Friday, January 18, 2013

திருகோணமலையின் வரலாற்றையும் ஈழத்தில் சோழர்களின் வரலாற்றையும் வெளிக்கொணர்ந்த வரலாற்றியலாளர் திரு.நா.தம்பிராசா

நன்றி- சத்தியதேவன்

படம்: விமலாதித்தன் 
திருகோணமைலையின் வரலாறுகள் அடங்கிய கல்வெட்டுக்களை தேடித்தேடிக் கண்டுபிடித்து அவற்றை உரியவர்களைக் கொண்டு வாசித்து வெளியிடச் செய்து திருகோணமலையின் வரலாற்றை உறுதியான சான்றுகளுடன் எழுதுவற்கு மூலகாரணமாக திரு.நா.தம்பிராசா அவர்கள் 17-01-2013 அன்று காலமானார்

இவரைப்பற்றி வரலாற்றுத் திருகோணமலை மற்றும் காலனித்துவ திருகோணமலை ஆகிய நூல்களை எழுதிய கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களின்குறிப்பு 

1970களுக்கு முன்னர் திருகோணமலையின் வரலாறு வெறும் நாட்டார் கதைகளினாலும் , புராணங்களினாலுமே கட்டப்பட்டிருந்தது. மிகப் பெரிய சோழர்களின் எழுச்சியினால் எழுதப்பட்டிருந்த இந்த மண்ணின் வரலாற்றுச் சித்திரங்கள் புதையுண்டு கிடந்தது. தொகுத்துப்பார்த்து ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தை எமது இளைய தலைமுறைக்கு சொல்லமுடியாதளவிற்கு இந்த மண் குறித்த தொடர்ச்சியான அறிவு உருவாக்கப்படவில்லை. கல்வெட்டுக்கள் வாசிப்புக்கு உட்படுத்தப்படாமல் வெறும் கற்தூணாக சாய்ந்து கிடந்தன. விளிப்புணர்ச்சியின்றி சமூகம் அக்கறையற்று வாழ்ந்த காலத்தில் வரலாற்றைத் தேடிய ஒரு மனிதன் மதிப்பிற்குரிய நா.தம்பிராசா அண்ணர் அவர்கள்.

சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் வந்தார்கள் சென்றார்கள் என்ற அறிவே இல்லாத காலத்தில் சோழர்களை தேடி ஆராய்வதில் உறுதியான காரணங்களை தேடி அவர் ஆரம்பித்த பயணம்தான் இன்றும் பல்கலைக்கழகங்களில் தொடர்கின்றது.வரலாற்றாய்வு என்ற நீண்ட பயணத்தின் முதல் காலடி அவருக்குரியது. 

சோழர்கால திருகோணமலை நிர்வாக அமைப்பை புரிந்துகொள்வதற்கு திருகோணமலையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களே காரணமாக உள்ளன. திரு தம்பிராசா அண்ணர் அவர்கள் தனிமனிதனாக திருகோணமலை வரலாற்றுத் தடங்களை தேடிக் கண்டறிந்தார். பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை விரிவுரையாளராக பணியாற்றிய கலாநிதி செ.குணசிங்கம் அவர்கள் அவரது முதுநிலை பட்டத்திற்கான ஆய்வுத் தளமாக கோணேஸ்வரத்தை தேர்ந்தெடுத்திருந்தார். இது 1970களின் ஆரம்ப காலமாகும். பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்தவாறு பல்கலைக்கழக வரலாற்றுத்துறைக்கு தேவையான ஆய்வுகளை திரு தம்பிராசா அண்ணர் செய்தார். அவரால் வெளிச்சம் பாய்ச்சப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்தே இலங்கையில் சோழர்கால ஆட்சி குறித்த வரலாற்றுச் சித்திரத்தை வரலாற்று ஆய்வாளர்களால் தீட்ட முடிந்ததது. அவற்றுள் கந்தளாய் விஸ்வநாதர் சிவன் கோயில் கல்வெட்டு, பெரிய குளம் கல்வெட்டு, மாங்கனாய் கல்வெட்டு, பளமொட்டைக் கல்வெட்டு, பத்திரகாளி அம்மன் கல்வெட்டு, நிலாவெளி பிள்ளையார் கோயில் கல்வெட்டு, கங்குவேலி கல்வெட்டு, தம்பலகாமம் ஐயனார் திடற்கல்வெட்டு, வில்லூன்றி கந்தசாமி கோயில் கல்வெட்டு என்பன முக்கியமானவை. கலாநிதி செ.குணசிங்கம், பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் கா.இந்திரபாலா ஆகியோர் என அவரது ஆதரவும் உதவியும் பெற்ற வரலாற்றுப் பேராசான்களின் பட்டியல் தொடரும். எனது "வராலாற்றுத் திருகோணமலை" தொடர்பான ஆய்வுகளை 2000 இன் ஆரம்பத்தில் செய்தபோது அவரது உதவிகள் எனக்கு தேவைப்பட்டது. அவரது வரலாற்று ஆர்வம் அறிந்து ஆச்சரியப்பட்ட நிகழ்வுகள் அதிகம். இயல்பாகவே இந்த மண்ணை உயிர் மூச்சாக எண்ணிய அவரது பேச்சில் வீச்சாக வந்து விழும். ஒரு வரலாற்று ஆய்வாளனுக்குரிய கல்வி ஒழுக்கம் அவரிடம் நிரம்பியிருந்தது. அவர் வெளிச்சம் பாய்ச்சி வெளிஉலகிற்ற்கு தெரியப்படுத்திய கல்வெட்டுக்களில் கந்தளாய்க் கல்வெட்டு, மானாங்கேணிக் கல்வெட்டு, நிலாவெளிக் கல்வெட்டு என்பன மிகச் சிறப்பானவை. பத்தாம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படும் நிலாவெளிக் கல்வெட்டிலேயே "திருகோணமலை" என்ற சொல் முதன்முறையாக பயன்பட்டிருப்பதை அறிய முடிந்தது. திரு தம்பிராசா அண்ணர் அவர்கள் இது குறித்து மிக அடக்கத்தோடு பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். தான் வாழ்ந்த மண்ணின் மூலவேர்களை, அதன் மண்வாசனையை எதிர்கால சந்த்ததியினரும் தொட்டுணர்ந்து மகிழவேண்டும் என தன் இளமைக்காலத்தை அர்ப்பணித்த ஒரு வரலாற்றுப் பெருந்த்தகை. பேராசிரியர்கள் வரிசையில் நின்று எழுதப்படாமல் மண்ணில் புதைந்து கிடந்த திருகோணமலை வரலாற்று தடயங்களை தேடி ஒரு வரலாற்றைக் கட்டியெழுப்ப அவர் ஆற்றிய பங்கு காலத்தால் அழியாத புகழை அவருக்கு சேர்க்கும். மண் பயனுற வாழ்ந்த ஆசான் அவர்.

 திருகோணமலையின் வரலாற்றையும் இலங்கையில் சோழராட்சியின் வராலற்றில் முக்கால்வாசியையும் இலங்கையின் 10 தொடக்கம் 12ம் நூற்றாண்டு வரையான காலத்தின் வரலாற்றை எழுத பேருதவி புரிந்த அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.. முன்னாள் சாம்பல்த் தீவு கிரோமதய சபைத்தலைவராக இருந்த அன்னாரின் உதவியால்த்தான் கலாநிதி.செ.குணசிங்கம், பேரா.கா.இந்திராபாலா, பேரா.பத்மநாதன் ஆகியோரின் ஆய்வுகள் முக்கியப்பட முடிந்தது.. வரலாற்றின் கடமையை தன்னால் இயன்ற அளவு செய்தவரை நாமும் நினைவில் வைத்திருப்போமாக

திரு.க.சரவணபவன் அவர்களின் குறிப்பு Sritharan Sam அவர்களின் முகநூல் பதிவிலிருந்து 

Friday, January 4, 2013

திருமலையின் வரலாறு உருவாகிய காலம்

உலக வரலாறுகள் உருவாக்க காலம் என்பது கிட்டத்தட்ட கிறிஸ்துக்கு பின் வந்த காலப் பகுதிகளை ஒட்டித்தான் காணப்படுகின்றன.அப்படித்தான் இலங்கை வரலாறும் கி.மு 500 ஆண்டளவில் விஜயன் வருகையோடு தொடங்குகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஆனால் மகாவம்சம் விஜயன் வருகைக்கு முன்னரான திருகோணமலையில்  இறுக்கமான ஒரு ஆட்சி முறை இருந்ததை வெளிப்படையாக சொல்லவிட்டாலும் சில இடங்களில் சொல்லாமலும் இல்லை.
அப்படித்தான் விஜயனது வருகைக்குப் பின்னரான சம்பவம் ஒன்றை கூறும் மகாவம்சம் நம் தேடலை அதிகரித்து சென்று விடுகிறது ,
விஜயன் வருகைக்கு பின்னர் விஜயனுக்கு வாரிசு இல்லாமல் போகவே விஜயன் தனது வாரிசுக்காக கலிங்க நாட்டில் இருந்து தனது தம்பி சுமிதனின் மகனான பாண்டு வாசுதேவனை இலங்கை தீவில் உள்ள தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அழைக்கிறான்.
அப்படி அழைக்கப்பட்ட பாண்டு வாசு தேவனும் அவனுடைய 32 மந்திரிகளும் துறவிகள் வேடம் பூண்டே திருகோணமலை துறை முகத்தை அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது .
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.
பாண்டு வாசு தேவனும் அவனது மந்திரிகளும் மாறு வேடத்தில் திருகோணமலைக்கு வர காரணம் என்ன ?
அப்படியானால் விஜயனது கூட்டத்திற்கு எதிரானவர்களின் கட்டமைப்பு  திருகோணமலை பகுதியில் இருந்திருக்க வேண்டும்.அதன் காரணமாகவே இக்குழுவினர் மாறுவேடத்தில் வந்திருக்கின்றனர்.இவ் மகாவம்ச குறிப்பில் இருந்து இன்னும் ஒன்று புலப்படுகிறது.இங்கு வாழ்ந்த மக்கள் துறவிகளை மதிக்கத்தக்கவர்களாக வாழ்த்திருகின்றனர்.ஆகவேதான் பாண்டு வாசுதேவன் குழுவினர் துறவி வேடத்தை தேர்ந்து எடுத்திருகின்றனர்.
ஒழுங்கான ஆட்சி முறையுடன் இம் மக்கள் வாழ்தார்கள் என்று நிருபிக்க மகாவம்சத்தில் இன்னுமொரு குறிப்பு காணப்படுகிறது.துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் ஆரசுகளை வென்றதாக கூறுகிறது.
அதுமட்டும் அல்லாது அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த கோகர்ண (திருமலை) துறைமுகப்பகுதியை எந்த ஆரிய வம்சத்தில் இருந்து வந்த ஆட்சியாளனும்  ஆண்டதாக குறிப்பிடவில்லை.ஆரிய வம்சத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட நூலில் அடிக்கடி கோகர்ணம்(திருமலை)சவாலுக்குரிய பகுதியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது அவர்களின் செல்வாக்கு குறைவான இடம் என்பதை மட்டும் காட்டுகிறது .அப்படியானால் அந்த 32 அரசர்களில் யாரோ ஒருவனால் இப்பகுதி ஆளப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகமில்லாமல் புலப்படுகிறது.

இவ்வாறு சவாலுக்குரிய பிரதேசமாக இருந்த கோகர்ணம் வழிபாட்டு ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கி. மு 300 ஆண்டு காலப்பகுதியில்தான் இலங்கையில் சைவ மற்றும் பிராமணர்களின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கிய காலம் எனலாம்.இதற்கு முக்கிய காரணம் வியாபார தொடர்புகள்தான்.இதே மாதிரித்தான் சமணமும் தேவாதார மற்றும் மகாயான பௌத்தங்கள் நிறுவன ரீதியாக இலங்கை தீவில் காலடி எடுத்து வைக்கின்றன.
. கி மு 3 நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய மகாசேனன் கோகர்ணம்(திருகோணமலை) ,எரகாவில்லை(ஏறாவூர்),மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகிய வற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக மாகவம்சம் கூறுகிறது. மகாசெனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்கள்தான் இருந்திருக்கின்றன.
இதில் முக்கியமான விடயம்  என்னவேனில் பலமான தென்னிந்திய தொடர்பை திருகோணமலை கொண்டிருந்திருக்கிறது . என் என்றால் இலங்கையில் லிங்க வழிபாடு என்பது ஆதார ரீதியாக இலங்கை ஆதிக்குடிகளிடம் இருக்க வில்லை.கந்த, வேல் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட முருக வழிபாடுதான் இவர்களிடம் இருந்தது.அப்படி காணப்பட்ட திருகோணமலையில் வணிகர்களில் வருகை மூலமே லிங்க வழிபாடு அறிமுகப்படுத்த பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு திருகோணமலையில் லிங்க வழிபாடு ,மற்றும் மகாயான புத்த மதங்கள் போட்டி போட்டு கொள்ள முருக வழிபாடு அழியாமல் தனித்துவமான வழிபாட்டு முறையாக கி பி எழாம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்ததை சூளவம்சம் சில புனைவுகளுடன் எடுத்துரைக்கிறது.
கி பி எழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் மானவர்வன் என்ற இளவரசன் கந்தக்கடவுளை நினைத்து வேள்வி செய்ததாகவும் அப்போது கந்த கடவுள் மயில் பறவையில் வந்து காட்சி தந்ததாகவும் பாளி இலக்கியமான சூளவம்சம் கூறுப்பிடுகிறது.

Monday, December 24, 2012

பெரும் கற்கால திருகோணமலை

இதுவரை திருகோணமலையின்  வரலாறு   ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு பல நூல்களாக வந்து விட்டன.ஆனால் அவற்றில் வரலாற்றுக் காலம் தான் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் நாகரிக வளர்ச்சியை.வரலாற்றுக்கு முந்திய காலம்,வரலாறு உருவாக்கக் காலம், வரலாற்றுக்காலம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஈழத்து நாகரிக வளர்ச்சியில் இந்த மூன்று காலங்களிலும் திருகோணமலையின் பங்கு முக்கியமானது என்பது இதுவரை கிடைத்த ஆதாரங்களில் இருந்தது புலப்படுகிறது.

இதில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் திருமலையின் பங்கு என்ன?
 மக்கள் எழுத்து பாவனையை தொடங்காத காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. எல்லா இனக்குழுக்களின் வரலாறுகளை ஆராயும் போதும் இந்த காலப்பகுதி மிகவும் சவாலுக்கு உரியதாக காணப்படுகிறது. இக்காலப்பகுதில் மக்கள் இருப்பு தொடர்பாக ஆதாரங்களை தேடும் போது பின் வந்த பெரும்கற்காலம் தொடர்பான குறிப்புக்களும்,அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ,உபகரணங்களின் எச்சங்களும் மட்டுமே  ஆதாரங்களாக கொள்ள முடியும்.
பெரும்கற்கால(கி.மு500 முன்னர்) திருகோணமலை பாரிய சனத்தொகையோ ,கட்டமைக்கபட்ட ஆட்சி முறையையோ கொண்டிருந்திருக்காத,சில மனித குழுக்கள் தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்திருக்கிறார்கள்.

கதிரவெளி (தற்போது மட்டக்களப்புமாவட்டம்),திரியாய்,தென்னமரவாடி,கிழக்கு மூதூரில் அமைத்துள்ள “ராஜவந்தான்” மலை தொடக்கம் “படைகுமித்த கல்”வரை உள்ள குன்றுகள்   ஆகிய வற்றில் காணப்படும் ஆதாரங்கள் அம்மக்கள் இருப்பை உறுதி செய்கின்றன.

தற்போது திருகோணமலை மாவட்டமாக அடையாளப்படுத்த பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கும் கருப்பு சிவப்பு நிற பெரும்கற்கால மட்பாண்டங்கள் ,தாழிகள் மக்களின் இருப்புக்கள் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
கண்ணால் காணக்கூடிய ஆதாரங்கள் இப்படி சொல்ல திருமலை பகுதியில் செல்வாக்கை கொண்டிருந்த இம்மக்களை ஆரிய இலக்கியமான ராமாயணம்  உயர் தொழில் நுட்பம் கொண்டவர்களாகவும் ,கட்டுக்கோப்பான ஆட்சி முறையை கொண்டவர்களாகவும் இனம் காட்டுகிறது.அதாவது இந்த மனிதர்களின் தலைவனிடம்(ராவணனிடம்) விமானம் இருந்ததாக கூட அப்புராணம் கூறுகிறது .
இன்னுமொரு ஆரிய புராணமான மாகவம்சம் இம்மனிதர்களை யட்சினிகள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது.அதுமட்டும் அல்லாது எதோ ஒரு சக்தியை கொண்ட ஒரு கூட்டமாக அடையாளப்படுத்துகிறது.அதற்க்கு பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் அவர்களை  இயக்கர் ,நாகர் என்ற இனமாக அடையாளப்படுத்தினர்.
கி.மு 500 ஆண்டுக்கு பிறகுதான் ஆரியர்கள் இங்கு வந்தார்கள் என்றால்
அதற்க்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் யார் ? வரலாற்று ஆசிரியர்கள் இவர்களை அடையாளபடுத்துவதே  இயக்கர் நாகர் என்ற தமிழ் பெயர்களை கொண்டுதான். .அதை விட இங்கு கிடைத்த அடிப்படை தொழில்நுட்பங்களை கொண்ட மட்பாண்டங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வடிவமைப்பும் காலபகுதியும்  தமிழ் நாட்டில் கிடைத்த பொருட்களுடன் ஒத்து போகின்றன. அப்படியானால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பெரும்கற்காலத்தில்  இங்கு வாழ்த்து எந்த இனம் என்று !!!

1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்...”

Friday, December 14, 2012

மொழி ரீதியாக ஈழம் உட்பட குமரிக்கண்ட நாடுகளின் தொடர்பு

தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு துனைகளாக பழைய சாசனங்கள், கல்வெட்டுக்கள் ,இலக்கியங்கள் போன்றவற்றைதான்  எடுத்து கொள்கிறார்களே தவிர அறிவியல் அம்சங்கள் மூலமாகவும் ஆராயலாம் என்பதை மறந்து விடுகின்றனர்.

உலகில் உள்ள அனைத்து உரினங்களும்  தனக்கு தெரிந்தும் தெரியாமலும் தன் முன்னோர்களின் தடையங்களை சுமந்து கொண்டுதான் இருக்கிறன.அப்படித்தான் மனித இனமும் காலம் காலமாக தங்களது இரத்த உறவுகளின் மரபணுக்களை சுமந்து கொண்டு இருக்கிறது.
உங்களுக்கு குமரிக்கும் மரபணுக்களுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்க தோன்றும். ..சம்பந்தம் இருக்கிறது ..அதுதான் "M130" எனப்படும் மரபணு  இந்த வகை மரபணுவானது சுமார் 60,000ஆண்டில் இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது (குமரிக்கால மரபணு). நாங்கள்தான்   இந்த மரபணுக்கு சொந்த காரர்கள்.இந்த பூரண மரபணு கொண்ட மனிதர்கள் குமரியின் பாகமாக இருந்த மடகஸ்கார் இந்தியா அவுஸ்திரேலியா(பழம்குடிகள்)ஆகிய பகுதியில் வாழ்த்து வருவது  இதுவரை செய்யபட்ட ஆராட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. (ஆதாரம் -"Michael Wood " என்ற பிரபல பிருத்தானிய  மரபணு ஆய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டார்.)
இலங்கையில் "M130மரபணு  தொடர்பாக எந்த ஆராட்சியும் இது வரை தொடங்கவில்லை.ஆனாலும் புவியியல் ரீதியாக நாம் குமரியின் நடுப்பகுதியில் இருந்த படியால் நிச்சயம் அதன்  தாக்கம் நமக்கும் இருக்கும்.
உங்களுக்கு கேள்வி எழலாம்.அவுஸ்திரேலிய பழங்குடியினரும்குமரி வாசிகளா ,அவர்கள் தமிழையா(திராவிட மொழியையா) பேசினார்கள் என்று ? என்று. சந்தேகமே இல்லை அவர்கள் குமரி வாசிகள்தான் அவர்கள் பேசியது தமிழ் தான்.இன்னும் வரை சில தூய தமிழ் சொற்களை கூட பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
 எ. விருமாண்டி
முதலில் நாம் தமிழ் நாட்டில் இருந்து தொடங்குவோம்."M130" எனப்படும் மரபணு வின் பூரணத்தன்மை கொண்ட நபர்களை காமராசர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராமநாதன் பிச்சப்பன் என்பவர் தமிழ் நாட்டில்  உசிலம்பட்டி பகுதியில் கண்டு பிடித்தார்.இதில்  எ. விருமாண்டி என்ற நபர் உட்பட 13 நபர்கள் M130 மரபணுவைக் கொண்டுள்ளதை கண்டு பிடித்தார்.. இதே மரபணுக்களை கொண்ட நபர்கள் மடகஸ்கார் நாட்டில் அதிகமாக காணப்படுகின்றனர்.
அவுஸ்ரேலியாவின் வடமேற்குப் பகுதியில் தற்போதும் வாழும் கரிறியா போன்ற ஆதிக்குடிகள்M130 மரபணுவைக் கொண்டு காணப்படுவது , குமரிக்கண்ட வாசிகளின் வழித்தோன்றல் என்பதையும்  அவர்களது மொழி , உருவத் தோற்றப்பாடு என்பன தமிழர்கள் என்பதையும் நிருபிக்கின்றன.
அவுஸ்ரேலிய பழம்குடியினரின் தோற்ற அமைப்பு தமிழரின் தோற்ற அமைப்புடன் முழுமையாக ஒத்து போகிறது.அதை விட அவர்களது மொழியிலும் தமிழ் (திராவிட )மொழியின் சாயலும் இலக்கண, ஒலியியல்  ஒற்றுமைகள் உள்ளது.

மேலும் அங்குள்ள சில ஆதிக்குடிகளின் சில இனக்குழுமங்களின் பெயர்கள் வியப்புத்தருவதாகவும் மேலும் ஆராயப்பட வேண்டியதாகவும் இருக்கிறது . அவையில் ஒரு குழுவின் பெயர்தான் குவேனி . இது இலங்கையின் இயக்கர் இனப்பெண்ணான (திராவிட பெண் )குவேனியின் பெயரை ஒத்திருக்கின்றது. இவரையே இந்தியாவின் கலிங்கத்திலிருந்து துரத்தப்பட்ட கலிங்கத்து இளவரசனான விஜயன்மணம் முடித்தார் என மகாவம்சம் கூறுகின்றது. மேலும் அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் சில குழுக்களின் பெயர்கள் நகர, நன, நந்தா, நங்கா, நகரியா, நகுரி, நகண்டி, நகம்பா என்று காணப்படுகின்றன. இலங்கையில் கூட நாகர் என்ற பண்டைய தமிழ் இனமும் காணப்படுகிறது .நாக என்ற சொல் இந்தியாவிலும் இலங்கையிலும் நிறைய சந்தர்பங்களில்  பாவிக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்தது.
இங்குதான் மொழியியல் அடிப்படையில் குமரிக்கண்ட நாடுகள் தொடர்பு படுவது நமக்கு புரிகிறது.

பெரும் கற்காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தது திருகோணமலை

சென்ற வாரம் மலைமுரசு செய்தித்தாளுக்காக தேடியவை 