Monday, January 30, 2012

மூதூர் குன்றுகள் புதையல் பூமியா? புதைத்த உடல்கள் எரிக்கப்படுவது ஏன்?

கடந்த 24 ஜனவரி 2012 மூதூர் சென்ற போது ஒருதகவலை கேள்விப்பட்டேன்.மூதூர் கிழக்கு கணேசபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 8 நபர்கள் கச்சக்கொடி மலை காட்டுப்பகுதியில் திரிந்து இருக்கிறார்கள் ,அந்த பகுதியில் செனைப்பயிர் செய்பவர்களிடம் சிங்களத்தில் உரையாடி இருக்கிறார்கள்,தாங்கள் போலீஸ் எனவும்  ,மலைப்பகுதிக்கு வரவேண்டாம் எனவும் கூறி இருக்கின்றனர், அவர்கள் நீளமாக முடி வளர்த்து இருந்திருக்கிறார்கள், சந்தேகமடைந்த கிராமமக்கள் கணேசபுர கிராம அபிவிருத்தி சங்க தலைவரிடம் தெரிவிக்க அவர் போலீசார் உதவியுடன் அக்காட்டுப்பகுதிக்கு விரைந்தனர்.எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் அவர்களுடன் செல்ல வாய்ப்பு கிடைத்தது.


கச்சகோடி மலை(குன்று)
இது ஒரு குன்று இதன் தூரம் அகலம் சரியாக தெரியாது!!!ஆனால் திருகோணமலை மாவட்டதின் உயரமான பகுதி. இது மூதூர் கிழக்கு கட்டைபறிச்சான் கிராமத்தில் இருந்து அண்ணளவாக 3KM தூரத்தில் கணேச புரம் என்ற சிறு கிராமத்தில் காணப்படுகிறது.குன்றும் காடும் அதனை சுற்றி வயல்கள் மூதூர் கிராமங்களுக்குரிய அதே அழகு. அந்த குன்றில் இருந்து பார்த்தால் மூதூர் கிராமங்களை  google earth தில் பார்த்த அதே அனுபவம் கிடக்கும்.
சரி சொல்லவந்த விடயத்துக்கு வருகிறேன். நாங்கள் அங்கு சென்ற பொழுது யாரையும் காணவில்லை. ஆனால் பொலிசாரும் மக்களும் எதாவது நடந்திருக்கிறதா என மலையும் அதனை சுற்றி உள்ள பகுதியையும் தேட ஆரம்பித்தனர். திடிரென அங்கு எங்களுடன் வந்த போலீஸ்காரர் ஒருவர் எல்லோரையும் மலையின் நடுப்பகுதியில் உள்ள ஓர் இடத்திற்கு எல்லோரையும் அழைத்தார்.அங்கு சென்று பார்த்தல் 4 அடியில் ஒரு குழி, அது மேலும் ஆழமாக தொண்டபட்டு இருக்கவேண்டும் மீதியை மூடி விட்டார்கள் என்று நினைகிறேன்.அப்போது எல்லோரிடமும் பல கேள்விகள் எழுந்தது.ஏன் தோண்டப்பட்டிருக்கிறது ???புதையலாக இருக்குமோ???அப்படி புதையலாக இருந்தால் எப்படி இவ்வளவு இடம் இருக்க இந்த இடத்தில்தான் புதையல் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும்??? அதற்கும் விடை அந்த இடத்தில் கிடைத்தது அந்த குழிக்கு அருகில் இரண்டு மலையில் புதைந்த கற்கள், இந்த இரண்டு கற்களுக்கு இடையில்தான் இந்த குழி இருந்தது. ஒரு கல்லில் சிறிய ஆமை உருவம் செதுக்கபட்டு இருந்தது.மற்றய கல்லில் சதுர அடையாளம் அது கைபேசியில் உள்ள கஷ்(#)அடையாளம் போல இருந்தது.
என்ன இருந்தது என்று தெரியவில்லை! ஏதாவது இருந்ததா என்றும் தெரியவில்லை! ஆனாலும் ஏதோ ஒன்று எடுக்கப்பட்டு இருக்கிறது,
 இது இரண்டாவது சம்பவம், ஏற்கனவே இம்மலையில் உச்சியில் 2008 காலப்பகுதியில் யாரோ சிலரால் ஒரு பாரிய குழி தொண்டப்பட்டு இருத்தது.இந்த குழியும் அந்த மலையில் உள்ள சில அடையாளம்களின் அடிப்படையில் தோண்டப்பட்டு இருந்தது.அந்த மலையின் உச்சியில் மனிதனால் உருக்கபட்ட நான்கு குழிகள் காணப்படுகின்றன.அந்த குழிகள் கிட்டதட்ட சிறிய உரல் போன்றது. இந்த சிறு குழிகளை  கிராமமக்கள் மூதாதையர் பாவித்த உரல் என்றுதான் நினைத்து வந்தனர். அந்த தோண்டப்பட்ட குழியில் பல செங்கற்களை காணக்கூடியதாக இருந்தது. அது மட்டும் அல்லாது அந்த மலையில் பண்டைய கட்டிட செங்கற்  சிதைவுகள் சில காணப்படுகின்றன.இம் செங்கற்கள் மழையாலும் கற்றாலும் அரிக்கப்பட்டு சிறிய அளவுகள்தான் காணப்படுகிறது. இந்த மலைபகுதியில்தான் எதாவது இருக்கும் என்று கிராமவாசிகளை தவிர்த்த நபர்களுக்கு எப்படி தெரியும்?
அவர்களுக்கான வழிகாட்டி எங்கிருந்து கிடைத்திருக்கலாம் ?
யாரால் புதைக்கப்பட்டு இருக்கலாம்


சவக்குழிகள் தோண்டப்பட்டு உடல் எச்சம்கள் எரிக்கப்படல்
கடந்த சில மாதங்களாக இனம்தெரியாத நபர்களால் கட்டைபறிச்சான் இந்துமாயனத்தில் புதைக்கபட்ட மூன்று உடல் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கபட்டு உள்ளது.நாங்கள் அங்கு சென்று பார்த்த பொழுது மூன்று சவக்குழிகள் தொண்டப்பட்டு இருத்தது தோண்டப்பட்ட குழியுள் தேங்காய் புதைக்கப்பட்டு காணப்பட்டது. சுற்றி எங்கிலும் மதுபான போத்தல்கள்,பிளாஸ்திக் சோடா போத்தல்கள் காணப்பட்டன.அது மட்டுமல்லாது ஒரு பெண் உருவபொம்மை செய்யபட்டு ஒரு பெண் அணியும் எல்லா ஆடைகளும் அணியப்பட்டு எரிக்கபட்டு காணப்பட்டது(பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது). இது புதையல் தொண்டுபவர்களின் வேலை என கிராம மக்களிடம் வதந்தி நிலவுகிறது.
எவ்வாறாகினும் இவ்வாறன செயல்கள் கண்டிக்கத்தக்கன, மயானம்கள் கோவிலை போல புனிதமான இடம்,அங்கு நம் உறவுகளின் உடல்கள் தோண்டி எரிக்கப்படுவது எவ்வளவு ஈனத்தனமான செயல்,ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு நம்பிக்கைகளோடு தங்கள் உறவுகளின் உடல்களை புதைத்து விட்டு வருகின்றனர், எமது உறவின் ஓருவரின் சவக்குழி தோண்டப்பட்டு எரிக்கபட்டால் எமக்கு எவ்வளவு கோவம் வரும்?
கேள்விகள் பல பதில் தெரியவில்லை!!!
இது நடந்து முடிந்து விட்டது இனி எதுவும் செய்ய முடியாது என்று சில நண்பர்கள் கருத்துரை அளித்துள்ளார்கள்.நாங்கள் புதையலை தேடவேண்டாம் நம் முப்பாட்டன்களின் வரலாற்றை தேடி ஆவணப்படுத்துவோம்!!!அப்படி இல்லாவிட்டால் அவைகள் கூட காணாமல் போய்விடும் நான் குறிப்பிட்ட மலை தவிர பல மலைகள் மூதூர் கிழக்கில் உள்ளது அது அந்த மலைகளும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பல வரலாற்று எச்சம்கள் காணப்படுகிறது அவை தொடர்பான விடையங்களை தொடர்ந்து புகைப்பட ஆதாரங்களுடன் பதிவுகளை தொடருவேன்!!!
தொடரும் ...............

2 comments:

  1. "பல வரலாற்று எச்சம்கள் காணப்படுகிறது அவை தொடர்பான விடையங்களை தொடர்ந்து புகைப்பட ஆதாரங்களுடன் பதிவுகளை தொடருவேன்!!!"
    கண்டிப்பாய் செய்யுங்கள் முடிந்த உதவி ஆதரவு தருவோம்

    ReplyDelete