Saturday, September 27, 2014

உலக்க


சனம் எல்லாம் இந்தியன் ஆமிக்காரனுக்கு பயத்தில ஊர விட்டு காட்டுலதான் குடிசைகள் போட்டு தங்கி இருந்த காலம் அது..
சேனையூர், கட்டைபறிச்சான் சனம் எல்லாம் ஆத்த கடந்து பெண்டுகள்சேனை காட்டுப்பகுதியத்தான் தங்களுக்கு பாதுகாப்பு எண்டு நினைச்சுக்கொண்டு இருந்தாங்க..
அது அடர்த்தியான பத்தக்காடு!!! உள்ள பூந்தா கண்டு பிடிக்கிறது சரியான கஷ்டம்.. அங்கதான் சனத்திண்ட குடிசைகள் இருந்திச்சு.. அந்த குடிசைகளுக்குள்ள ஓரளவுக்கு சீவனத்த ஓட்ட கூடிய சாமான்இருக்கும், அப்படி காணட்டிக்கு ஊருக்கு உள்ளதான் ஆம்பிள்ளையள் போய் எடுத்து வரணும் ..

ஊருக்குள்ள இந்தியன் வந்து இயக்க பொடியன்களோட கொளுவிட்டான் எண்டா சனத்துக்கு தங்கல் சாப்பாடு எல்லாம் பொண்டுகள் சேனை காட்டுகுள்ளதான்.
இப்படி இருக்கக்குள்ள ராசா அண்ணன்ட கொட்டிளுக்குள்ள(குடிசை) சாப்பாடுச் சாமான் குறைஞ்சு போச்சுது, ரதி அக்காவும் அரள வந்த கிழவியல் மாதிரி ஏச தொடங்கிட்டா.
ஏச்சு தாங்க ஏலாத ராசா அண்ணன் சாப்பாட்டு சமான் தேவையா இருக்கிற அம்பிளையல கூட்டிட்டு ஊருக்கு போய், இருக்கிற தேங்காய் ,மரக்கறி கிழங்கு சாமான் எடுத்திட்டு அப்படியே உரலும் உலக்கையும் எடுத்திட்டு ஆத்த கடக்க வள்ளத்துக்கு பக்கத்தில வந்தாங்க... அப்படியே எல்லாச்சாமனுகளையும் வள்ளத்தில ஏத்திட்டு உலக்கைய தூக்கி தோள் தூக்கி வச்சுக் கொண்டு வள்ளத்த தள்ள வெளிக்கிட்டார்... அப்ப எங்கையோ இருந்து வந்த இந்தியன் ஆமிக்காரண்ட கெலிக்கொப்டர் இவங்கள வட்டமடிக்க தொடங்கிட்டு ..ஒருமாதிரி வள்ளத்த தள்ளி கரைப்பட்டங்க..தீடிர் எண்டு இவங்க நோக்கி ஆமிக்காரன் சுட தொடங்க உலக்க உரல் எல்லாத்தையும் விட்டுத்து காட்டுக்குள்ள ஓடி எப்படியோ தப்பி கொட்டில் இருந்த இடத்திற்கு போய்டாங்க. ஒரு மாதிரி தவண்டு கிவண்டு பத்தைக்கு உள்ளால ஓடி தப்பி போனா ராசா அண்ணன்.... எதோ சினிமா படத்துல வார ஹீரோ மாதிரி ரதி அக்காக்கு புளுகு எல்லாம் விட்டுத்து... எடியே ரதி விட்டுத்து வந்த உலக்கையும் உரலையும் எடுத்திட்டு வாறன் வெளிக்கிட்டார்..
அப்ப கூட ராசா அண்ணன்ட மண்டைக்கு எட்டல்ல தான் உலக்கைய தோள்ள வைச்சுட்டு இயக்கப் பொடியனுகள் மாதிரி கேலிகொப்டருக்கு சுட நின்டதாலதான் அவன் பயத்தில சுட்டான் எண்டு..
மூலக்கதை -மதுரன் -கட்டைபறிச்சான்

No comments:

Post a Comment