Friday, December 7, 2012

கடல் தின்ற நம் நிலம்- 2,குமரி அழிவு பற்றி கூறும் நம் தமிழ் இலக்கியங்கள்


குமரி அழிவு பற்றி கூறும் நம் தமிழ் இலக்கியங்கள்


தேடல்கள் எப்போதும் நம் இலக்குகளை அடைய செய்து விடும்.இது எல்லைக்கல் பகுதிக்கு நூற்றுக்கு இருநூறு வீதம் சரியாகி போய்விட்டது.தமிழர் வரலாற்றில் பல ஓட்டைகள் இருந்தாலும் அந்த ஓட்டைகள் அடைக்கபடாமைக்கு தேடல் இன்மையும் வரலாற்று ஆசிரியர்களில் ஒற்றுமையாக,நம்பத்தகுந்த ,பல்துறைகளிலும் வரலாற்றை நோக்காதது ஒரு காரணமாக இருக்கலாம்.
அவற்றை உடைக்கவே எல்லைக்கல் எல்லாத்துறை ஆதாரங்களுடன் நம் வரலாற்றை தேட ஆரம்பித்தது .சென்ற வாரம் குமரி எப்படி அழிந்திருக்கலாம் என்று அறிவியல் ரீதியாக பார்த்தோம்.உலகில் சில விடயங்கள் புதிராக இருந்தாலும் எங்கோ ஒரு இடத்தில் அதற்க்கான விடை இருக்கும்.என்னதான் நம் குமரி எனும் வரலாற்று புதையல் பற்றி நாம் அறிவியல் ஊகங்களை வெளியிட்டாலும் , எழுத்து மூலமான குறிப்புகள் எப்போதும் நம்ப தகுந்தவை.
குமரிக்கும் அப்படியான அழிவு குறிப்புக்கள் நம்முடைய முன்னோர்கள் பதிவு செய்து விட்டனர்.குமரி அழிவுக்கு பின் தப்பி பிழைத்த மற்றும் அதன் பின் வந்த மக்கள் தங்களது இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த இலக்கிய பதிவு தொடர்பாக ஆராய்ந்த மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பேரா.கா.சுப்பிரமணியப்பிள்ளை ஆகியோர் நமது பண்டைய பின்வருவன வற்றை கண்டு பிடித்தனர்.

 சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
    அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
   புறநானுற்றில்  பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)எனவும்.
வேறு ஒரு இடத்தில்
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
 "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் அழிந்த பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்பு வரி,
"வட வேங்கடந் தென்குமரி"எனவும்.
 கலித்தொகையில்
 "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)எனவும் குறிப்பிடுபவை

 குமரிக்கண்டத்தை கடல்கொண்டதை குறிக்கிறது என்றும் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

இவ்வாறு குமரி அழிவு பற்றி கூறப்பட்ட இலக்கியங்களின் உண்மைதன்மைகள் கேள்விக்குரியவைதான் .(எல்லா இலக்கியங்களும் அப்படித்தான் இன்றுவரை ) ஆனாலும் இலக்கியங்கள் மக்கள் வாழ்வியலையும் மனத்தாக்கங்களை அடிப்படையாக கொண்டு எழுபவைதான்.குமரி அழிவு என்பது நிச்சயம் அம் மக்களை பாதித்து இருக்கும். அதன் வெளிப்பாடுகளாகத்தான் இவை இருக்கும்.

No comments:

Post a Comment