Showing posts with label மனதை பாதித்தது. Show all posts
Showing posts with label மனதை பாதித்தது. Show all posts

Tuesday, January 24, 2012

அன்புள்ள கலாமுக்கு ,,,,,,


மதிப்புக்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கு இலங்கையில் அமைதிப்படையில் பணி புரிந்த இந்தியவீரன் எழுதிக்கொள்வது.ஐயா நீங்கள் இலங்கை சென்ற பொழுது இந்திய வீரர்கள் நினைவு இடத்தில் பெருமையுடன் அஞ்சலி செய்தீர்கள்

நீங்கள்  அஞ்சலி செய்ததை இட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் பிற நாட்டை எப்படி நீங்கள் பெருமைப்படும் அளவுக்கு பாதுகாத்தோம் என்பதை நீங்கள் கேட்டால் நீங்களும் எங்களை நினைத்து இன்னும் பெருமைப்படுவீர்கள். உங்களுக்காக ஒரு மணித்தியாலம் நடந்த சம்பவத்தை கூறுகிறேன்,கேட்டு பெருமைப்படுங்கள்.
1989 ஆண்டு ஒன்பதாம் மாதம் 13திகதி(புதன்கிழமை) அண்ணளவாக 8.30 இருக்கும் மூதூர், கட்டைபறிச்சான் பகுதியில் உள்ள சின்னமட்டக்களப்பு பகுதியில் எங்களுக்கும் புலிகளுக்கும் சண்டை மூளுகிறது. எங்கள் படை வீரன் ஒருவன் அச்சண்டையில் சாவடைந்தான். அந்த ஆத்திரத்தை தீர்க்க பழிக்குப் பழி வாங்க வேண்டிய தேவை இருந்தது.(எத்தனை சினிமா பார்த்திருப்போம்!! நண்பனை கொன்ற வில்லன் கூட்டத்தை பழி வாங்க வேண்டும்) நாங்கள் கட்டைபறிச்சான் கிராமத்தினுள் புகுந்தோம்.முதலில் எங்கள் கண்ணில்பட்டது.விபுலானந்த வித்தியாலயம் என்ற பாடசாலை. அன்று பள்ளிநாள் எங்களுக்கு வசதியாய் போய்விட்டது.எங்கள் இயந்திர துப்பாக்கிகள் சுழன்றன,எல்லோரும் 9ம் ஆண்டுக்கு உட்பட்ட மாணவர்கள்!!!!!!!!!!11பேர் பலி!!!! படுகாயங்கள்!!!!  பாடசாலையில் இரத்தஆறு ஓட வைத்தோம்.அத்துடன் நாங்கள் முடித்து கொள்ளவில்லை. கண்ணில் பட்ட வீடுகளை நோக்கி எங்கள் துப்பாக்கிகள் முழங்கின. சாவுகள் படுகாயங்கள்,இதில் எங்களுடைய திறமை என்ன என்றால் இறந்தது எல்லாம் சிறுவர்களும் வயோதிபர்களும்.
இப்போது புரிகிறதா? நாங்கள் எப்படி பிற நாட்டையும் அம்மக்களையும் எப்படி பாதுகாத்தோம் என்று!!!!!!!இந்த சம்பவம் ஒரு கிராமத்தில் ஒரு மணித்தியாலம் நாங்கள் நடத்திய சாதனை இது . அத்த ஒரு கிராமத்தில் நாங்கள் செய்த சாதனைகள் வீர தீர செயல்கள் ஏராளம் ஒரு கடிதம் போதாது. இன்னமும் எங்களால் கால் கை (வாழ்கையை) இழந்தவர்கள் சாட்சிகளாக இருப்பார்கள்!!!

உங்கள் பெருமைக்குரிய
இந்தியப்படைவீரன்

(1989.09.13 #####அன்று இந்திய படையால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் !!!! என்னதான் அதன் பிறகு 18 வருடங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டாலும் எம் கிராம மக்களுக்கு மறக்க முடியாத நாள். முதல் முதலாக 11 சிறுவர்களை பிணமாக பார்த்தநாள். என் சகோதரி சங்கீதாவை எங்கள் குடும்பம் இழந்தநாள்!!! அவர்கள் செய்த வீரசெயல்களின் சாட்சியாக கட்டைபறிச்சானில் உள்ள  “தில்லம்கேணி” என்ற அழிந்தகிராமம் இன்னும் சாட்சியாக இருக்கிறது)
***கடிதம் கற்பனை சம்பவம் உண்மை

Tuesday, January 10, 2012

ஒரு உண்மை


மரணவீடு என்று சொல்வதற்குரிய அறிகுறிகளுடன் ஒரு வீடு,வீட்டுவாசலில் மரண அறிவித்தலில்
……………………………………………………………………………………………………………………………… சரவணன்;(லண்டன்)விமலநாதன்(பிரான்ஸ்)ஆஞ்சலி (அவுஸ்ரெலியா) சந்தியா (சுவிஸ்)கமலா (கனடா)பாலச்சந்திரன் ;(லண்டன்)வித்தியா (சுவிஸ்)அமுதன் (அவுஸ்ரெலியா) ஆகியோரின் தந்தையும்ஆவார்……………………………………………………………………………………………………………………………… பல பிளாஸ்திக் கதிரைகளில் சில கதிரைகளில் சிலர் நாட்;டுநடப்பை பற்றி கதைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவ்இல்லத்தின் சூழ்நிலை தெரியாமல் தொலைபேசியும் சினுங்கிக் கொண்டு இருந்தது.தொலை பேசியின் சினுங்கலை தாங்க முடீயாத ஒருவர் தொலைபெசியை எடுத்து
‘கலோ’ என்றார்.
(மறுபக்கத்தில்) “கலோ சிவராசா சித்தப்பாதானெ கதைக்கிறது,”(இப்பக்கம்) “ஓம் நான்தான் கதைக்கிறன்”

(மறுபக்கம்) “நான் விமலநாதன் கதைக்கிறன்,”
சித்தப்பா என்னால வர ஏலாது,இங்க நான் அகதியா பதின்சிஇருகிறதால எனக்கு இலங்கைக்கு விசா தரமாட்டங்க,நான் எவ்வளவு காசு வேணும் எண்டாலும் அனுப்புறன் அப்பாட சடங்க ஒழுங்கா செய்யுங்க….அம்மாவால இப்ப கதைக்க ஏலாது என்டு எனக்கு தெரியும்
அப்பாவ பாக்;க வேணும் skypeலகாட்ட ஏலுமெ?

(இப்பக்கம்); “ஓம் தம்பி நான் எல்லாததையும் பாத்துக்கொள்ளுறன் எதுக்கும் கொஞ்ச காசு போட்டு விட்டா நல்லம் தம்பி!என்ர கைக்காச போட்டு கோஞச வேலை முடிச்சித்தன்! தம்பி என்ர accountla காச போட்டு விடுங்களன்;” என்று தனது பேச்சை தொடர்ந்தார்………..
தனது உடன் பிறந்த அண்ணனின் இறப்பை வியாபாரமாக மாற்றி தனது காசுப்பையை நிரப்ப நினைத்த சிவராசா அதை வெற்றிகரமாக முடித்து அழைப்பை துண்டித்தார்.

மறுபடியும் தொலைபெசி சினுங்கியது மறுபடியும் சிவராசா தொலைபெசியை எடுக்க, (மறுபக்கம்) ‘அழுகையுடன் தொடங்கியது அஞ்சலியின் உரையாடல் அதெ உரையாடல் அதெ சிவராசாவின் வியாபாரப் பேச்சும் தொடர்ந்தது………………..
இவ்வாறு ஒவ்வோரு பிள்ளைகளும் தங்களது தந்தையின் இறுதி சடங்கினை செய்ய தமது சித்தப்பாவிடம் ஒப்பந்தம் செய்து முடித்தனர்..


வரவேற்பு அறையில் தனது கணவனின் அசைவில்லா முகத்தை அழுது அழுது கண்ணீர் வற்றிய தனது கண்களால் பார்த்துக் கொண்டு இருக்க,….அறையின் மூலையில் வழமையாக தன்னுடன் விளையாடும் தனது எஜமான் அசைவின்றி இருப்பதை பார்த்த நாயும்   தனது எஜமானை பார்த்துக் கண் நீர்விட்டுக் கொண்டு   இருந்தது…………………..

இக்கரையில் அனாதைப் பிணமாய் தந்தை அக்கரையில் அகதியாய் பிள்ளைகள்”

(பெயர்களைத் தவிர யாவும் உண்மை )
கா.செந்தூரன்

Sunday, January 8, 2012

முதல் காதல்



 (திருகோணமலையில் ஒரு ஒல்லாந்த பெண்ணின் காதல் கதை )
18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி !  காலையில் சூரிய உதயத்தை ரசிக்கும் அவளுக்கு இன்று ரசிக்கும் மனநிலை இல்லை.பிற தேசம்  என்றாலும் அவளுக்கு அவள் வாழ்நாளில் அதிக மகிழ்வை தந்தது இந்த திருகோணமலைதான்.இன்று அவளுக்கு பெரும் சோகத்தை கொடுத்து விட்டது.
தூரத்தே கப்பல் புறப்படுவதற்க்கான சங்கொலியும் ஒழித்தது.தன் கண்களை தனது அறையில் இருந்து கொண்டு கடலை நோக்கி கண்களை குவித்த அவளுக்கு பாய்மரம் விரிந்தது புரிந்த்தது.
என்னதான் அந்த கப்பலில் இருக்கிறது அவளுக்கு...எதுவும் முக்கியமான பொருளாக இருக்குமோ......முக்கியமான பொருள்தான் அவள் காதல்!
ப்ரன்சினா வான் ரீட் ஒல்லாந்தில் பிறந்தவள் தந்தை அதிகாரி என்பாதால் அவள் ஒல்லாந்தில் வாழ்த்ததில்லை. இவள் பருவம் அடைந்த வயது தொடக்கம் எல்லாம் இந்த பிரேடிக் மலைக்கோட்டையும்,திருகோணமலை என்ற இந்த ஊரும்தான்.
ஜோசொப்பியன் அவன் கொட்டை ராணுவ அதிகாரி அவனை காதல் கொண்ட நாளில் இருந்து காதல் எனபதற்கு அர்த்தம் புரிந்தது. முதல் காதல் திகட்ட திகட்ட காதலித்தாள் அவனிடம் சொல்லாமலே.
அவனை அவள் காதலிப்பதை தனது தந்தையிடம் சொன்னாள்.அவளது தந்தையும் ஜோசொப்பிடம் பேசி திருமண திகதியும் குறிக்கபட்டது. ஆனாலும் அவன் விருப்பம் அவள் மீது அல்ல அவளது தந்தை பதவி மீது.அதற்காக சீதனமாக அந்த பதவியை கேட்க்க முயன்றான் கடைசில் அவனுக்கு இருந்த ராணுவ அதிகாரி பதவியும் போயிற்று. கொவமடைந்த ரீட்டாவின் தந்தை அவனுக்கு அவன் பதவியை நீக்கி ஒல்லாந்து செல்ல கட்டளை இட்டார்.
கப்பல் செல்ல தயார் ஆகி விட்டது காற்றில் அசைகிறது பாய்மரம்.மெல்ல மெல்ல கப்பலும் நகருகிறது.ரீட்டவுக்கு என்ன செய்வது தெரிய வில்லை.
தன் காதல் கனவு வாழ்க்கை அந்த கப்பலுடன் செல்வதாக உணர்வு.அறையை விட்டு வெளியே வருகிறாள். கோணேசர் மலைக்கு சாமந்தரமாக செல்லும் அந்த கப்பலுடன் தானும் மலையில் ஓட தொடங்குகிறாள்.கடலுடன் கலந்த அந்த மலைக்கு ஒரு முடிவு இருக்கும் என்று தெரியாமல் ஓடிய அவளுக்கு வாழ்வும் அந்த மலையுடன் முடிந்து விட்டது. 

இது ஒரு உண்மை சம்பவம் 1680 காலப்பகுதில் இடம் பெற்றது( கொஞ்சம் கற்பனை)
 இந்த சம்பவங்கள் லேப்.கேணல் .தோமஸ்(பிரித்தானிய ராணுவம்) அவர்களால் 1940 ஆண்டு கண்டு எடுக்கபட்ட ஒல்லாந்த குறிப்புகள் அடிப்படியாக கொண்டது .
(அந்த ராணுவ அதிகாரி பெயர் தெரியவில்லை இக்கதையில் குறிப்பிட்டது கற்பனை பெயர்.)

Wednesday, December 14, 2011

ஏன் மானம்கெட்ட தொழில் உங்களுக்கு"


இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல இணையதளங்கள் செயல் பட்டு வருகின்றன அவைகள் எந்த அளவுக்கு நம்பகரமான செய்திகளை வெளியீடுகின்றன?
யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் இருந்து சில இணையங்களில் இலங்கையில் வடகிழக்கு பகுதிகளில் இடம்பெறும் கலாச்சார சீரழிவுகள் பற்றிய செய்திகள் முக்கிய இடம்பெற்று வருகிறது.
சில உண்மையாகினும் பல சொடிக்கப்பட்ட கட்டுகதைகளாக வெளிவருகின்றன.ஏன் இவ்வாறு தங்களின் இணையதளங்களின் விளம்பரத்தை தேடி கொள்வதற்கு தங்கள் பிறந்தஇடத்தை கேவலபடுத்துகிறிர்கள்?கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏன் நண்பர் ஒருவரால் ஒரு இணையத்தின் செய்தி ஒன்று முகஏட்டில் பகிரப்பட்டது.
இது திருகோணமலை எடுக்கபட்டதாக குறிப்பிடபட்டிருந்தது  இது கலாச்சார சீரழிவு எனவும் ....
அந்த ஒளிப்படத்தில் ஒரு இளைஞன் ஒருவரும் ஒரு யுவதின் கையை பிடித்து உரையாடி கொண்டு இருக்கிறார்.அதனை ஒருவர் மறைத்து வைத்த கமரா மூலமாக படம்பிடிக்கிறார்? இதில் யார் செய்தது காலச்சாரசீரழிவு?
  • காதலியின் கையை பிடித்து கதைத்தவரா ?
  • அதை படம் பிடித்த வக்கிர புத்திகொண்டவரா???????
    அல்லது
  • விளம்பரத்திற்காக ஒரு சிறிய விடயத்தை பெரிய விடையமாக்கி அதை அரசியல் ஆக்கி தன் மகளுக்கும் மகனுக்கும் பப்புக்கும்,டேய்டிங்க்கும் போவதற்கும் பணம் கொடுப்பதற்கு நடத்தப்படும் இணையதளங்களா????????

இது என்ன மானம்கெட்ட தொழில் உங்களுக்கு ?????இப்படி வாழ்வதற்கா உயிரை கையில் பிடித்து கொண்டு வெளிநாடு ஓடினாய் ???
உன் மகள்மாரின் மகனின் மனைவியின்  facebook புகைப்பட பகிர்வை பார்! அப்போது விளங்கும் எது காலச்சார சீரழிவு என்று! உன் மகள் மது கோப்பையை உடன் தனது boy friendஉடன் (100 க்கு 1 வீதம் காதலனாக இருக்கலாம்)புகைபடம் எடுத்து facebookல் பகிர்தல் காலச்சார சீரழிவு இல்லையா ???

இவ்வாறன இணையங்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும்..வெளிநாடுகளில் நம்மவர்கள் செய்வதை விடவா இலங்கையில் நடக்கிறன.
இதுதான் நம் பிரச்சனையா?
உங்கள் இணையங்களில் பகிரப்படும் செய்திகள்தான்  என்ன ?
  • வீரஆவேச கட்டுரைகள்.
  • நடிகர்களின் கிசு கிசு.
  • நடிகைகைகளின் ஜிலு ஜிலு வீடியோ.

வீரமும் ஆவேசமும் இங்கு உள்ளவர்களுக்கு நிறையவே உள்ளது,இருப்பதால் தான்.அவர்கள் எங்கும் ஓடி போய்விடவில்லை. கொழும்பில் இருந்து கூட தமிழர் நலனுக்காக பாடுபடும் ஊடகத்துறைசார்தவர்கள்,அரசியல்வாதிகள்,சமுகநலவாதிகள் உண்டு.
உங்கள் வாய் வீரம் எங்களுக்கு தேவை இல்லை! யுத்த காலத்தில் நீங்கள் என்ன செய்திர்கள் எம் மக்களின் பிணம்களின் படங்களின் போட்டு பிழைத்தீர்கள் .
இவ்வாறு செய்த நீங்கள் இப்போது விபச்சார அரசியல்துணிந்துவிட்டிர்கள்!
காதலன் காதலி கைபிடிப்பது சமுக சீரழிவாம் இது இலங்கை அரசின் செயலாம்!!!!!!!
நாங்கள் ஈழத்தில்தான் இருக்கிறோம் இங்கு நடப்பவை உங்களை விட எங்களுக்கு தெரியும். எதுவும் நடக்கவில்லை என்று நான் சொல்லவரவில்லை!!!! ஆனால் உங்கள் மண்ணை அவமானபடுத்தாதிர்கள் !!!!
அந்த ஒளிப்படத்தில் வந்தவர் யாரகவும் இருக்கட்டும்,!என்ன இனத்தவராக இருக்கட்டும்! மற்றவர்கள் தனிப்பட்ட விடயத்தை விடியோ எடுப்பது எவ்வளவு கேவலமான செயல்!!! அதை வெளியீடு செய்தல் எவ்வளவு ஈனச்செயல்!!!!

பின் குறிப்பு-
தொப்பி அளவானவர்கள் போட்டு கொள்ளவும்!!!