Friday, December 16, 2011

நமக்கு தேவை கல்விதான், வாய் வீரம் அல்ல!

ஈழத்தில் சிலருக்கு போர் முடிந்துவிட்டது சிலருக்கு முடியவில்லை! ஆனால் ஈழத்தில் உள்ளவர்கள் யாரவது இப்படி கருத்து தெரிவிக்கிறார்களா?
ஏன் என்றால் இங்கு எல்லாம் முடிந்துவிட்டது.அவ்வளவும்தான் வேறு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.புலம் பெயர் தமிழர்களே (இணையங்களே) ஒன்று புரிந்து கொள்ளுங்கள்.இங்குள்ள மக்களுக்கு தேவை வாய்வீரம் அல்ல,அடிப்படை உதவிகள். இங்கு உள்ளவர்கள் ஓடி,உறவை இழந்து, மண்ணை இழந்து,கல்வியை இழந்து களைத்து போயிருக்கிறார்கள்.
நீங்கள் இங்கு இருக்கும் போது இருந்த நிலைமை வேறு இன்று வேறு மனநிலையும் வேறு! எனக்கு தெரிந்தவரையில் கல்வியால் மட்டும்தான் நாங்கள் சாதிக்கலாம்.இதற்க்கு ஒரேவழி அடிப்படை உதவிகளையும் கல்வி உதவிகளையும் வழங்குங்கள். நேரடியாக வழங்கலாம் அல்லது இங்கு சேவை நோக்கம் கொண்ட பல தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன,அவைகள் ஊடக செய்யலாம்.
வீரம் பற்றி பேசுபவர்கள் இங்கு புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடிந்ததா? அவர்களுக்கு வேலை வாய்ப்பு,குடும்ப சுமை எவ்வளவோ சுமைகள்.இலங்கை அரசு செய்த உதவி கூட நீங்கள் செய்யவில்லை இது அப்பட்டமான உண்மை.
உங்களுக்கு ஒரே ஒரு பிரச்சனைதான் இங்கு நடக்கு நல்ல விடையங்கள் உங்களுக்கு தெரிவதில்லை ஆனால் கெட்ட விடையங்கள் பெரிதக்கபடுகின்றன! அது மட்டும் அல்ல, குடும்ப பிரச்னை கூட உங்கள் இணைய தளங்களில் அரசியல் ஆக்கபடுகின்றன.
நான் குறிப்பிடுவது 2009 பிறகு உள்ள அரசியலை,இது கொஞ்சம் வித்தியாசமானது, நீங்கள் இங்கு இருந்தால் புரிந்து இருக்கும்.
இலங்கை அரசுக்கு எங்களது பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாய சூழல் சர்வதேசம் ஊடக ஏற்பட்டு இருக்கிறதது. இலங்கை அரசியல் வேறு மாதிரி சென்றுகொண்டு இருக்கிறது (அபிவிருத்தியுடன்).
ஆயுதவழி போராட்டம் தொடங்குவதற்கு உயர்கல்வி பல்கலைகழக தெரிவு பிரச்சனை ஒரு காரணம். இப்பொழுது இப்பிரச்சனை முளுவாக தீர்ந்து விட்டது.பல்கலைகழகங்களில் வளாகங்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைய பெற்று விட்டது. பாடநெறிகள் அதிகமாக்க பட்டுவிட்டன. இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் வளாகங்கள் வடகிழக்கில் நான்கு (இரு பிரிவுகள் உட்பட) அமைந்துள்ளது அது மட்டும் அல்லாமல் வவுனியாவில் அமைக்கபட்டு வருகிறது.இன் நிறுவனம் உயர் தொழில்கள் ஆன கணக்கியல்,தகவல் தொழில்நுட்பம்,விவசாயம்,பொறியியல் , ஆகிய வற்றிக்கு பட்டப்படிப்பை வழங்குகிறது. அடுத்த வருடத்தில் இருந்து இன் நிறுவனம் உயர் கல்வி அமைச்சால் பல்கலைகழகக்கல்லூரியாக தரம் உயர்த்தபடவுள்ளது.அவை தவிர இளைஞர் விவகார அமைச்சின் கீழ் தொழில்நுட்ப கல்லூரிகள்,தொழில் பயிர்ச்சி நிலையங்கள், அனைத்து துறைகளுக்கும் பயிற்சிநெறிகளை வழங்குகின்றன .கல்வியல் கல்லூரிகள் (ஆரம்ப காலத்தில் இருந்து இத்துறையில் தமிழர்கள் வெளியிடு அதிகம்)இவை அனைத்தும் இலவச கல்வி அடிப்படையில் தான் இடம்பெறுகின்றன அது மட்டும் அல்லாது பல்கலைகழக,மற்றும் உயர் தொழில் நுட்ப மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க படுகிறது. தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து படி கிடைக்கிறது.
இதை தவிர வெளிநாட்டு பல்கலைகழகங்கள், கல்லூரிகள் இலங்கையில் நிறுவப்பட்டுள்ளன!
இலங்கை கல்வி துறையில் ஒரு திட்டமிடபட்ட வளர்ச்சியை அடைந்து கொண்டுஉள்ளது(இது நமக்கும்தான்). “இதுதான் தற்போதைய நிதர்சனம்”.
இவைகளை நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால் நமது மாணவர்கள் உயர் தரத்தை சித்தி அடைந்து விட்டார்கள் (ஆககக் குறைந்தது சாதாரண சித்தி) என்றால் அவர்களுக்கு எதாவது ஒரு உயர் கல்வி வாய்ப்பு நிச்சயம் உள்ளது.
அதற்க்கு சிறு தள்ளுதலையாவது நாம் மேற்கொள்ள வேண்டும். யுத்தத்தால் பாதிக்க பட்ட மாணவர்கக்கு ஒரு அழிப்பான் கொடுப்பது கூட உதவியாக இருக்கும்.
யதார்த்தத்தை புரிந்து நமது மாணவர்களின் கல்வியை உயர்த்துவது நம் கடமை! உதவுவதற்கு வழிகள் அதிகம் உள்ளன!
சமுகவலைதளங்களில் நாடு! மக்கள்! என்று முழங்கும் நீங்கள் நம் இன மாணவர்களுக்கு எதாவது செய்யுங்கள்! 

No comments:

Post a Comment