Saturday, December 8, 2012

குமரி வரலாற்றில் ஈழத்தின் பங்கு என்ன-கடல் தின்ற நம் நிலம்-பாகம் மூன்று


.அழிந்த குமரிக்கும் ஈழத்திற்க்கும் என்ன சம்பந்தம்

இக்கேள்விக்கு பதில் குமரி இருந்ததாக கூறப்படும் இடத்தின் வரைபடத்தை பார்த்தாலே புரிந்து விடும்.மடகஸ்கார் அவுஸ்ரேலியா இந்தியாவை இணைத்த குமரியில் நடுப்பகுதிதான் இலங்கை.
இவற்றை புவியியல் ரீதியாக நிருபித்து விட்டாலும்...சுவாரசியாமான இன்னுமொரு ஆதாரமும் உண்டு.
சித்தர்கள் என்ற சொல் என்றும் தமிழர் வரலாற்றுடன் தொடர்புடையது. சித்தர்கள் என்பவர்கள் பல்துறை உயர் அறிவு கொண்டவர்களாக காணப்பட்டவர்கள் இன்றைய அறிவியலை விஞ்சும் சக்தி அவர்களிடம் இருந்ததாக சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நம் குமரிக்கண்டத்தில் இது வரை நான்கு சிறப்பு வாய்ந்த சித்தர்கள் இருந்திருக்கிறார்கள்
•             காகபுசுண்டர்
•             அகத்தியர்
•             போகர்
•             மகாவதார பாபா
நான் ஏன் சித்தர்களை பற்றி கூறினேன் என்றால் இந்த சித்தர்களின் ஒருவர்தான் குமரிக்கும் ஈழத்திற்கு பிணைப்பை உறுதி செய்கிறார்.
வாசித்த உடனே சில பேர் புரிந்திருப்பீர்கள் அது அகத்தியர்தான் என்று ..
அகத்தியரை குறு முனியாக அறிமுகப்படுத்தும் சமய புராணங்கள்,அகத்தியரது குறிப்புகளையையும் தகவல்களையும் மிகைபடுத்தல்களுடனும் புனைவுகளுடனும் தராமல் இல்லை.அது மட்டும் அல்லாது புராணங்கள் தவிர்ந்த சில இந்திய சித்தர்கள் பற்றிய குறிப்புக்களின் ஆணி வேர்கள் அகத்தியரில்தான் முடிகின்றன.
அகத்தியர் என்ற குமரிக்கண்ட  காலத்து மனிதர் சகலகலாவல்லவன் என்பதால் அவர் எந்த துறை சார்த்தவர் என்பதை வரையறுத்து கூறமுடியவில்லை.அவர் எழுதிய நூல்களை பற்றி எழுதப்போனால் குமரி க்கண்டம் பற்றிய தொடர் அகத்தியர் பற்றியதொடராக மாறிப்போகும்.
ஆதலால் வாருங்கள் நாம் நம் குமரிக்கே செல்வோம். அகத்தியர்தான் ஈழத்துக்கும் குமரிக்கும் இருக்கும் தொடர்புக்கு ஆதாரம் என்று சொன்னேன் அல்லவா?சில வேளை உங்களுக்கே தெரிந்திருக்கும் ஈழத்துக்கும் அகத்தியருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன என்பது.
அகத்தியரின் ஈழத்து வருகை பற்றி கூறும் திருக்கரசை புராணம் மிகத்தெளிவாக அகத்தியர் ஈழ வருகை பற்றி கூறுகிறது.சில வேளை சிலர் திருகரசை புராணம் என்பதுபுராணம்தானே .அவைகள்  புனைவுகளும் கற்பனைகளும்தானே என்று கூறலாம். உண்மைதான் புராணங்களில் புனைவுகள் அதிகம்தான்.உறவுகளே ! கடந்த கால சம்பவங்கள் வரலாறுகள் ஆகின்றன.. காலம் செல்லச்செல்ல வரலாறுகள் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் மாறுகின்றன .
இன்றுவரை திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில் உள்ள மூதூர் பகுதியில் அமைந்துள்ள கங்குவேலியில்  (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் ஆதி சிவன் கோவில் காணப்படுகின்றது. அங்கிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் அகத்தியர் ஸ்தாபனமானது மகாவலி கங்கைக் கரையில் வனப்பகுதியில்அமைந்துள்ளது
இங்கு அமைந்துள்ள கற்தூண்களும், அகத்தியர் ஆலயமும், சிவலிங்கமும், வரலாற்று சான்றுகள் பதிவு செய்கின்றன.(அகத்தியர் ஸ்தாபனத்தின் வரலாறு சோழர் காலம் வரை நீள்கிறது)
திருமலையை சென்றடைந்த அகத்தியர், அங்குள்ள கங்குவேலிப் பகுதியில் சிவலிங்கம் அமைத்து, தனது தவவலிமையால் கைலை மலையை வழமைக்கு கொண்டு வந்ததோடு, அங்கிருந்தவாறே சிவன் பார்வதி திருமணத்தை தரிசித்ததாகவும் புனைவு கதைகள்  உள்ளன.
இதன் பின்னர் திருமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தற்பொழுது மாவிலாறு என்று அழைக்கப்படும் அகத்தியனாற்றில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் ஐதீகங்கள் கூறுகின்றன.
இது போல இந்திய பெரும் கண்டத்திலும் அகத்தியரை பற்றி பல பல  தடயங்கள் உள்ளன.
இவை அனைத்தையும் இணைத்தால் குமரி என்ற புள்ளியில் முடிகின்றன.ஆகவே மிகக்சாதரணமாக புரிகிறது குமரி காலத்திலும் நம் இருப்பு ஈழத்தில் இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment