Showing posts with label தமிழர். Show all posts
Showing posts with label தமிழர். Show all posts

Thursday, September 13, 2012

மூதூர் குன்றுகள் புதையல் பூமியா? பாகம் -2 தமிழரின் இருப்புக்கான ஆதாரங்கள் மூதூரில் !!!

திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மூதூரில் கட்டைபறிச்சானில் உள்ள கணேசபுரம் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள குன்றுதான்  கச்சக்கொடி மலை.

மூதூர் நகருக்கு அருகாமையில் உள்ள “ராஜவந்தான் மலை(மூன்றாம் கட்டை மலை) தொடக்கம் இளக்கந்தை என்ற ஊர் வரை நீளும் “படைகுமித்த கல் குன்று  வரையிலான குன்றுத்தொடர்களில் உயரமான குன்று இதுதான். இங்கு காணப்படும் கல்வெட்டு  இலங்கையில் தமிழரின் பண்டைய  இருப்பையும் அவர்களது வியாபார நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக  திகழ்கிறது.
இந்த கல்வெட்டை படி எடுத்த பேராசியர் க. இந்திரபாலா  அவர்கள் இதில்
ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
என்ற எழுத்துக்கள் இருப்பததாக கண்டு பிடித்தார்
கச்சக்கொடி மலை
முதலில் இது எந்த மொழிக்கு உரியவர்களின் எழுத்துக்கள் என்பதை ஆராய முற்படும் போது. இலங்கையில் காணப்படும் பல கல்வெட்டுக்கள் பல வியாபார குறிப்புகள் ஆகவும்,சமயம் சார்ந்த குறிப்புக்களாகவும் காணப்படுகின்றன.இதில் வியாபர குறிப்புக்கள் பிராகிருத மற்றும் தமிழ் பிராமிகளின் கலப்பு கொண்ட கல்வெட்டுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதற்க்கு ஒரு காரணமும் உள்ளது. அக்கால இலங்கை இந்திய வியாபார ஆவணப்படுத்தல்களுக்கு பிராகிருதம் என்ற எழுத்து வடிவம் ஒரு பொதுவான வடிவமாக காணப்பட்டது.பிராகிருதம் என்பது தமிழ் பிராமி எழுத்து வடிவத்தில் இருந்து ஆரிய மொழி எழுத்து வடிவத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எழுத்து வரி வடிவம்(கொச்சை தமிழ் பிராமி) இதை திராவிடர்களும் ஆரியர்களும் விளங்கி கொள்ள கூடியதாக இருந்தபடியால் பிராகிருதம் வியாபார ஆவணப்படுத்தல் மொழியாக பயன்பட்டு வந்திருக்கிறது.இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் தற்போது ஆங்கிலம் வியாபார குறியீடாக காணப்படுவது போல தமிழ் கலந்த பிராகிருதம் தென்னாசிய வர்த்தகத்தில் காணப்பட்டு இருக்கிறது.
இதற்க்கு ஆதாரங்களாக தென்னாசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கலந்த பிராகிருத கல்வெட்டுக்களும் தமிழ் நாணயங்களும் சான்று.
தமிழ் வியாபாரிகள் தங்களுடைய வியாபர குறிப்புக்களை கூடுதலான தமிழ் பிராமி எழுத்துக்களுடன் பிராகிதத்துடன் கலந்து ஆவணப்படுத்தி உள்ளனர் அப்படி பிராகித மொழி காணப்பட்டாலும் அது தமிழ் பிராமிக்கு உரிய சாயலில் காணப்படும்..
அவ்வாறான குறிப்புத்தான் இந்த மலையில் உள்ள கல்வெட்டு. இந்த குறிப்புகளில் முற்று முழுதாக தமிழ் மொழியிலேயே தனது விளக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஆனாலும் இவை தமிழ் கலந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்டு உள்ளது.
இதில் வரும் “ம என்ற எழுத்து முற்று முழுதாக தமிழ் பிராமிக்கு உரிய எழுத்து இலங்கையில் உள்ள அனேகமாக உள்ள கல்வெட்டுக்களில் இந்த தமிழ் பிராமிக்குரிய “ம காணப்படுகிறது.அது மட்டும் அல்லதாது இதில் காணப்படும் ஆகிய எழுத்துக்கள் தமிழகத்தில் கண்டு பிடிக்கபட்ட கல் வெட்டுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
இந்த கல்வெட்டில் காணப்படும் சொற்களை ஒவ்வொன்றாக சொற்களை ஆராயும் போது
ப ரு ம க
இது ஒரு நூற்றுக்கு நூறு தமிழுக்குரிய சொல்(திராவிட சொல்) .இது ஒரு இடுகுறிப் பெயர் சொல்(abstract noun)தமிழக மற்றும் இலங்கை யில் காணப்படும் கல்வெட்டுகளில் இந்த பட்டப்பெயர் அதிகமாக காணப்படுகிறது.இந்த சொல் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் பாளி மொழிக்குரிய தலைவன் என்ற சொல் என்று கூறப்பட்டாலும் .எந்த பாளி இலக்கியங்களிலும் பருமக என்ற சொல் இடம் பெறவில்லை.
அதே வேளை பருமக என்பது பருமகன் என்ற சொல்லாகும் பிராகிருதம் கலந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் “ன் என்ற எழுத்து பயன் படுத்த பாடமையின் காரணமாக பருமகன் பருமக யாக காணப்படுகிறது. இந்த பரு மகன் என்ற சொல் பெருமகன் என்ற சொல்லின் மறு வடிவம் ,பெரு மகன் என்பது தலைவனை குறிக்கும் சொல் அரசனாகவும் வியாபார தலைவனாகவும் இதன் அர்த்தத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.(ஆதாரம் –இலங்கையில் தமிழும் தமிழர்களும்)
திச (திசன்)
இது ஒரு தமிழ் சிறப்புப்பெயர் சொல் (proper noun) .இது ஒரு நபருடைய பெயரை குறிப்பிடுகிறது. திச என்பது ஒரு தமிழ் பெயர் சொல் ஆகும்.இதற்க்கு தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பல சான்றுகள் உள்ளன. தமிழ் நாட்டில் ,அழகன் குளத்தில் உள்ள ஒரு ஊரில் கிடைத்த பண்டைய மட்பாண்டத்தில் திச என்ற பெயர் காணப்படுகிறது. இலங்கையில் அம்பாறை மாவட்டம் குடிவில் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தீகவாவியில் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திச என்ற தமிழர் பெயர் காணப்படுகிறது அது மட்டும் அல்லாது அவர் தமிழர் என்ற ஆதாரத்துக்கான குறிப்புக்களும் காணப்படுகிறது. அனுராத புரத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் திச என்ற தமிழ் வியாபாரியும் அவரது கூட்டத்தாரும் ஒன்று கூடி வணிகம் நடத்த ஒரு மண்டபத்தை அமைத்தாக கூறப்பட்டுள்ளது.பருமக என்ற சொல்லில் “ன் விடுபட்டது போல இதிலும் “ன் என்ற எழுத்து விடுபட்டுள்ளது.அப்படியானால் இது திசன் என்ற சொல்லாக காணப்படுகிறது.




புத(பூதன்)
புத(பூதன்) என்ற சொல் பல்வேறு அர்த்தங்களை கொண்டதாக காணப்படுகிறது.
இது ஒரு சிறப்புப்பெயர் சொல்லாக (proper noun) காணப்படுகிறது. அதாவது இது ஒரு நபருடைய பெயர் இப்பெயர்கள் கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதில் காணப்பட்ட பூத வழிபாட்டின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம். அனுராத புரத்தில் புத என்ற சொல்லின் பெண்பால் சொற்கலான பூதி ,சிவ்பூதி,சமணபூதி என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அது மட்டும் அல்லாது அங்கு கிடைத்த ஒரு கல் வெட்டில் வெள்பூத(வேல் பூதன்) என்ற ஆண் பால் பெயரும் காணப்படுகிறது.அது மட்டும் அல்லாது தமிழர்களின் இருப்பை வெளிப்படுத்தும் சங்க இலக்கியங்களில் புத என்ற சொல்லுடன் தொடர்புடைய பெயர்கள் காணப்படுகிறது.உதாரணமாக பூதனார்,வெண்பூதன் ,பூதப்பாண்டியன் போன்ற பெயர்களை குறிப்பிடலாம்.அது மட்டும் அல்லாது இப்பெயர் யாழ்ப்பான காலம் வரை புழக்கத்தில் இருந்தது.(ஆதாரம் -சங்க கால இலக்கியங்கள்)
அதுமட்டும் அல்லாது இது பொதுப்பெயராகவும்(common noun),  காணப்படுகிறது.அதாவது புத்திரன் அல்லது புதல்வன் என்ற அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது.(ஆதாரம்- பரண விதான நூல்கள்)






லேனே
இந்த சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது .ஒன்று இது ஒரு பொதுப்பெயராக(common noun), இடைச்சொல்லாகவும்,வினைசொல்லாகவும் (verb)காணப்படுகிறது. லேனே என்ற சொல்லை பெயர் சொல்லாக பார்க்கும்மிடத்து  ஒரு இடத்தை குறிப்பதாக இருக்கிறது அதாவது ஒரு நிலையம் ஒன்று கூடும் இடம் ,வேலைக்க்களம்,பள்ளிக்கூடம் போன்ற அர்த்தங்களை வெளிப்படுத்துகிறது.
இதனை வினைச்சொல்லாக பார்க்கும் மிடத்து செய்தான் நிறுவினான்.இருந்தான் என்ற அர்த்தங்களை கொண்டதாக காணப்படுகிறது.
இதனை இடைசொல்லாக பார்க்கும் போது “ஆல் (உதாரணம் அவனால்)என்ற அர்த்தத்தை கொண்டதாக காணப்படுகிறது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)


சகச
இந்த சொல் எல்லோரும் ,எல்லாவற்றுக்கும், என்ற அர்த்தங்களை கொண்டது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)

சங்கமய
இந்த சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது.கூட்டுப்பெயராகவும்,வினைச்சொல்லாகவும் காணப்படுகிறது.இந்த சொல்லை கூட்டுப்பெயராக பார்க்கும் மிடத்து சங்கம் என்ற பொருளை தருகிறது அதாவது மனிதர் கூட்டம்.
வினைச்சொல்லாக பார்க்கும்மிடத்து ,அமைத்தல் என்ற பொருளை தருகிறது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)


இந்த கல்வெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது? யாருக்குரியது?

ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
பெருமகன் திசன் புத்திரன் ஆல் எல்லாவற்றுக்கும் அமைக்கபட்டது

இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதி தமிழகத்திலும் இலங்கையிலும் வியாபாரம் புரட்சி ஏற்றபட்ட காலம்.இலங்கை துறைமுகங்கள் அதனை அண்டிய பகுதிகளும் வணிகர்களின் தங்குமிடங்களாகவும் களஞ்சிய சாலைகளாகவும்,அவர்களுக்குரிய வழிபாட்டு தளங்களாலும் காணப்பட்டு இருக்கிறது.கிழக்கு இலங்கையில் இலங்கைத்துறை முகத்துவாரமும் ஒரு பண்டைய வணிக மையம் ஆகும்.
அது மட்டும் அல்லாது திரியாய் வரை வணிகர்களின் போக்குவரத்தும் செயல்பாடுகளும் அமைத்திருக்கிறது என்பதற்கு திரியாய் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன.இலங்கை துறை முகத்துவாரத்தில் இருந்து திரியாய் செல்வதற்கு கொட்டியார பகுதியைத்தான் வியாபாரிகள் கடந்து செல்ல வேண்டும்.அவ்வாறு கடந்து செல்லும் பாதையில்தான் இவ் மலைக்குன்றுகள் காணப்படுகின்றன.இம் மலைகள் அவர்களுக்கு பாதுகாப்பு அரனாகவும் தங்குவதற்கு இசைவான இயற்கை குகைகளும் காணப்படுவதால் அவர்கள் இம்மலையை தங்குமிடமாகவும் சந்திப்பு நிலையங்களாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அதுமட்டும் அல்லாது இம்மலையில் செயற்கையாக அமைக்கப்பட்ட உரல்,பாறைகளில் ஏற்படுத்தப்பட்ட குழிகள்,சுடு மண் கற்கள்(பண்டைய கட்டிட எச்சங்கள்)  என்பன மனிதர் தங்கிய இடம் என்பதை உறுதி செய்கின்றன.


எனவே இம்மலை கல்வெட்டுக்கள் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் வியாபாரிகளின்  தங்குமிடம் அல்லது சந்திக்கும் இடம்  பற்றிய குறிப்புகள் ஆகும்.
இம்மலையை பயன் படுத்திய வியாபார தலைவனால் இங்கு எதோ அமைக்கப்பட்டு இருக்கிறது
எக்காலத்துகுரியது?
.இந்த கல்வெட்டுக்களில் காணப்படும் திசன் ,பூதன் ஆகிய பெயர்கள் இரண்டாம் நூற்றாண்டுக்கு உரியது என்பதை நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளன ,புத சொல்பெயர் கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதில் காணப்பட்ட பூத வழிபாட்டின் அடிப்படையாக கொண்டு காணப்படுகிறது.
பூதன் என்ற பெயர் சங்க காலத்துக்குரிய பெயர் ,கி.பி இரண்டாம் நூற்றாண்டு கூட சங்க காலக்காலம் . இலங்கையில் அனுராத புரத்திலும்,அம்பாறையிலும் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக்கள் திசன் என்ற இரு தமிழர்களை பற்றியதாக உள்ளது.அதுமட்டும் அல்லாது இதை படி எடுத்த இந்திர பாலா அவர்கள் இதை இரண்டாம் நூற்றாண்டுக்கானது என்று உறுதி செய்துள்ளார்.
.
இவ்வாறு திருகோணமலையின் பண்டைய தமிழ் மக்களின் வரலாற்றை பறைசாற்றி நிமிர்ந்து நிற்கிறது இக்குன்று!!

Friday, August 31, 2012

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :


மகேந்திரன் ஆறுமுகம்
  ஆராட்சி குறிப்புக்கள்  



உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள்.  முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி: மகேந்திரன் ஆறுமுகம்