Tuesday, January 10, 2012

வெட்டி வேல


அது என்ன வெட்டி வேல? ஏதாவது வெட்டுற வேலையா? எல்லா வேலைகளிலும் அதிகமாக வெட்டுதல் என்ற செயல் இருக்கும். தையல்காரர் துணி வெட்டுவார்.விவசாயி மண்ணை வெட்டுவார். முடி திருத்துனர் முடி வெட்டுவார்.கொல்லர் இரும்பை வெட்டுவார்கள்.தட்டார் தங்கத்தை வெட்டுவார்கள்.ஆசிரியர் பிழையான விடைகளை வெட்டுவார்கள்.வைத்தியர் கை கால்களை  வேட்டுவார். எப்படி எல்லோரும் வெட்டி கொண்டுறிருக்க வேல இல்லாத எங்கள ஏன் வெட்டி வேல செய்யிறம் எண்டு சொல்லுறாங்க? அத விடுங்க ஏன் அர்த்தம் இல்லாம இப்படி சொல்றிங்க எண்டு ஜோசிச்சு பார்த்திங்களா? நீங்க நினைக்கிறது எனக்கு விளங்குது “ டேய் இப்படி வெட்டியா இருந்தா இப்படிதாண்டா தொனும்” நீங்க நினைச்சது சரிதானே?
சரி விடுங்க................ வெட்டி வேல எண்டா என்ன?(செம கடுப்பாகிடிங்க  போல)

இது எல்லாம் சரிவராது எண்டுதான் நானும் வெட்டி வேலைய(அர்த்தம்) தேட ஆரம்பிச்சன்! நெட்ல தேடினா! அர்த்தம் புரியல்ல ஆனா வெட்டி வேல அனுபவம் கிடைச்சிது! எல்லோரும் வெட்டித்தனமா எவ்வளவு எழுதினாலும் வெட்டி வேல என்ன எண்டு எழுத்தல்ல!அப்பத்தான் புரிஞ்சிது  இது எல்லாம் வெட்டி வேலை துறையில் முதுமாணி பட்ட பெற்ற என்னை போல உள்ளவர்கள்தான் எழுதவேணும் எண்டு.  ........சரி........  வெட்டி வேலைய பத்தி என்னத்த எழுதிறது? நீங்க கூட ஜோசிச்சு பாருங்க ஒன்டும் தெரியல்லதானே?? ! எக்ஸாம் பேப்பர பார்த்த பீல் இருக்குதில்ல? உங்களுக்கு பதில் தெரியாத ஒன்றை நாங்கள் வெற்றி(ட்டி)கரமாக  நடை முறைபடுத்துகிறோம்!  சரி அத விடுங்க நான்தான் வெட்டியா இப்படி எழுதினா நீங்க இப்படி இருந்து வெட்டியா வாசிப்பிங்களா? போங்கப்பா! போங்க! போய் வேலைய பாருங்க!   முக்கிய குறிப்பு   வெட்டி வேலைக்கு ஒரு வரலாறு உண்டு.ராஜராஜசோழன் தஞ்சை கோயிலை கட்டும் போது பல கிராம மக்களை உணவு மட்டும் கொடுத்து கூலி இல்லாமல் வேலைக்கு அமர்த்தினான்.கிட்டத்தட்ட அடிமைகளாக வேலை வாங்கினான்.(கிட்ட தட்ட ஒரு சின்ன கிட்லர்! இல்ல..... இல்ல....  கிட்லர்தான் பெரிய ராஜராஜசோழன்! வரலாறு தெரிந்தவர்கள் இதற்கு எதிர் கருத்து பேசமாட்டார்கள்!) இந்த வேலையை ( “அப்பறசெண்டிங்க”) செய்பவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு வைத்த பெயர்தான் வெட்டி வேலை! இலங்கை பேச்சு வழக்கில் இந்த சொல் இல்லை ஆனால் சினிமா இந்த சொல்லையும் இலங்கை தமிழில் சேர்த்து விட்டது! தமிழ் சொல்தானே நாமும் அங்கீகரிக்கலாம்! 

கா.செந்தூரன் 

ஒரு உண்மை


மரணவீடு என்று சொல்வதற்குரிய அறிகுறிகளுடன் ஒரு வீடு,வீட்டுவாசலில் மரண அறிவித்தலில்
……………………………………………………………………………………………………………………………… சரவணன்;(லண்டன்)விமலநாதன்(பிரான்ஸ்)ஆஞ்சலி (அவுஸ்ரெலியா) சந்தியா (சுவிஸ்)கமலா (கனடா)பாலச்சந்திரன் ;(லண்டன்)வித்தியா (சுவிஸ்)அமுதன் (அவுஸ்ரெலியா) ஆகியோரின் தந்தையும்ஆவார்……………………………………………………………………………………………………………………………… பல பிளாஸ்திக் கதிரைகளில் சில கதிரைகளில் சிலர் நாட்;டுநடப்பை பற்றி கதைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவ்இல்லத்தின் சூழ்நிலை தெரியாமல் தொலைபேசியும் சினுங்கிக் கொண்டு இருந்தது.தொலை பேசியின் சினுங்கலை தாங்க முடீயாத ஒருவர் தொலைபெசியை எடுத்து
‘கலோ’ என்றார்.
(மறுபக்கத்தில்) “கலோ சிவராசா சித்தப்பாதானெ கதைக்கிறது,”(இப்பக்கம்) “ஓம் நான்தான் கதைக்கிறன்”

(மறுபக்கம்) “நான் விமலநாதன் கதைக்கிறன்,”
சித்தப்பா என்னால வர ஏலாது,இங்க நான் அகதியா பதின்சிஇருகிறதால எனக்கு இலங்கைக்கு விசா தரமாட்டங்க,நான் எவ்வளவு காசு வேணும் எண்டாலும் அனுப்புறன் அப்பாட சடங்க ஒழுங்கா செய்யுங்க….அம்மாவால இப்ப கதைக்க ஏலாது என்டு எனக்கு தெரியும்
அப்பாவ பாக்;க வேணும் skypeலகாட்ட ஏலுமெ?

(இப்பக்கம்); “ஓம் தம்பி நான் எல்லாததையும் பாத்துக்கொள்ளுறன் எதுக்கும் கொஞ்ச காசு போட்டு விட்டா நல்லம் தம்பி!என்ர கைக்காச போட்டு கோஞச வேலை முடிச்சித்தன்! தம்பி என்ர accountla காச போட்டு விடுங்களன்;” என்று தனது பேச்சை தொடர்ந்தார்………..
தனது உடன் பிறந்த அண்ணனின் இறப்பை வியாபாரமாக மாற்றி தனது காசுப்பையை நிரப்ப நினைத்த சிவராசா அதை வெற்றிகரமாக முடித்து அழைப்பை துண்டித்தார்.

மறுபடியும் தொலைபெசி சினுங்கியது மறுபடியும் சிவராசா தொலைபெசியை எடுக்க, (மறுபக்கம்) ‘அழுகையுடன் தொடங்கியது அஞ்சலியின் உரையாடல் அதெ உரையாடல் அதெ சிவராசாவின் வியாபாரப் பேச்சும் தொடர்ந்தது………………..
இவ்வாறு ஒவ்வோரு பிள்ளைகளும் தங்களது தந்தையின் இறுதி சடங்கினை செய்ய தமது சித்தப்பாவிடம் ஒப்பந்தம் செய்து முடித்தனர்..


வரவேற்பு அறையில் தனது கணவனின் அசைவில்லா முகத்தை அழுது அழுது கண்ணீர் வற்றிய தனது கண்களால் பார்த்துக் கொண்டு இருக்க,….அறையின் மூலையில் வழமையாக தன்னுடன் விளையாடும் தனது எஜமான் அசைவின்றி இருப்பதை பார்த்த நாயும்   தனது எஜமானை பார்த்துக் கண் நீர்விட்டுக் கொண்டு   இருந்தது…………………..

இக்கரையில் அனாதைப் பிணமாய் தந்தை அக்கரையில் அகதியாய் பிள்ளைகள்”

(பெயர்களைத் தவிர யாவும் உண்மை )
கா.செந்தூரன்

Monday, January 9, 2012

மதம்



சிலர் சொல்ல்கிரார்கள் கடவுள் இல்லை என்று. சிலர் சொல்வார்கள் மதம் போய் என்று. சிலர் சொல்ல்வர்கள் சடங்குகள் மூட நம்பிக்கை என்று. இப்படி கதைத்தால் பகுத்தறிவாளிகளாம்.
கடவுள் என்ற ஒன்று இருக்கா இல்லையா? நம்மை மீறிய ஒரு சக்தி ஒன்று உள்ளது ! இதை யாராலும் மறுக்க முடியாது!ஏன் 99% (அண்ணளவாக) விஞ்ஞானிகள் கூட கடவுளை நம்புகிறனர்!
ஆனால் மனிதன் கடவுளை நோக்கும் விதம்தான் மதங்களுக்கு மதம்(மதச்சடங்குகள்) வேறுபடுகிறது. அது ஒரு குறிப்பிட்ட மதம் உருவாகும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் புவியியல் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு அமைகின்றன.
இந்து சமயம் உருவாக்கம் (ஆதிக்கம் செலுத்தும் பகுதி) தெற்குஆசியா  ஆகும்.இந்து சமயத்தின் கடப்பாடுகளும் சம்பிரதாயங்களும்,ஆடைகளும், தெற்குஆசிய காலநிலைக்கு ஏற்றவாறு காணப்படுகிறன.
இவ்வாறுதான் இஸ்லாமும் கிறிஸ்தவம் ஆகியன உருவாகும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் புவியியல் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு காலநிலைக்கு எற்றவாறு அதன் கடப்பாடுகளும் சம்பிரதாயங்களும்,ஆடைகளும் காணப்படுன்றன.
சில பகுத்தறிவாளிகள் என்று தங்களைதானே சொல்லி கொள்வார்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் பிரிக்கபார்கிறார்கள்.மதம் வேண்டாமாம் கலாச்சாரம் வேண்டுமாம்.எந்த ஒரு கலாச்சாரம் தோன்றுவதற்கும் காரணம் மதம்தான்.அப்படியானால் இவர்கள் வேரை பிடிங்கி விட்டு மரம் வளர்க்க பார்கிறார்களா?இதுக்கு பெயர்தான் பகுத்தறிவா?  இது ஒரு வகையானவர்கள்.
அடுத்தது இன்னொரு வகையானவர்கள் சடங்குகள் எல்லாம் மூடநம்பிக்கைகளாம். ஒரு மதத்தின் சடங்குகள் சடங்குகள் ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் உருவாக்கபட்டன! சில சடங்குகள் இப்போதைய விஞ்ஞான வளர்ச்சி காரணமாக தேவை இல்லாமல் போகலாம் ஆனால் எல்லா சடங்குகளையும் நாம் ஒதுக்கி விட முடியாது.(ஆனால் மூடநம்பிக்கையான சில செயல்களை ஏற்று கொள்ள முடியாது.)
எல்லா மதமக்களிலும் மூடநம்பிக்கை மத கடப்பாடுகளுக்கு புறம்பான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இது நிச்சயம் தங்களுடைய மதம் பற்றிய அறிவின்மை காரணம் ஆகும். இன்னொரு விடயம் ஒரு மதம் இன்னொரு பிரதேசக்கு பருவும் போது சில மதக்கடப்பாடுகள் தேவையற்றனவாக  போய்விடுகின்றன.உதாரணத்துக்கு இஸ்லாம் மற்றும் இந்துக்களின் ஆடைக்கடப்பாடுகள் எல்லா பிரதேசத்துக்கும் பொருந்தாது.
.
மதம் -2
மதம் என்பது மனிதனால் தன் சமுகத்திற்கு  கட்டுபாடுகளை  ஏற்படுத்தவும் ஒழுக்கமான சமுகத்தை ஏற்படுத்த அவனுக்கு மீறிய சக்தியை கடவுளாக கொண்டு அவர்களின் புவியியல்அமைப்பு ,மொழி அடிப்படையில் உருவாக்க பட்டதுதான் மதம்!(எல்லா மதங்களும் ஒரு சக்தியைத்தான் மையப்படுத்தி காணப்படுகின்றன.)
திராவிடம் ஏதோ மத எதிர்ப்புதான் அடிப்படை காரணம் கொண்டு உருவாக்க பட்டது. ஆனாலும் தமிழகத்தில் உள்ள இரண்டு பெரும் திராவிட கட்சிகளும் மதத்தை  எப்படி ஆதரிக்கின்றன என்பதை அவர்களின் ஊடகங்களை பார்த்தல் புரியும்.

அடிப்படையில் திராவிடம் மதத்தை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் சாதி.சாதி என்பது எந்த மதத்திலும் இல்லை ஆனால் மதங்களின் பெயரால் சிலரால் தங்கள் சுயநலத்துக்காக உருவாக்கபட்டதுதான் சாதி. ஆனாலும் தமிழ் நாட்டில் ஒழிக்க முடியவில்லை ஏன் என்றால் அங்கு அவர்கள் வாழ்க்கையில் கலந்து விட்டது. ஏன் என்றால் அது மதத்தில் இல்லை அவர்கள் மனதில் (நாள் எல்லோரையும் குறிப்பிடவில்லை).
இலங்கையில் யுத்த காலத்தில் இடபெயர்வின் போது(உள்நாட்டு) சாதி இல்லை மதம் இருந்தது.(அனுபவம்)இது எப்படி சாத்தியமானது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் போது எல்லோரும் ஒன்றாகத்தான்  காணப்படுவர் அகதி என்ற சாதி! ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள்  தெரியுமமா? கந்தா...! ஜெசப்பா! மாரி அம்மா...! மேரியம்மா! அம்மா! அப்பா! இன்னும் எத்தனையோ கூக்குரல்கள்! எனக்கு தெரிந்த நாத்திகர்கள் சொன்னது யாரவது எங்களா காப்பத்த மாட்டாங்களா? அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள்! அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா! ஜெசப்பா !) என்ன கொஞ்சம் வித்தியாசமாக!
எந்த மதமாகினும்  மத அடிப்படையில் எந்த சாதியும் இல்லை.ஆனாலும் பிரிவுகள் இல்லாத மதங்களும் இல்லை.ஏன் இந்த மதங்களுக்குள் பிரிவு???(நான் சாதிப்பிரிவை குறிப்பிடவில்லை).

இந்த மதங்களை பின்பற்றுவோர் சிலர் ஒரு தங்களுக்கு ஏற்படும் வித்தியாசமான சிந்தனையால் மதக்களில் சில மாற்றங்களை செய்து ஒரு மதபிரிவாக ஏற்படுத்தி விடுகின்றனர். இது ஒரு விதண்டாவாதமாகவும் சுயநல செயலாகவும் இருக்கலாம். இது சில மதங்களில் மூடநம்பிக்கைகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன.
ஆனாலும் குறிப்பாக சில மதப்பிரிவுகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கான முனைப்புகளில் இடுபடுகின்றன! இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன! எல்லா மதங்களும் ஒரே விடையத்தைதான் சொல்கின்றன சொன்ன விதம்தான் வித்தியாசமானது. தன் மதத்தின் அடிப்படைகளை கூட புரிந்து கொள்ளாதவர்கள்தான் மத மாற்றத்திற்கு உட்படுவார்கள்.
எந்த மதத்தவரும் தங்கள் மதம் சொன்னவற்றை 100% பின்பற்றி நடந்து இருக்க முடியாது !நடக்கவும் முடியாது! இது மாற்று கருத்து இல்லாத உண்மை. ஆனாலும் தங்கள் மதத்தின் படி வாழ்தால் உலகத்தில் பிரச்சினை இருக்காது!

Sunday, January 8, 2012

முதல் காதல்



 (திருகோணமலையில் ஒரு ஒல்லாந்த பெண்ணின் காதல் கதை )
18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி !  காலையில் சூரிய உதயத்தை ரசிக்கும் அவளுக்கு இன்று ரசிக்கும் மனநிலை இல்லை.பிற தேசம்  என்றாலும் அவளுக்கு அவள் வாழ்நாளில் அதிக மகிழ்வை தந்தது இந்த திருகோணமலைதான்.இன்று அவளுக்கு பெரும் சோகத்தை கொடுத்து விட்டது.
தூரத்தே கப்பல் புறப்படுவதற்க்கான சங்கொலியும் ஒழித்தது.தன் கண்களை தனது அறையில் இருந்து கொண்டு கடலை நோக்கி கண்களை குவித்த அவளுக்கு பாய்மரம் விரிந்தது புரிந்த்தது.
என்னதான் அந்த கப்பலில் இருக்கிறது அவளுக்கு...எதுவும் முக்கியமான பொருளாக இருக்குமோ......முக்கியமான பொருள்தான் அவள் காதல்!
ப்ரன்சினா வான் ரீட் ஒல்லாந்தில் பிறந்தவள் தந்தை அதிகாரி என்பாதால் அவள் ஒல்லாந்தில் வாழ்த்ததில்லை. இவள் பருவம் அடைந்த வயது தொடக்கம் எல்லாம் இந்த பிரேடிக் மலைக்கோட்டையும்,திருகோணமலை என்ற இந்த ஊரும்தான்.
ஜோசொப்பியன் அவன் கொட்டை ராணுவ அதிகாரி அவனை காதல் கொண்ட நாளில் இருந்து காதல் எனபதற்கு அர்த்தம் புரிந்தது. முதல் காதல் திகட்ட திகட்ட காதலித்தாள் அவனிடம் சொல்லாமலே.
அவனை அவள் காதலிப்பதை தனது தந்தையிடம் சொன்னாள்.அவளது தந்தையும் ஜோசொப்பிடம் பேசி திருமண திகதியும் குறிக்கபட்டது. ஆனாலும் அவன் விருப்பம் அவள் மீது அல்ல அவளது தந்தை பதவி மீது.அதற்காக சீதனமாக அந்த பதவியை கேட்க்க முயன்றான் கடைசில் அவனுக்கு இருந்த ராணுவ அதிகாரி பதவியும் போயிற்று. கொவமடைந்த ரீட்டாவின் தந்தை அவனுக்கு அவன் பதவியை நீக்கி ஒல்லாந்து செல்ல கட்டளை இட்டார்.
கப்பல் செல்ல தயார் ஆகி விட்டது காற்றில் அசைகிறது பாய்மரம்.மெல்ல மெல்ல கப்பலும் நகருகிறது.ரீட்டவுக்கு என்ன செய்வது தெரிய வில்லை.
தன் காதல் கனவு வாழ்க்கை அந்த கப்பலுடன் செல்வதாக உணர்வு.அறையை விட்டு வெளியே வருகிறாள். கோணேசர் மலைக்கு சாமந்தரமாக செல்லும் அந்த கப்பலுடன் தானும் மலையில் ஓட தொடங்குகிறாள்.கடலுடன் கலந்த அந்த மலைக்கு ஒரு முடிவு இருக்கும் என்று தெரியாமல் ஓடிய அவளுக்கு வாழ்வும் அந்த மலையுடன் முடிந்து விட்டது. 

இது ஒரு உண்மை சம்பவம் 1680 காலப்பகுதில் இடம் பெற்றது( கொஞ்சம் கற்பனை)
 இந்த சம்பவங்கள் லேப்.கேணல் .தோமஸ்(பிரித்தானிய ராணுவம்) அவர்களால் 1940 ஆண்டு கண்டு எடுக்கபட்ட ஒல்லாந்த குறிப்புகள் அடிப்படியாக கொண்டது .
(அந்த ராணுவ அதிகாரி பெயர் தெரியவில்லை இக்கதையில் குறிப்பிட்டது கற்பனை பெயர்.)

Thursday, January 5, 2012

ஏதாவது நாம் கிழிக்க வேணும்

(2012ன் முதல் பதிவு )
நமது சமகால அரசியலை புரிந்து கொள்ளல் கொஞ்சம் கடினம்தான்.தமிழ் அரசியல் தலைகளின் கோரிக்கைகள் ஒரு புள்ளியில் நிற்கின்றன. கொஞ்சம் விரிவாக சொன்னால் அரசாங்கத்திடம் நல்உறவு கொள்ளும் சில தமிழ் கட்சிகள் அரசுடன் சுமுகமாக இருப்பதற்கு என்ன நோக்கத்தை காரணம் சொன்னார்களோ அதே காரணத்தை கையில் எடுத்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசி கொண்டு இருக்கிறது(இது காலத்தின் கட்டாயம் அது வேறு விடயம்).
நான் சிறு வயதாக இருந்து ஏதோ ஏதோ அரசியல் தீர்வுகள் பற்றி எல்லாம் செய்தியில் சொல்வார்கள். எல்லாம் முடிந்து (தனி நாடு உட்பட ) ஏதோ சொன்னாங்களே.....ஆஆஆஆஅ .......ஆஅ  சமஸ்டி ஆட்சி முறை ...(இந்த விசயமும் ஏற்கனவே நான் பிறக்க முதல் வட்ட சதுர முக்கோண மேசை எல்லாம் போட்டு கதச்சவன்களாம்).
 ஆனால் இப்ப கையில எடுத்து இருக்கிறது சமஸ்டி ஆட்சி முறையின் குறுகிய வடிவமாம்(என்ன கொதறியோ ) அதாவது காணி போலீஸ் அதிகாரம் உட்பட சில விடயங்களை கேட்க போறாங்களாம் கேட்டாங்களாம் கேப்பாங்களாம்.( விளங்கல்லைய? எனக்கும் விளங்கஇல்ல! ஏன் எண்டு தினசரி பத்திரிக்கை பாருங்க விளங்கும்! இத சொல்லுற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூட விளங்க இல்ல எண்டு)
(அவன் அவன் அந்த இடத்தில இருந்தாத்தான் தெரியும் கஷ்டம்.எண்டு நீங்க சொல்லுறது விளங்குது ஆனாலும் நாம செய்ய போனத சரியா செய்யணும் அப்படி செய்ய இயலாவிட்டால் என்ன போல இப்படி இருந்து வெட்டியா எழுதணும்)
ஒரு விடயம் மட்டும் விளங்குது என்னதான் ஆளும் தரப்புக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளுக்கும் ஆதரவு வழங்காத கட்சிகளுக்கும் பிரச்சனை இருந்தாலும் அவர்கள் சொல்லும் நோக்கம் இப்போதைக்கு  ஒன்றுதான்!
அப்ப என்ன எல்லோரும் சேர்ந்து சட்டுபுட்டு எண்டு ஒரு முடிவுக்கு வந்து கூட்டமைப்பு பேசட்டும் அரசுடன் சேர்ந்து இருக்கும் கட்சிகள் உங்கள் வழியில் கேளுங்க! (கிழிஞ்சிது போ)
இது எல்லாம் நடக்கிற காரியமா எண்டு நீங்க சொல்லுவிங்க! இதுக்கு ஒரே பதில்தான் அதுவும் கமல் பாசையில் சொன்னால் “நான் நடக்கும் எண்டு சொல்ல இல்ல ,நடந்தா நல்லம் எண்டுதான் சொல்லுறன்”
ஏன் எண்டா இனி நமக்கு வேற வழி இல்ல இப்படிதான் போகணும். அதற்க்கான சூழ்நிலை இருக்கு! சர்வேதேச சமுகம் இலங்கைய தன்னுடைய கண் பார்வையில வைச்சிருக்கு! ஒரு தீர்வு வழங்க வேண்டிய நிர்பந்தத்தில் இலங்கை அரசும் உள்ளது.
இக்காலகட்டத்தில் இங்கு இருக்கும் மக்களும் இதைதான் விருப்புகிறார்கள்.
14 வருடம் யுத்தத்தை அனுபவித்த எங்களுக்கே இப்படி மனநிலை இருக்கும் போது (நினைவு தெரிந்த நாளில் இருந்து) ஆரம்ப காலத்தில் இருந்து அனுபவித்தவர்களுக்கு எப்படி  இருக்கும்.
மக்களில் மனதில் கொஞ்சம் நின்மதி வந்திருக்கிறது.. அது என்ன எண்டா சாதிச்ச நிம்மதி இல்ல.. ஒரு பிரச்சனையும் இப்போதைக்கு இல்ல ஏன்டா நிம்மதி.....
அரசியல் பற்றி  எனக்கு பெரிதாக ஒன்றும்  தெரியாது! (ஆனால் இலங்கை வரலாறு தெரியும் 2012.01.06 வரை)அப்படி தெரிந்து இருந்தாலும் இலங்கை அரசியலை புரிதல் கடினம். அப்படி இருந்தும் கூட இந்த பொடியனுக்கு தெரியும் விடயம் கூட எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு (சகல அரசியல் வாதிகளும்)புரியவில்லை என்றால் அடுத்த சந்ததி உங்களை தூற்றும்!
பின் குறிப்பு –தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை நம் பிரச்சனையில் இழுப்பது ஏசுவது வாழ்த்துவது நமக்கு எந்த பிரஜோசனமும் இல்ல! அவங்கட பிரச்சனைய (ஏதோ அனையாம் அல்லது ஏதோ ஒரு நடிகனுக்காக பால் அபிசேகம் பண்ணுற பிரச்சனையாக இருக்கும் ) முடிக்கிறத்துக்கு அவங்க நாட்டுல படுறபாட பாருங்க!  இப்போ ஏதோ நகை கடைக்கு புரட்சி செய்றாங்க இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் பெரும் தலைவன் MGR உடன் முடிஞ்சி போச்சி !
*வழமை போல தொப்பி அளவனவங்க போட்டு கொள்ளுங்க! (நிபந்தனைக்கு உட்பட்டது )