Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Sunday, January 8, 2012

முதல் காதல்



 (திருகோணமலையில் ஒரு ஒல்லாந்த பெண்ணின் காதல் கதை )
18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி !  காலையில் சூரிய உதயத்தை ரசிக்கும் அவளுக்கு இன்று ரசிக்கும் மனநிலை இல்லை.பிற தேசம்  என்றாலும் அவளுக்கு அவள் வாழ்நாளில் அதிக மகிழ்வை தந்தது இந்த திருகோணமலைதான்.இன்று அவளுக்கு பெரும் சோகத்தை கொடுத்து விட்டது.
தூரத்தே கப்பல் புறப்படுவதற்க்கான சங்கொலியும் ஒழித்தது.தன் கண்களை தனது அறையில் இருந்து கொண்டு கடலை நோக்கி கண்களை குவித்த அவளுக்கு பாய்மரம் விரிந்தது புரிந்த்தது.
என்னதான் அந்த கப்பலில் இருக்கிறது அவளுக்கு...எதுவும் முக்கியமான பொருளாக இருக்குமோ......முக்கியமான பொருள்தான் அவள் காதல்!
ப்ரன்சினா வான் ரீட் ஒல்லாந்தில் பிறந்தவள் தந்தை அதிகாரி என்பாதால் அவள் ஒல்லாந்தில் வாழ்த்ததில்லை. இவள் பருவம் அடைந்த வயது தொடக்கம் எல்லாம் இந்த பிரேடிக் மலைக்கோட்டையும்,திருகோணமலை என்ற இந்த ஊரும்தான்.
ஜோசொப்பியன் அவன் கொட்டை ராணுவ அதிகாரி அவனை காதல் கொண்ட நாளில் இருந்து காதல் எனபதற்கு அர்த்தம் புரிந்தது. முதல் காதல் திகட்ட திகட்ட காதலித்தாள் அவனிடம் சொல்லாமலே.
அவனை அவள் காதலிப்பதை தனது தந்தையிடம் சொன்னாள்.அவளது தந்தையும் ஜோசொப்பிடம் பேசி திருமண திகதியும் குறிக்கபட்டது. ஆனாலும் அவன் விருப்பம் அவள் மீது அல்ல அவளது தந்தை பதவி மீது.அதற்காக சீதனமாக அந்த பதவியை கேட்க்க முயன்றான் கடைசில் அவனுக்கு இருந்த ராணுவ அதிகாரி பதவியும் போயிற்று. கொவமடைந்த ரீட்டாவின் தந்தை அவனுக்கு அவன் பதவியை நீக்கி ஒல்லாந்து செல்ல கட்டளை இட்டார்.
கப்பல் செல்ல தயார் ஆகி விட்டது காற்றில் அசைகிறது பாய்மரம்.மெல்ல மெல்ல கப்பலும் நகருகிறது.ரீட்டவுக்கு என்ன செய்வது தெரிய வில்லை.
தன் காதல் கனவு வாழ்க்கை அந்த கப்பலுடன் செல்வதாக உணர்வு.அறையை விட்டு வெளியே வருகிறாள். கோணேசர் மலைக்கு சாமந்தரமாக செல்லும் அந்த கப்பலுடன் தானும் மலையில் ஓட தொடங்குகிறாள்.கடலுடன் கலந்த அந்த மலைக்கு ஒரு முடிவு இருக்கும் என்று தெரியாமல் ஓடிய அவளுக்கு வாழ்வும் அந்த மலையுடன் முடிந்து விட்டது. 

இது ஒரு உண்மை சம்பவம் 1680 காலப்பகுதில் இடம் பெற்றது( கொஞ்சம் கற்பனை)
 இந்த சம்பவங்கள் லேப்.கேணல் .தோமஸ்(பிரித்தானிய ராணுவம்) அவர்களால் 1940 ஆண்டு கண்டு எடுக்கபட்ட ஒல்லாந்த குறிப்புகள் அடிப்படியாக கொண்டது .
(அந்த ராணுவ அதிகாரி பெயர் தெரியவில்லை இக்கதையில் குறிப்பிட்டது கற்பனை பெயர்.)

Wednesday, June 22, 2011


 கடவுள் சரக்கு அடிச்சா என்ன ஆகும் 
     
நான் அண்மையில் ஒரு வலைப்பதிவில் பார்த்த கதை ஒன்று.......
கடவுள் சரகடிக்க சாராய கடைக்கு போனாரு..

ஒரு பீர் முதல்ல குடிச்சாரு.. கிக் ஏறல
அடுத்து ஒரு ஃபுல் விஸ்க்கி.. கிக் ஏறல
அடுத்து ஒரு ஃபுல் ப்ராண்டி.. கிக் ஏறல
மீண்டும் ஒரு ஃபுல் விஸ்க்கி.. கிக் ஏறல
அசால்டா தலய சொரிங்சிட்டு என்ன பண்ணலாம்னு யோசிச்சாரு.. பக்கத்துல இருந்தவனுக்கு அதிர்ச்சி..
யோவ்.. என்னய்யா ஆளு நீ.. இவ்வளவு அடிச்சும் போத ஏறல உனக்கு? செம STEADYயோட இருக்க?
 எனக்கு போதை ஏறாது.. ஏன்னா நான் கடவுள்..
ரைட்டு.. உனக்கு போதை தலைக்கு ஏறிடிச்சி!! பாத்து வீட்டுக்கு போப்பா..