Saturday, August 25, 2012

எப்பிடி அன்ன புடிச்சிங்க ???வல போட்டு புடிச்சோம் !!; :P

கிழக்கு மாகாண சபை தேர்தல்க்களம் சூடாக தொடங்கி விட்டது.தமிழரின் சர்வேதேச அணுகுமுறை போராட்ட முறையின் அத்திவாரம் இந்த தேர்தல்.தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான தமிழர்களின் தலைமைத்துவம் என மாறியிருக்கும் காலம் இது.ஏன் என்றால் தமிழ் தேசியத்தை அடையாளமாக கொண்டு தனித்துவமாக எந்த கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர இலங்கையில் இல்லை.தமிழர் என்ற அடையாளத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை.




இது ஒரு புறம இருக்கட்டும்.
தனது கட்சியின் கொள்கைகளை நடைமுறை படுத்துவதற்கு அக்கட்சிக்கு தேர்தலில் வெற்றி தேவை, அவ் வெற்றிக்கு அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.அப்படி அந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.அப்படி அவர் மக்களிடம் இருந்து வாக்குகளை பெற எப்படி பட்டவராக இருந்திருக்க(இருக்க) வேண்டும்???அதாவது ஒரு நல்ல அரசியல் வாதி எப்படி இருக்க வேண்டும்??
கட்சி என்பதை தவிர்த்து தனிப்பட்ட ரீதியில் சமுக அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்....தேர்தல் காலங்களில் மட்டும் மக்களில் அன்பு கொண்டவர்களாக இருக்க கூடாது. (நான் சொல்லுறது சரிதானே??)அவர்களைத்தான் மக்களுக்கு பிடிக்கும்.அப்படி எந்த அரசியல் வாதியையும் திருமலை மாவட்டத்தில் நான் கண்டதில்லை.ஒரு தேர்தல் கால கவர்ச்சி காரணமாகவே சிலர் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.
இதுவும் ஒரு புறமாக இருக்கட்டும்
ஒரு வேட்பாளர் தேர்தலில் குதிக்கிறார் என்றால் அவருடைய நோக்கம் என்னவாக இருக்கும் ???சமுகத்தின் மீதான அக்கறையாகத்தான் இருக்கும்.(காலம் காலமாக இதத்தான் சொல்லுறாங்க).
இதைத்தவிர என்ன காரணங்கள் இருக்கும் ஏதாவது உங்களுக்கு தெரியுமா ??
சொல்லுறன் கேளுங்க!!! உங்களுக்கு ஒழுங்கான வேலை இல்லை,அல்லது செய்யும் வேளையில் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்கவில்லை.இலங்கையில் இருந்து ஒன்றும் செய்ய முடியாது... என் பக்கத்து வீட்டு காரன் எல்லாம் பிரச்சன நேரம் வெளிநாட்டுக்கு போய் அங்க சிட்டிசன் கிடைச்சு இப்ப facebookல காருக்கு முன்னுக்கு நிண்டு போட்டோ எடுத்து போட்டு இருக்கிறான்.!! என்ற பல பிரச்சனைகள் இருக்கும்.இதற்க்கான அவர்களது தீர்வு என்ன?? வெளிநாடு போகணும் ,அங்க போய் எப்படியாவது வாழ்நாள் முழுவதும் அந்நாட்டில் வாழ்வதற்கு ஏதாவது உரிமையை பெற்று விடுவது.இதற்க்கு நீங்கள் இந்த தேர்தலை பயன் படுத்திக்கொள்ளலாம். இதை விட பல காரணங்கள் இருக்கு சொன்னா வெக்கக்கேடு  நமது சமுக அரசியலை இப்படியும் பயன்படுத்தலாமா ???என்று நீங்களே யோசிப்பிங்க அத விடுங்க நாம விசயத்துக்கு வருவம்.
முதலில் நீங்கள் அவன்ட இவன்ட காலப்பிடிச்சி நாலு பேர்களை சேர்த்துக்கொண்டு நீங்களும் சமுகத்தில் பெரிய அப்பாடக்கர் என்ற மாயையை உருவாக்க வேண்டும் பிறகு எப்படியாவது ஒரு கட்சியில் அல்லது சுயட்சையாக அரசியலில் குதிக்க வேண்டும்,
பத்திரிகைகளில் உங்களது செய்தி இடம்பெறுகிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.(முழக்கம்,விளக்கம்,விஜயம்)என்ற சொற்கள் முக்கியம்)அரசை தாக்கி பேசிய ஒலி ,ஒளி பதிவுகள் இருந்தால் மிகவும் நல்லது.உங்களது வேட்பாளர் அடையாள அட்டை,செய்திதாள்களில் வந்த உங்களது செய்திகள் என்பவற்றை பத்திரமாக வைத்திருங்கள்.
தேர்தலும் வரும் உங்களது சொந்தங்கள் ,நண்பர்கள் ,தெரிஞ்சவன், எல்லோரும் பழகின பாவத்துக்காக உனக்கு வாக்களிப்பார்கள்.நீ ஒரு தமிழ் தேசியத்துக்கு அப்பால் பட்ட கட்சியின் வேட்பாளர் ஆயின் இம்மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களின் எதிர்கால முக்கியத்துவத்தை விளங்காமல்  உனக்கு ஆதரவான உன் உறவுகள் நண்பர்கள் வாக்களிக்கும் போது உனக்கு வந்த வாக்குகள் நம் மக்களுக்கு ஆப்புகளாக மாறும். நீங்கள் இலகுவாக அது இது எல்லாம் காட்டி...ஏதாவது அபிவிருத்தி அடைந்த நாட்டில் அகதி அந்தஸ்து பெற்று விடுங்கள்.....


இது இன்னொரு வகை தமிழ் தேசியம் கதைப்பவர்கள் பற்றி ................
 தேர்தல் காலங்களில் மட்டும் நான் அத்தனையாம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறேன், மக்கள் வேண்டுகோள் என்று பீலா விட்டிங்க...மக்கள் அன்றிலிருந்து இன்று வரை  பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல
கனவான்களே மக்களுக்காக தேர்தலில் ஈடுபடுதல் என்பது தானாக  வரணும்...தானாக வந்தவர்களே  ஒன்றும் செய்ய வில்லை நீங்கள் என்ன செய்ய போகிறிர்கள்???
மக்கள் உங்கள் வெறுப்பில் கட்சிக்கு கூட வாக்களிக்காமல் விட்டு விடுவார்கள்.மக்களோடு மக்களாக ...மக்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து...யார் என்றாலும் சிரித்த முகத்துடன் உதவி செய்து ...விழாக்களில் அதிதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் மக்களுக்காக மக்களோடு இன்னும் அகதியாக இருப்பவர்கள்தான் அவர்களுக்கு தேவை
கனவான்களே ...வெற்றியா நல்லது எதாவது சமுக விழாக்களில் நீங்கள்தான் பிரதம அதிதி...தோல்வியா ஏதாவது அபிவிருத்தி அடைந்த நாட்டில் அரசியல் தஞ்ச அந்தஸ்து...அவ்வளவுதான் ...அங்க போன பிறகு பேஸ்பூக்ல, ட்விட்டர்ல மக்கள் போராட்டம் மயிறு மட்ட என்று தயவு செய்து கூச்சல்  போட வேண்டாம் ..(அதுக்கு அங்க நிறைய பேர் இருக்கிறாங்க )
வேட்பாள கனவான்களே !!!!30 வருட யுத்தம் நம் மக்களை அரசியலில் நாட்டம் இல்லாமல் பண்ணிவிட்டது..அவங்களே அதில் இடுபாடு இல்லாமல் இருக்கும் போது, இந்திய அரசியல் வாதிகள் போல நீங்களும் நடந்தால் என்ன ஐயா செய்வது???மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள் தமிழ் மக்களுக்கு இந் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள் உங்கள் கட்டுக்கதைகளை விட்டு.
..
பின் குறிப்பு-சில உதிரிகளும் தேர்தல் களத்தில்….. நாயகர்களாக தேர்தல் அறிவிப்பில் இருந்து சமுக சேவகர்களாக மாறிவிட்டார்கள் அவர்களை பற்றி கதைக்க தேவை இல்லை தேர்தலுக்கு பிறகு ஒய்ந்து விடுவார்கள்.

முக்கிய குறிப்பு-வேட்பாளர்களே நீங்கள் தேர்தல் காலங்களில் காட்டும் சமுக அக்கறையை கொஞ்சம் மற்றைய நாட்களில் காட்டுங்கள் தானாக மக்கள் உங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

6 comments:

  1. சமுகத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக காட்டிக் கொள்வதுதான் இன்றய பிளைப்பு முறை... இங்கு இருப்பவர்களில் பலர் எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலிருந்து தங்களுக்கு தேவையானதை பிடுங்கி எடுத்து செல்கின்றனர்.. பின்னாளில் சாம்பல்களை வைத்து வாழ்ந்த வாழ்க்கையை வரலாறாக மட்டும் பேசிக்கொண்டிருப்போம்... கரைந்து கொண்டிருக்கின்றது உண்மையான இன உணர்வும்...இனமும்..

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவு நிறைய நபர்களை பாதித்து விட்டது அது மட்டும் எனக்கு புரிந்து விட்டது ....யாரு என்ன கூவினாலும் எம் மக்கள் இன்னும் பத்துக்கு பத்து தகர கொட்டிளில்தான் .... மக்களுக்காக நல்லது செய்தவன் வெல்லுவான் ...

      Delete
  3. தம்பி செந்தூரன் யார் அந்த மலம் (Anonymous ) ? ஏன் அந்த விலாசம் இல்லாத மலத்தின் பின்னூட்டங்களை அழித்து விட்டிர்கள் ...தம்பி நீங்கள் கூறுவது அப்பட்டமான உண்மை ...நான் அவன் எழுதிய அந்த பின்னூட்டத்தை வாசித்தேன் ...அவனுக்கு என்னிடம் பதில் உள்ளது ..அவன் ஆண்மை உள்ளவனாக இருந்தால் என்னிடம் கதைக்க சொல்லுங்கள் நான் அவன் முக நூல் நண்பன்தான் ...அவன் ஒண்லினே இருந்த நேரமும் உங்களுக்கு பின்னூட்டல் இட்டதும் ஒரு நேரம்தான்...காமராவுக்கு முன்னால் நின்றால் பெரியவர் என்று நினைத்தார் போலும் .எல்லோரும் முட்டாள்கள் என்று நினைக்கும் அவன் ஒரு முட்டாள் ..அவரை நான் நிறைய இடத்தில் கவனித்து வருகிறேன் .

    ReplyDelete
  4. பின்னூடலுக்கு நன்றி அண்ணா ...சில கழிவுகள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் அது ஒரு போலி கணக்கு நிச்சயம் அவன் நிறைய இடங்களில் போலியாகத்தான் இருப்பன் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பவன் ஒளித்து போலி பெயரில் வர மாட்டன் .

    ReplyDelete