Tuesday, March 5, 2019

சோமஸ்கந்தர்

கோணேசர் கோவில் பழைய சிலையில் வரலாற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு விமர்சனம் இருந்தது.. காரணம் தொன்னாடுடைய சிவனை வடநாட்டு சிவன் ஆக்கி வைத்து இருந்தார்கள். பொன்னார் மேனியன்   சிவனுக்கு கழுத்தில மட்டும்தானே நஞ்சு நாம்  உடம்பு முழுவதும்   பரவ விட்டு இருந்தோம்
#இப்போது
#சோமாஸ்கந்த_மூர்த்தி  கி.பி 7 மற்றும் கி.பி 8-ம் நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில் சைவம் (சிவம்), சாக்தம் (உமை), கௌமாரம் (முருகன் ) ஆகிய மூன்று வழிபாடுகளையும் ஒருங்கிணைத்துப் பல்லவர் காலத்தில் பிரபலமான வடிவம் இது...

சோமாஸ்கந்தர் வடிவம் பல்லவர் காலத்தில், குறிப்பாக ராசசிம்ம பல்லவன் (நரசிம்மவர்மன் II) காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில்தாம் புகழ் பெற்றதாக விளங்கத் தொடங்கியது. ராசசிம்மன் கட்டிய அனைத்துக் கோயில்களின் கருவறையிலும் சிவலிங்கத்துப் பின்புறச் சுவரில் சோமாஸ்கந்தர் உருவத்தைச் செதுக்கிய பிறகே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.
பல்லவர்களுக்கு பிறகு சோழர்கள் தொடர்தனர்

கிறிஸ்துவுக்கு பின் 7 நூற்றாண்டுகளில் பல்லவர்களின் ஈழத்து செல்வாக்கு அதுவும் திருகோணமலை செல்வாக்கு அதிகம்  தபசு பல்லக்கன் ஆகிய பல்லவ நாட்டு வியாபாரிகள் திரியாயில் வணக்க தலம் கட்டியதாக இன்னும் திரியாயில் கல்வெட்டு உண்டு.

Tuesday, August 8, 2017

திருகோணமலை வேல் வழிபாடு

கி மு 3 நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய மகாசேனன் கோகர்ணம்(திருகோணமலை) ,எரகாவில்லை(ஏறாவூர்),மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பூசாரி கலந்தனின் ஊர் ஆகிய வற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக மாகவம்சம் கூறுகிறது. மகாசெனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்களில்தான் இருந்திருக்கின்றன.
இதில் முக்கியமான விடயம் என்னவேனில் பலமான தென்னிந்திய தொடர்பை திருகோணமலை கொண்டிருந்திருக்கிறது . என் என்றால் இலங்கையில் லிங்க வழிபாடு என்பது ஆதார ரீதியாக இலங்கை ஆதிக்குடிகளிடம் இருக்க வில்லை.கந்த, வேல் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட முருக வழிபாடுதான் இவர்களிடம் இருந்தது.அப்படி காணப்பட்ட திருகோணமலையில் வணிகர்களில் வருகை மூலமே லிங்க வழிபாடு அறிமுகப்படுத்த பட்டிருக்க வேண்டும்.(இது மகா வம்ச புனைவை அடிப்படையாக கொண்டது)

இடலி வன்னியன்

1612 ல் கொட்டியாரப் (மூதூர்)பகுதியை இடலி எனும் வன்னியன் ஒருவனே ஆண்டு இருக்கிறான்... இவனுக்கும் கண்டி மன்னனுடன் நல்ல உறவுடன் இருந்து இருக்கிறது. இங்கு ஒரு கோட்டையும் அமைக்கப்பட்டு கடல் வணிகம் முகாமை செய்யப்பட்டு இருக்கிறது...இங்கு வரும் 20 - 30 கப்பல்களின் வருமானம் கொட்டியாரபுரப் பற்று வன்னிமையையும் கண்டி அரசும் பகிர்ந்து இருக்கின்றன. 
ஆதாரம்- ceylon gazetter 1833 by simon casie chitty,modliar - page no 79-81

திருகோணமலையின் முதல் பதிவு செய்யப்பட்ட தற்கொலை


“(Lovers leap என்டு வெளிநாட்டு காரன் சொல்ல காரணமாக இருந்ததும் இந்த தற்கொலை தான்)

காலம் -1680 இறுதிப்பகுதி 
தற்கொலை பண்ணினவ பெயர் - ப்ரன்சினா வான் ரீட் (கொலன்ட் காரி,தந்தை ஒல்லாந்த உயர் அதிகாரி,)

காரணம் - ஒரு சாதாரண ஒல்லாந்து ராணுவ அதிகாரிய காதலிச்சு இருக்கா... அவள்ள அப்பாவிடம் பேசி திருமண திகதியும் குறிக்கபட்டது. ஆனாலும் அவன் விருப்பம் அவள் மீது அல்ல அவளது தந்தை பதவி மீது.அதற்காக சீதனமாக அந்த பதவியை கேட்க்க முயன்றான் கடைசில் அவனுக்கு இருந்த ராணுவ அதிகாரி பதவியும் போயிற்று. கொவமடைந்த ரீட்டாவின் தந்தை அவனுக்கு அவன் பதவியை நீக்கி ஒல்லாந்து செல்ல கட்டளை இட்டார்.

அவன் போக இவ கோணேசர் கோயில் மலையில இருந்து கடல்ல பாய்ஞ்சு செத்திட்டா

இந்த சம்பவங்கள் லேப்.கேணல் .தோமஸ்(பிரித்தானிய ராணுவம்) அவர்களால் 1940 ஆண்டு கண்டு எடுக்கபட்ட ஒல்லாந்த குறிப்புகள் அடிப்படியாக கொண்டது .

32 தமிழ் அரசர்கள் எங்கே ?

துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் ஆரசுகளை வென்றதாக கூறுகிறது.அப்படியானால் எல்லாளன் காலப்பகுதியில் இலங்கை தீவு தமிழ் அரசர்கள் கையில்தானே இருந்து இருக்க வேண்டும்