்பட தொடக்கி விட்டது
அவ்வாறு குமரிக்கண்டம் அழிவதற்கு என்ன காரணங்கள் இருந்திருக்க முடியும் வாருகள் பயணிப்போம் குமரியின் அழிவு நாட்களை நோக்கி ...
நான் குறிப்பிட போகும்  காரணங்கள் அனைத்தும் இதுவரை புவியியல் ஆராய்ச்சியாளர்களால் நிருபிக்கபட்டவை.
பல மூலக்கூறுகளில் இணைவுதான் நாம் வாழும் பூமி.அதிலும் பூமியில் உள்ள கடல்களும்  நிலப்பரப்புக்களும் பல முலக்கூறுகளை கொண்ட புவித்தட்டுக்கள் மேல்தான் உள்ளன. இப் புவிதட்டுக்கள் இணைத்தவை அல்ல இவை அனைத்துக்கும் இடையில் சிறிய இடைவெளி காணப்படும்.அதுமட்டும் அல்லது இவ் இடைவெளிகளுக்கு இடையில் சிறிய அசைவு காணப்படும்.அவ் சிறிய அசைவு, பாரிய அசைவாக உருவாகும் போது  நிலநடுக்கமாகவோ அந்த நிலநடுக்கம் ஆழிப்பேரலையாகவோ உருவாகும்.இது நாம் எல்லோரும் அறிந்த விடயம்.
குமரிக்கண்டம் இருந்த பகுதியில் நான்கு புவித்தட்டுகள் இணைவுகள்  காணப்படுகின்றன.இப்பகுதியில்  நிலநடுக்கம் உண்டாக்குவதற்கு சாத்தியங்கள் மிக மிக  அதிகம்.
அவ்வாறன புவித்தட்டு பாரிய அசைவுகள் தொடர்ந்து இடம் பெரும் போது.
இரண்டு இயற்கை அழிவுகளை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஒரு காரணம்  பாரிய நிலத்தட்டு அசைவு (நிலநடுக்கம்)மிகப்பெரிய  ஆழிப்பேரலையை உண்டாக்கி இருக்கலாம்.
இரண்டாவது காரணம் நிலத்தட்டுக்கள் அசைவு காரணமாக பாரிய நிலப்பிரிவு ஏற்றபட்டு கடல் நீர் உட்புகுந்திருக்கலாம்.
அதுமட்டும் அல்லாது அறிவியாலார்கள் இன்னும் ஒரு காரணத்தை சொல்லுகின்றனர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த பனி யுகத்திற்கு பின் வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து தாழ்வு நிலநடுக்கத்தால் உண்டான பிளவுகளுக்குள் கடல் உட்புகுந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம்.
இவ்வாறன இயற்கை அழிவுகள் மற்றும் நம் அறிவுக்கு எட்டாத பல நிகழ்வுகள் பல தடைவகள் ஏற்பட்டதால் குமரிக்கண்டம் கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் சென்றிருக்கிறது.


இன்னும் தேடுவோம் தோழர்களே !!!!!!!